Monday, May 20, 2013

இந்துக்களின் கோவிலை மாற்றி அமைத்து கட்டபட்டதா தாஜ்மஹால்?

இந்த பதிவு எந்த ஜாதி மத இனத்தை காயப்படுத்த வெளியிடப்பட்டது அல்ல.

எனக்கு தெரிந்த அளவில் இந்துக்களின் கோவிலை கோவிலை மாற்றி அமைத்து  கட்டபட்டதா தாஜ்மஹால் என்ற விவாதம் நெட்டிலே கடந்த 4 வருடமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதை பற்றிய பதிவுதான் இது.

ஒக் என்பவர் வெளியிட்ட தாஜ்மஹால் பற்றிய புத்தகத்தில்  இந்துக்களின் கோவிலை  இடித்து மாற்றி கட்டபட்டதுதான் தாஜ்மகால்  என்று சொல்லி அதற்கான பல ஆதாரங்களை பட விளக்கத்துடன் சொல்லி இருக்கிறார். இதை பற்றிய முழு விபரங்கள்  Stephen Knapp என்பவரின் வலைதளத்தில் கிடைக்கின்றன.

தாஜ் மஹால் பற்றிய உண்மையான செய்திகளை மறைத்து இந்த உலகம் ஏமாற்றப்பட்டிருக்கிறது தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று பேராசிரியர் புருஷோத்தம் நாகேஷ் ஓக் (P.N. Oak) குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்று சொல்லுகிறார்.



புருஷோத்தம் நாகேஷ் ஓக் (P.N. Oak) என்ற இந்திய எழுத்தாளர். இவர் தன்னுடைய தாஜ் மஹால் உண்மை கதை’ என்ற புத்தகத்தில் தாஜ் மஹாலைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து இருப்பதைப் படிக்கப் படிக்க அதிர்ச்சி, வியப்பு; எது உண்மை, எது பொய் என்ற குழப்பம். உண்மை என்று நினைப்பது பொய்யாகிவிடுமோ அல்லது பொய் என்று நினைப்பது உண்மையாகி விடுமோ என்ற குழப்பம் நமக்கு தோன்றுகிறது!

புருஷோத்தம் நாகேஷ் ஓக் (P.N. Oak) பல  விதமான விவாதங்களை நம் முன் வைக்கிறார் அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்

1. தேஜோ மஹாலயா என்ற சிவன் கோவிலை  ஜெய்பூர் மகாராஜாவிடமிருந்து கைப்பற்றி  அதனை தாஜ் மஹால் என்று பெயரிட்டுவிட்டார் ஷாஜஹான். இதற்கு ஆதாரமாக ஆக்ராவில் இருக்கும் ஜாட் மக்கள் தேஜா என்று பெயர் வைத்துக்கொள்ளுவதை சுட்டிக் காட்டுகிறார் திரு.ஓக். 12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றான தேஜோ லிங்கம் ஜாட் மக்களின் தெய்வம்.

2. தாஜ் மஹால் என்ற சொல் மொகலாயர்கள் காலத்திய ஏடுகளிலோ, அரசவைக் குறிப்புக்களிலோ இல்லை என்பது அடுத்த வாதம்.

3.  பேராசிரியர் ஓக் தன் விசாரணையை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்..ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு  கதை என்கிறார்.

4.  உலகிலுள்ள எந்த இஸ்லாமிய  நாடுகளிலும் மஹால் என்ற பெயரில்  ஒரு கட்டிடம் கூடக் கிடையாது.

5. இறந்தவர்களைப் புதைத்த இடத்திற்கு மஹால் என்று பெயரிடுவார்களா?

6.  தாஜ் மஹாலின் குவிந்த மேல் கூரையின் மீது ஒரு திரிசூலம் காணப்படுகிறது. அதன் நடுத் தண்டு மாவிலைகளும், தேங்காயும் தாங்கிய ஒரு கலசம் போலக்  காட்சி அளிக்கிறது.

