உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, May 24, 2013

விகடனின் கள்ளத்தனம் இணையத்தில் அம்பலம்விகடனின் கள்ளத்தனம்  இணையத்தில் அம்பலம் 


ஆளும் கட்சிக்கு ஆதரவாக கட்சிகளிடையே குழப்பம் மூட்டுகிறதா விகடன் என்பது பற்றிய பதிவு இது.

நாடளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கிறது. தனியாக 40 தொகுதிகளிலும் போட்டி இடுவேன் என்று சொன்ன தைரிய லட்சுமிக்கோ தனியாக போட்டி இட்டால் அதிக இடங்களில் வெற்றி பெறமாட்டோம் என்ற பயம் வந்துவிட்டது. அவரின் 2 ஆண்டு ஆட்சி காலத்தில் மக்கள் விரும்பும் படி ஒரே ஒரு திட்டத்தைதான் அறிவித்து இருக்கிறார் அதுதான் அம்மா உணவகம் .அதை தவிர அவர் செய்த சாதனைகள் ஏதுவுமே இல்லை என்பதுதான்.


போன தேர்தலில் அவர் கூட இருந்த விஜயகாந்தும் அவர் கூட இல்லை. அவர்கூட இருப்பதெல்லாம் கட்சி உறுப்பினர்கள் அதிகம் இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே.. இப்படிபட்ட நேரத்தில் ராம்தாஸ் அய்யா அவர்களையும் தன் கட்சியில் சேர்த்து இருக்கலாம் என்று நினைத்து இருக்க கூடும். ஆனால் ராம்தாஸ் அய்யா போட்ட ஆட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததால் வன்னியர்களின் ஒட்டு அவருக்கு வேட்டாக போய்விட்டது.

இந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் ராம்தாஸ் அவர்களின் வயதை மனதில் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னதை மனதில் கொண்டு ஜெயா ஆதரவு பத்திரிக்கைகள் அவருக்கு ஆதரவாக கலகத்தை ஆரம்பித்து விட்டன. அதன்படி கலைஞர் ராம்தாஸ் அவர்களுடன் கூட்டு வைக்க நினைப்பதாக செய்திகளை கசிய ஆரம்பித்துவிட்டன. அது மட்டுமல்லாமல் அப்படி செய்வதால் கலைஞரின் வளர்ப்புமகன் போல செயல்பட்டு கொண்டிருக்கும் திருமாவளவனை வெளியில் கொண்டு வந்து ஆளும்கட்சியோட சேர்த்துவிடலாம் என்று திட்டம் போட்டு காயை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை ஊதி பெரிசுபடுத்துவதால் திருமாவளவன் அவருக்கும் ராமதாஸ் அய்யா அவர்களுக்கிடையே சமாதானம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணம். காரணம் மாமன் மைச்சான் போல சண்டைப் போட்டு கொண்டாலும் அவர்களின் வீட்டில் விஷேசம்(தேர்தல்) என்று வந்துவிட்டால் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்ற பயம். அதனால் இந்த செய்திகளை ஊடகங்கள் மூலம்  வெளியிட்டு ஒரு வேளை இந்த இருவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அந்த இனத்தவர்களின் மனதில் அவர்களின் தலைவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை ஊன்றிவிடுவதன் மூலம் அவர்களின் வாக்கையாவது பெறலாம் என்பதுதான்

இன்னும் புரியாதவர்கள் கடந்த வார ஜுவியின் அட்டை படத்தையும் இந்த வார அட்டைபட செய்திகளையும் படித்தாலே புரிந்து கொள்வார்கள்.


இதெல்லாம் தமிழகத்தில் நடக்கும் செய்திகளை படிக்கும் போது என் மனதில் தோன்றியதுதானுங்க..


இதைப் படித்ததும் உங்க மனதில் தோன்றியதை நாகரிகமாக இங்கு பதியலாமே

அன்புடன்
மதுரைத்தமிழன்


ராமதாஸ் அவர்களுடன் ஒரு மினி பேட்டி (2014)

ராம்தாஸ் அவர்கள் எந்த கட்சியுடன் சேர்ந்து போட்டியிடமாட்டேன் என்று அறிவிப்பார் ஆனால் வேதாளம் முருங்கைமரம் ஏறின கதையாய் அவரும் ஏதாவது கட்சியுடன் சேர்ந்து போட்டி இடுவார். அப்படி பட்ட நிலையில் அவருடன் ஒரு மினி பேட்டி.

மதுரைத்தமிழன். அய்யா எந்த திராவிடக் கட்சியுடன் சேரந்து போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தீர்களே ஆனால் இப்பொழுது ?

கேள்வியை இடை மறித்த அவர் மதுரைத்தமிழா நான் திராவிடக் கட்சியுடன் சேரந்து போட்டியிட மாட்டேன் என்று சொன்னதில்லை நான் சொன்னது இந்த திராவிடகழகத்துடந்தான் என்று சொன்னேன் ஆனால் இந்த ஊடங்கங்கள்தான் அதை திரித்து வெளியிட்டு இருக்கிறது.ஏன் இவர்களுடன் சேர்ந்தீர்கள் என்று கேள்வி கேட்டால்?அவர் சொல்லும் பதில் :ஒரு வேளை அவர் காங்கிரஸுடன் சேர்ந்தால் அவர் சொல்லும் காரணம் இப்படிதான் இருக்கும் நான் சொன்னது போல திராவிடக் கட்சியுடன் சேரந்து போட்டியிட மாட்டேன் நான் சொன்னதை அப்படியே கடைப்பிடிப்பேன் அதன் காரணமாகதான் காங்கிரஸுடன் இணைந்து போட்டி இடுகிறேன்.ஒரு வேளை அவர் அதிமுகவுடன் சேர்ந்தால் சகோதரனும் சகோதரியும் அடிச்சுகுவோம் பிடிச்சுகுவோம் அதில் என்ன தப்புஒரு வேளை அவர் திமுகவுடன் சேர்ந்தால் அண்ணனும் தம்பியும் அடிச்சுகுவோம் பிடிச்சுகுவோம் அதில் என்ன தப்புஒரு வேளை அவர் விசியுடன் சேர்ந்தால் மாமனும் மைச்சானும் அடிச்சுகுவோம் பிடிச்சுகுவோம் அதில் என்ன தப்பு


அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments :

 1. நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதுற்கு வாய்ப்புகள் உண்டு

  ReplyDelete
 2. இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா!! என்ற கவுண்டரின் வசனம்தான் நியாபகம் வருகிறது.

  ReplyDelete
 3. புத்தகம் விக்க பரபரப்பா ஏதாவது விஷயம் வேணுமே!

  ReplyDelete
 4. அரசியலில் பத்திரிக்கையும் விளையாடத்தான் செய்யும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog