தாழ்ந்தது தமிழ்ப் பண்பு', - எழுத்தாளர் வாஸந்தி:- |
||
![]() |
||
தாழ்ந்தது
தமிழ்ப் பண்பு', - எழுத்தாளர்
வாஸந்தி:-
" தமிழகத்து
திராவிடக் கட்சி
அரசியல்வாதிகள்போல்
தன்னம்பிக்கையற்றவர்கள்
யாரும் இல்லை என்று நான்
நினைக்கிறேன். தன்னம்பிக்கை
இல்லாததாலேயே பத்திரிகைத்
துறையின் ஜனநாயக
உரிமையிலும் நம்பிக்கை
இல்லை.
ஒரு
பத்திரிகையாளர் ஏதாவது
விமர்சனம் செய்துவிட்டால்
எந்த அரசியல் தலைவருக்கும்
அதைத் தாங்கும் சகிப்புத்
தன்மை இருப்பதில்லை. அதில்
முக்கியமாக கருணாநிதி,
ஜெயலலிதா, ராமதாஸ்
மற்றும் திருமாவளவன்
ஆகியோரை விமர்சித்து உங்கள்
தரப்பு எண்ணங்களைச்
சொல்லிவிட்டீர்களானால்
உண்டு இல்லை என்று செய்து
விடுவார்கள். அவரவர்களுக்குப்
பத்திரிகைகள் இருப்பது
அவர்களுக்கு சௌகர்யம்.
அவற்றை அதிகம் பேர்
படித்திருக்க மாட்டார்கள்
என்ற நினைப்பிலோ என்னவோ
மேடையிலும் பகிரங்கமாக
அச்சுறுத்துவது அல்லது
கேவலமாக திட்டுவது என்பது
தமிழ் நாட்டில் மட்டுமே
நடக்கும் அவலம்.
மிக ஆச்சரியமாக
வைகோ மட்டுமே இதில்
விதிவிலக்கு - இத்தனைக்கும்
அவரைத்தான், (அவரது
கொள்கைகளை) நான்
அதிகமாக
விமர்சித்திருக்கிறேன் -
தனது 'சங்கொலி'
ஏடுகளில்கூட என்னை
பதிலுக்கு
விமர்சித்ததில்லை. வெகு
நாகரீகமாக நடந்து
கொள்கிறார்.
ஜெயலலிதா
நேரடியாக வக்கீல் நோட்டீஸ்
அனுப்புவதில் சளைக்காதவர்.
கருணாநிதி யாரையாவது
விட்டு முரசொலியில்
கன்னாபின்னாவென்று திட்டி
எழுதவைப்பார். பத்திரிகை
ஆசிரியர் அரசுக்கு/ அரசியல்
பெருந்தலைகளுக்கு ஜால்ரா
அடிப்பவராக இருந்தால்,
நமக்கேன் வம்பு என்று
ஒதுங்குபவராக இருந்தால்,
கட்டுரை எழுதியவரின்
வேலைக்கு ஆபத்து வரலாம்.
பிள்ளை குட்டி
உள்ள முதுகெலும்பில்லாத
பத்திரிகையாளர் என்ன
செய்யமுடியும்?, (ஆணாக
இருந்தால்) வயக்காட்டைப்
பார்க்கக் கிராமத்துக்குக்
கிளம்பவேண்டும்; (பெண்ணாக
இருந்தால்) குடும்பமே
சுகம் என்று சமையல்
கட்டிற்குத்
திரும்பவேண்டும்.
நீங்கள் என்னைப்
போல் உறுதியுடன் பிடிவாதமாக
நின்றால், உங்கள்
தலைமை அகம்(எனதைப்
போல) உங்களுக்குப்
பக்கபலமாக இருந்தால்,
சகஜமான சமாதான காலத்தில் 'என்னைக்
கேட்காமெ யாரோ எழுதிட்டாங்க'
என்று கருணாநிதி
பச்சைக்கொடி காண்பிப்பார்.
