Sunday, May 19, 2013



 
வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு சிறந்த பாலிசி?


வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு மிகச்  சிறந்த பாலிசி கொடுத்தல் & வாங்குதல் ( give and take ) ஆகும். இந்த பாலிசி படி கணவன் தன் மனைவியிடம் சம்பள பணத்தையும் பரிசு பொருட்களையும் மாதம் தவறாமல் கொடுக்க வேண்டும். அதை மனைவி மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது போல மனைவி திருப்பி தரும் அறிவுரை மற்றும் மன அழுத்தத்தையும் கணவன் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் திருமண வாழ்க்கை மிக வெற்றிகரமாக இருக்கும். என்ன மக்களே இந்த அறிவுரையை ஏற்று நடப்பீர்களா?


டேய் மதுர உங்க வீட்டுல நீ எப்படி என்று கேட்பது என் காதில் விழுகிறது.

எங்க வீட்டில் நான் தான் பாஸ் ஆனா முடிவு எடுக்கிறது எல்லாம் என் மனைவிதாங்க அதனால எங்க திருமண வாழ்க்கை வெற்றிகரமாக போய்கிட்டு இருக்கிறது. அவ்வளவுதாங்க

அப்புறம் ஒன்று சொல்ல நான் மறந்துட்டேங்க! என் குழந்தை என் கையை பிடிக்காமல் தனியாக நடந்து செல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டாள் ஆனால் என் மனைவி மட்டும் என் கையை பிடித்து இன்னும் நடந்து செல்லுகிறாள். அவங்க( என் மனைவி) பெற்றோர்கள் குழந்தையை வளர்த்த லட்சணத்தை பார்த்தீங்களா மக்களே.. என்ன கொடுமைடா


ஏலேய் மதுர உனக்கு இன்று பூரிக்கட்டையில் பூஜை நிச்சயம் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அதுக்கெல்லாம் நான் பயப்படுகிறவனா நான். அடிவாங்கியே பழகிப்போனவன் நான் ஹீ,ஹீ.ஹீ
அப்ப நான் வரட்டுமா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. அடிக்குப் பயம் போச்சுன்னாலேயே
    இல்வாழ்க்கைப் பரிட்சையிலேயே
    பாஸ்தானே,அருமையான பாலிஸிப் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அடி வாங்கியே பழகி போன உங்களுக்கு திருமணமான பெண்கள் சார்பாக பாராட்டு விழாவும் பரிசும் நிச்சயம்..!
    உங்க மனைவியாவது கை கோர்த்து கொண்டுதான் வருகிறார் பரவாயில்லை. ஆனால் டூ வீலர்ல புருஷன் பின்னாடி உட்கார்ந்துட்டு வர்ற நிறைய பெண்களை பார்க்கிறேன் அவங்க கை கழுத்தை சுத்திக்கறதும், சீட்டுக்கு பெல்ட் போடற மாதிரி முன்னாடி உட்கார்ந்திருக்கறவர் வயிற்றை(தொப்பையை..?) சுத்திக்கறதும்... ஹா.,,ஹா செம காமெடியா இருக்கும்.. பாவம் அந்த அப்பாவி கணவர்கள் விதியேன்னு அரிசி மூட்டை சாய்ச்சிகிட்டு போற மாதிரி இருக்கும்... ( நான் இல்லப்பா..)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.