Thursday, May 16, 2013






நம்பினால் நம்புங்கள் இந்தியாவிலோ அல்லது தமிழகத்திலோ  இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை?


காவல் துறை : பொதுமக்களை அல்ல களவானிப் பயல்களை பாதுகாக்கும் துறை ( தமிழக காவல்துறை அல்ல...அப்பாடி இவர்கள் பேஸ்புக்கிலும் வருகிறார்களாமே? )

சட்டத்துறை : சட்டத்தை தலைவர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்க உதவும் துறை

நீதித்துறை :  சட்டத்தில் இருக்கும் ஒட்டைகளை கண்டுபிடித்து அதன் மூலம் குற்றவாளிகளை தப்பிக்க உதவும் துறை

லஞ்ச ஒழிப்பு துறை : லஞ்சம் வாங்குபவர்களிடம் இருந்து கைக்கூலி வாங்கும் துறை

மின்சாரத்துறை : 24 மணி நேரமும் வந்த மின்சாரத்தை கட்பண்ணி  நாட்டை இருட்டுக்கு கொண்டு செல்ல உதவும் துறை.

வருமானவரித்துறை : அரசாங்கத்தின் வருமானத்தை அல்ல தங்களின் வருமானத்தையும் தங்களுக்கு வேண்டியவர்களின் வருமானத்தையும் பெருக்கும் துறை

விற்பனை வரித்துறை : விற்பனை வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களிடம் இருந்து கறந்து தங்களது சேமிப்பு கணக்கில் போட்டு வைத்து கொள்ளும் துறை

நீர்வளத்துறை : நீர்வளத்தை பெருக்க அல்ல நீரை பக்கத்து மாநிலங்களில் இருந்து கெஞ்சி கேட்கும் துறை.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை : முற்படுத்தப்பட்டோரால் பிற்படுத்தப்பட்டோரை கண்ட்ரோலில் வைத்திருக்கும் துறை

வீட்டுவசதித்துறை : அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது அடிபிடிகளுக்கோ வீடு அற்று இருந்தால் அரசாங்க செலவில் வீடு கட்டித் தரும் துறை.

சுற்றுலாத்துறை : அரசாங்க செலவில் அரசுத்துறைகளில் பெரிய பதவிகளை வகிப்போருக்கு இலவசமாக பல இடங்களில் சுற்றுலா இலவசமாக சென்று வர பல வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்து தரும் துறை.

சுகாதரத்துறை : அரசியல் தலைவர்கள் வசிக்கும் இடங்களை மிக தூய்மையாகவும் சுகாதாரத்துடனும் வைத்து கொள்ளும் துறை

இங்கே நான் குறிப்பிட்டு இருக்கும் துறை எல்லாம் இந்தியாவிலோ அல்லது தமிழகத்திலோ உள்ள துறை அல்ல. ஒரு வேளை நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பு ஏற்காதுங்கோ

இப்படி எல்லாம்  நடக்கும் இடம் ஆப்பிரிக்கா நாடு ஹீஹீஹீ  நம்பினால் நம்புங்ககோ இல்லை ஆளை விடுங்கோப்பா

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. நம்பிட்டோம்

    ReplyDelete
  2. தமிழகமும் ஆப்பிரிக்காவில் இருக்கிறதோ?
    எப்படியோ நாம் மட்டும் தனியாக இல்லை, இன்னும் பல நாடுகள் இருக்கின்றன என்று சந்தோஷப்படலாமா?

    ReplyDelete
  3. நம்பிட்டேனுங்கோ.......

    ReplyDelete
  4. ( ஆப்பிரிக்க ) சைபர்கிரைமில் இருந்து தப்பிக்க ஆப்பிரிக்கா எனப் போட்டுக் கொள்ளலாம். ஹிஹி ! :P

    ReplyDelete
  5. நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் 'சரி'தாங்கோ...!

    ReplyDelete
  6. உலகத்திற்கே வழிகாட்டி நம் நாடுதானே!, எல்லா விதத்திலும்!!

    ReplyDelete
  7. ஒவ்வொரு துறைக்குமான விளக்கம் அசத்தலாக இருக்கிறது... :-) :-)

    //* இப்படி எல்லாம் நடக்கும் நாடு ஆப்பிரிக்கா நாடு ஹீஹீஹீ.. *//
    66A எப்படியெல்லாம் வேலை செய்யுது..!!! :-) :-)

    ReplyDelete
  8. நம்பாம எப்படி?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.