Thursday, May 23, 2013







இன்னும் ஒரு சில வாரங்களில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர  மாநிலங்களை அலறவைக்கப் போகும் சக்கேடா


சக்கேடா என்பது நாடோ அல்லது ஏதோ ஒரு இனத்தையோ  அல்லது விலங்கினத்தையோ குறிப்பிடுவதல்ல அது ஒரு வகையான பூச்சி. இந்த பூச்சி இனம் மண்ணிற்குள் வாழும். இந்த சக்கேடா (CICADA) பூச்சி 17 வருடங்களுக்கு ஒரு முறை மண்ணைவிட்டு இனப் பெருக்கத்திற்காக வெளியே வரும் தன்மை உடையவை . இது 2 வாரத்தில் இருந்து 4 வாரம் வரை பூமி வெளியில் வாழும். இந்த நேரம்தான் அந்த பூச்சிகள் உறவு கொள்ளும் நேரம் . அதன் பிறகு மண்ணில் முட்டையை இட்டுவிட்டு ஆண் பெண் இன பூச்சிகள் அநேகமாக மடிந்துவிடும் பறவைகளிடம் இருந்து தப்பித்த முட்டைகள்  மண்ணிற்குள் புகுந்து தனது இனத்தை பெருக்கி அடுத்த  17 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும். ஏதோ நூற்றுக் கணக்கில் வெளிவரும் என்று நினைத்து விட்டாதீர்கள். ஒரு சதுர மைலுக்கு பில்லியன் பூச்சிகள் வரும் அது மட்டுமல்ல அதனால் வரும் சத்தங்கள் 90 டெசிபல் ஆகும். இதில் ஆண் சக்கேடா மட்டும் மனைவிமார்கள்  போல சவுண்டை கொடுக்கும். பெண் சக்கேடா  கணவர்களை போல அடங்கி ஒடுங்கி சத்தம் போடாமல் இருக்கும் பறவை இனத்திற்கு சக்கேடா வரும் நேரம் மிக வரப் பிரசாத நேரம் ஆகும். காரணம் இந்த சக்கேடா பூச்சியில் அதிக அளவு புரோட்டின் இருப்பதே. இதையும் உண்ணும் மனிதர்களும் இருக்கிறார்கள். இதை அவர்கள் நில ஸிரிம்ஃப் (Land shrimp )எனறு அழைப்பார்கள். இந்த சக்கேடாவால் மனித இனத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. & கடிக்கவும் செய்யாது.




 இங்கு வந்துள்ள இந்தியர்களுக்கு இது முதல் அனுபவம் ஆகும். காரணம் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் இந்தியர்களின் வருகை மிக அதிகம். இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை . அந்த அனுபவத்தை சக்கேடா வரும் சமயத்தில் எழுதுகிறேன்.


இங்கு நீண்ட காலமாக வசிக்கும் என் கூட வேலைப் பார்க்கும் அமெரிக்கர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்னது இதுதான். சக்கேடா இடும் சத்தம்தான் மிக எரிச்சலை தரும் என்றும் நாம் வெளியே நடக்கும் போது நமது ஷூக்களிடையே வந்து மாட்டிக் சாகும் அதை நாம் மிதிக்கும் போது நாம் மொறு மொறு பிஸ்கட்டை கடித்து சாப்பிடும் போது ஏற்படும் க்ரஞ்சு என்ற சத்தமும் அதிகமாக இருக்கும்,

சிறு பூச்சிகளையே கண்டு பயப்படும் மற்றும் அதை அடித்தால் பாவம் என்று நினைத்து என்னை அடிக்க சொல்லும் தைரியசாலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று மிகவும் யோசனையாக இருக்கிறது. இந்த பூச்சிகள் இல்லாத மாநிலத்திற்கு சில வாரம் செல்லாம் என்ற யோசனைகளும் இருக்கின்றன. குழந்தைக்கோ ஸ்கூல் ஜூன் முன்றாவது வாரத்தில் இருந்து தான் கோடை விடுமுறை ஆரம்பிக்கிறது பலதும் யோசிக்க வேண்டிருக்கிறது.இதில் இருந்து தப்பிக்க இந்த மதுரைத்தமிழனுக்கு தோன்றிய ஐடியா வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும்  அரபுநாட்டு பெண்களைப் போல பர்தா அணிந்து கொள்ளச் செய்வதுதான். இது அதிக செலவில்லாத யோசனையாக இருக்கிறது

பார்ப்போம் என்ன நடக்க போவது என்று அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மதுரைத்தமிழன்

அன்புடன்
மதுரைத்தமிழன்








 டிஸ்கி : சக்கேடா பற்றி தமிழில் சற்று விபரமாக  முதன் முதலில் வரும் இணைய செய்தி பதிவு இதுதான். இதற்கு முன் ஒருவர் (ஜான் பீட்டர் பெனடிக்ட் ) எழுதிய தமிழ் கவிதையில் சக்கேடா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் அவர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியில் சக்கேடா பற்றி இப்படி எழுதி இருக்கிறார்.


உன் வருகை


பன்னிரெண்டு ஆண்டுக்கொருமுறை
பூக்கும் குறிஞ்சி மலர்
உன் வருகை அறிந்து
உடனடியாய் பூத்து குலுங்குகிறது


பதினேழு ஆண்டுக்கொருமுறை மட்டுமே
மண்ணைவிட்டு வெளிவரும்
வட அமெரிக்காவின்
சக்கேட்டா வண்டினமோ
உன் வருகை அறிந்து
உடன் எழுந்து வந்து
உன் வழியெங்கும் ரீங்காரமிடுகிறது

Courtesy :ஜான் பீட்டர் பெனடிக்ட்



டிஸ்கி 2: அமெரிக்கா நாடு பலருக்கு கனவுலகமாக இருக்கிறது. ஆனால் இங்கு நடப்பவைகளை பார்த்தால் சில சமயங்களில் பயமகாகவும் வியப்பாகவும் இருக்கும் அதைப்பற்றி  பதிவுகள் விரைவில் வரும்

2 comments:

  1. I don't think we would have this problem in California; அப்படி இருந்தாலும் என்னால் சமாளிக்க முடியும்; ஏன்னென்றால், நான் திருமணவானவன்...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.