7.  இந்துக்களின் கோவில்கள்தான் நதிக்கரையில் அமைக்கப்படும். ஹிந்து கோவில்களில் காணப்படும் சதுர்முகி என்ற நான்கு வாயில் அமைப்பே தாஜ் மஹாலிலும் காணப்படுகிறது. நுழைவாயில் தெற்கு நோக்கி இருக்கிறது. இஸ்லாமிய கட்டிடமாக இருந்தால் மேற்கு பக்கத்தில் நுழை வாயில் அமைந்திருக்கும்.

8 தாஜ் மஹாலைச்சுற்றியுள்ள பல நிலவரைகளின் கதவுகள்   செங்கல், சிமென்ட் ஆகியவற்றால் மூடப் பட்டிருக்கின்றன. அப்படி மூடப்பட்ட ஒரு அறையில் இருந்த சிறிய இடைவெளி மூலம் பார்த்தபோது அங்கு பலவிதமான சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய தூண்கள்  நிறைந்த ஹால் இருப்பதை கண்டதாகச்  சொல்லுகிறார் ஒரு டெல்லி நகர வாசி. இதையும் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் திரு. ஓக்.

9.   மும்தாஜின் சமாதிக்கு கீழே 22 அறைகள் கொண்ட ஒரு ரகசிய தளம் இருப்பதாகவும் அதற்கு போகும் வழியை மூடி இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த தளங்களில் ஹிந்து மத கல்வெட்டுக்கள், மற்றும் சிற்பங்கள்  இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

10.   இந்துக்களின் கோவில்களைக் கைப்பற்றி அதையெல்லாம் தங்களுடைய சமாதிகளாக மாற்றிக் கொண்ட அரசர்களை பெரிய கட்டிடக் கலை வல்லுனர்களாகச் சித்தரித்து இந்திய சரித்திரத்தை தலை கீழாக மாற்றிவிட்டதாக ஆதங்கப் படுகிறார் திரு. ஓக்.முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.


    பொதுவாக புராதனக் கட்டிடங்களின் வயதை அறிய உதவும் ‘கார்பன் டேட்டிங்’ என்ற முறையில் தாஜ் மஹாலின் கற்களை பரிசோதித்தபோது ஷாஜஹானின் காலத்திற்கும் முந்தியவை என்று தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.

மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் - “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

அரசியல் காரணங்களால் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

திரு ஓக். முழு விவரங்கள் விரும்புவோர் திரு.ஓக் அவர்களின் இணைய தளத்திற்கு சென்று படிக்கலாம்.

தாஜ் மஹால் தன்னுள் (மும்தாஜ்ஜைத் தவிர!) எத்தனை ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறதோ?

அன்புடன்
மதுரைத்தமிழன்
PHOTOGRAPHS

Collection One
The following photographs are divided according to content and accessed through the links. Click on the photo number for access:

Taj Mahal Photo #1 Aerial view of the Taj Mahal
Taj Mahal Photo #2 The interior water well
Taj Mahal Photo #3 Frontal view of the Taj Mahal and dome
Taj Mahal Photo #4 Close up of the dome with pinnacle
Taj Mahal Photo #5 Close up of the pinnacle
Taj Mahal Photo #6 Inlaid pinnacle pattern in courtyard
Taj Mahal Photo #7 Red lotus at apex of the entrance
Taj Mahal Photo #8 Rear view of the Taj & 22 apartments
Taj Mahal Photo #9 View of sealed doors & windows in back
Taj Mahal Photo #10 Typical Vedic style corridors
Taj Mahal Photo #11 The Music House--a contradiction
Taj Mahal Photo #12 A locked room on upper floor
Taj Mahal Photo #13 A marble apartment on ground floor
Taj Mahal Photo #14 The OM in the flowers on the walls
Taj Mahal Photo #15 Staircase that leads to the lower levels
Taj Mahal Photo #16 300 foot long corridor inside apartments
Taj Mahal Photo #17 One of the 22 rooms in the secret lower level
Taj Mahal Photo #18 Interior of one of the 22 secret rooms
Taj Mahal Photo #19 Interior of another of the locked rooms
Taj Mahal Photo #20 Vedic design on ceiling of a locked room
Taj Mahal Photo #21 Huge ventilator sealed shut with bricks
Taj Mahal Photo #22 Secret walled door that leads to other rooms
Taj Mahal Photo #23 Secret bricked door that hides more evidence
Taj Mahal Photo #24 Palace in Barhanpur where Mumtaz died
Taj Mahal Photo #25 Pavilion where Mumtaz is said to be buried