ராமதாசும்
திருமாவளவனும் பகைவர்கள்
போல வெறுப்பை சுமப்பவர்கள்.
இந்த ஜென்மத்தில் என்னை
அவர்கள் சிநேகிதத்துடன்
நினைப்பார்கள் என்கிற
நம்பிக்கை இல்லாமலே எனுது
ஆயுள் முடியும் என்ற
நினைப்பு எனக்கு வேதனை
தருகிறது.
பத்திரிக்கையில்
எழுதப்படுவதால் புரட்சி
வெடிக்காது. பாசாங்குத்தன
அரசியலைக் கண்டு
பொறுக்காமல் மக்கள் புரட்சி
ஒன்று வெடிக்கலாம்
என்பதைத்தான் விமர்சனங்கள்
கோடிகாட்டுகின்றன. பொது
மக்களின் கருத்து
தெரிவிக்கபட வேண்டும்
என்னும் கரிசனத்தாலேயே
எழுதப்படுகின்றன.
அவசரக்காலகட்டத்தில்
பத்திரிகைச்
சுதந்திரத்துக்குத் தடை
விதித்ததால்தானே இந்திரா
காந்திக்கு மக்களின்
மனநிலையைப்
புரிந்துகொள்ளமுடியாமல்
போனது?
ஒரு
பத்திரிகையாளர் எழுதுவதையே
சகித்துக்கொள்ளாத அரசியல்
தலைவர்கள் தங்களது அரசியல்
எதிரிகளை எப்படி
சகித்துக்கொள்வார்கள்?
- வாஸந்தி @
நன்றி: 'தீராநதி'
-----------------------------------------------------------------------------------------------
மிக ஆச்சரியமாக
வைகோ மட்டுமே இதில்
விதிவிலக்கு.
-----------------------------------------------------------------------------------------------
Courtesy :
வைகோ அவர்களின்
பேஸ்புக் தளத்தில் இருந்து
எடுத்து பகிரப்பட்டது.
அன்புடன்
மதுரைதமிழன்
|
Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பல அரசியல் வாதிகளை விட வைகோ எவ்வளவோ மேல்தான்
ReplyDeleteவைகோ உண்மையிலேயே மேல் தான் என்ன தமிழக மக்கள் தான் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நேர்ந்த அறிவும், ஞானமும் கொண்டவர், திமுகவின் தலைவராக உருமாறிக்க வேண்டியவர். என்ன செய்ய அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டார், ஆனால் பலரின் மனதுகளை வென்றுவிட்டார்...
ReplyDeleteஎன்னவோ போங்க.. இந்த மாதிரி அரசியல்வாதிகளை பத்திரிக்கைகாரங்க பக்க பக்கமா கிழிச்சாலும் மக்கள் புறக்கணிச்சாதான் மாற்றம் வரும்.
ReplyDeleteஅப்படியானால் வைகோ தமிழர் இல்லையா?
ReplyDeleteவை.கோ முக்கியமான தருணங்களில் சறுக்குவது அவரது பலவீனம்.உதாரணமாக முன்பு பொடாவில் ஜெ போட்டபின்பும் போய் ஒட்டிக்கொண்டது.இப்பொழுது கூடன்குளம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பலரின் நலன் கருதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.அப்படியிருந்த போதும் நேற்று கூடன்குளம் அணு உலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார். தேவை என்னவென்றால் போராட்டக்காரர்களின் அச்சத்தை போக்கும் வண்ணம் கட்டமைப்பு வசதிகள்,அபாயங்கள் இல்லாத உத்தரவாதம் மட்டுமே.இந்தியா முழுவதும் மின் தடை இருந்தாலும் தமிழகத்தின் நிலை படுமோசம் என்பதை மனதில் கொள்வோம்.
ReplyDeleteGood article...
ReplyDelete