Collection Two
This is an additional collection that provides a closer look at the secrets of the Taj Mahal as supplied by V. S. Godbole from England. You can look at the ones that interest you the most as described below, or go through them like a slide show by using the "Next" links on each page.
Taj Photo # 1 Typical view of the beautiful Taj Mahal
Taj Photo # 2 View of Taj Mahal from West looking East
Taj Photo # 3 Entrance Gate on the West side
Taj Photo # 4 Road between Western Gate to Eastern Gate is around 1000 ft with several rooms on either side.
Taj Photo # 5 Note the veranda. The architecture is typical Rajput design.
Taj Photo # 6 View of the entrance through the South Gate
Taj Photo # 7 South gate entrance as painted by Thomas Daniell in 1789
Taj Photo # 8 In a detail on the gate, we can see what would be called Ganesh
Taj Photo # 9 Details of the South Gate with Vedic design.
Taj Photo # 10 Wall decorations as seen here are typical Rajput design on South Gate
Taj Photo # 11 The graffiti, i.e. Koranic inscriptions later added by Shahjahan
Taj Photo # 12 The Trident designed within the lotus, both typically Vedic designs.
Taj Photo # 13 Veranda on the West side of Entrance Gate, probably for public assemblies.
Taj Photo # 14 Examples of the Dhotra flowers in the marble work
Taj Photo # 15 Now you can see the "3" figure of the OM design within the carved marble flower
Taj Photo # 16 Here is an example of the conch shell design in the central petals in the flowers
Taj Photo # 17 More conch shell decorations in marble carving
Taj Photo # 18 Carved marble doors and decorations on the exterior of the Taj Mahal
Taj Photo # 19 You can see blocked doorways and windows where there are several rooms in the 19 foot high plinth.
Taj Photo # 20 Decoration on the side of blocked up doorway
Taj Photo # 21 A view of the outside of the central Cenotaph Chamber
Taj Photo # 22 The interior of one of the rooms around the cenotaph chamber.
Taj Photo # 23 The Cenotaph chamber with marble screen
Taj Photo # 24 The Cenotaphs, or the supposed graves of Shahjahan and Mumtaz
Taj Photo # 25 Top of octagonal marble screen with beautiful inlay jewelled work that surrounds the cenotaphs
Taj Photo # 26 Basic blueprint of the Taj Mahal that shows stairways to upper and lower floors.
Taj Photo # 27 Here you can see the upper floor above the cenotaph. Each room has a balcony.
Taj Photo # 28 The Vedic style design on the under-side of the dome over the central cenotaph chamber.
Taj Photo # 29 Cobras in pairs at top of wall, another typical Vedic design.
Taj Photo # 30 Typical Minaret on the Taj Mahal.
Taj Photo # 31 The design on the underside of a staging on the Minaret.
Taj Photo # 32 The Baoli Burj water well, going down seven stories to water level.
Taj Photo # 33 The so-called Mosque at one end from the Taj
Taj Photo # 34 The so-called Mosque at one end from the Taj with evidence it was converted later into a mausoleum
Taj Photo # 35 Replica of pinnacle design of the top of the main dome in the garden
Taj Photo # 36 Survey plan of Taj Mahal by Col Hodgson, 1825.
Taj Photo # 37 An early photo of Taj from the riverside clearly showing 2 hidden basements
Taj Photo # 38 Photo of Taj Mahal from Yamuna riverside showing rooms with grills in the marble plinth
Taj Photo # 39 Blue print of the Taj Mahal showing cross-section of Central Edifice in a book by J Fergusson in 1855
Taj Photo # 40 The blue print plan of the Taj Mahal showing stairways that go down to the 22 basement rooms.
Taj Photo # 41 Typical view of the 2 basement floors along the Yamuna River.
Taj Photo # 42 Here you can see, not far from the plinth of the Taj, the steps to go down to the 22 rooms
Taj Photo # 43
Decorations on outside of upper basement floor with a ventilation grill built in for the apartment.
Taj Photo # 44 Ventilation grill in the design of the outside of the apartments
Taj Photo # 45 Entrance to lower basement floor that is now bricked up.
Taj Photo # 46 The timber door where Prof. Marvin Mills took the sample that proved the Taj predates Shajahan
Taj Photo # 47 Close up of the the steps that go down to the 22 apartments
Taj Photo # 48 Another of the secret stairways in the Taj Mahal.
Taj Photo # 49 After we climb down the steps we see a doorway to the passage on right of the hidden rooms.
Taj Photo # 50 Typical roof painted design in the 22 rooms.
Taj Photo # 51 Here is a typical tower (Burj) that is in familiar Rajput style, not Islamic in any way.
Taj Photo # 52 Stone rings for anchoring boats for river transportation amongst the residents in the Taj.
Collection Three:
The Photographic Evidence of the Vedic Influence Found in the Red Fort and Other Buildings in Delhi and India, as well as in Drawings and Art from Elsewhere in the World. 

13 comments:

  1. இதுபோன்ற விசயங்களை தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  2. ரொம்ப ஆர்வமான விபரமான தகவல்கள்.

    ReplyDelete
  3. தாஜ்மகாலை மட்டுமாவது விட்டு வையுங்கப்பா, இல்லைன்னா அதையும் போயி இடிச்சிரப்போராணுக.

    ReplyDelete
  4. கேள்விபட்ட தகவல்கள். இன்று கொஞ்சம் விபரமாக அறிந்து கொண்டேன் நன்றி சார்

    ReplyDelete
  5. "மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு ...//

    முதல் இரண்டு எழுத்துக்களை நீக்கி விட்டு ...

    நானும் நீங்கள் சொன்ன பதிவைப் பார்த்துள்ளேன். ஆனாலும் மூடி வைக்கப்பட்ட அறைகளை ஏன் யாரும் திறந்து பார்க்கவேயில்லை என்பது ஒரு பெரிய கேள்வியாக நிற்கிறது.

    ReplyDelete
  6. 45-ம் படத்தில் இருப்பது போன்ற மறைப்புகள் எதற்கு? யார் எப்போது கட்டியதாக இருக்கும்? பார்ப்பதற்கு அந்தச் சுவர் புதியதாகத் தெரிகிறதே ..?

    ReplyDelete
  7. வியப்பாதானிருக்கு.. அரசாங்கமே தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தினாலென்ன?

    ReplyDelete
  8. தாஜ்மஹால் இந்து கோயிலாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டுள்ளேன்! விரிவாக ஆதாரப்பூர்வமாக விளக்கியமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. முன்பொருமுறை இச் செய்தியினைப் படித்துள்ளேன் அய்யா. ஓக் அவர்களின் புத்தகத்தை எதற்காகத் தடை செய்ய வேண்டும். இன்னும் எந்தெந்த செய்திகளை தவறாக நம்பிக் கொண்டிருக்கின்றேர்ம் என்பது தெரியவ்லலை அய்யா

    ReplyDelete
  10. Thank you for making this interesting article. I'm happy to visit here

    ReplyDelete
  11. nice comedy....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.