Friday, May 17, 2013




 

அட ஆண்டவா பெண்களை ஏண்டா படைச்சே? (ஆணின் புலம்பல்கள்)

1. பெண்கள் சேமிப்பதில் அதிகம் அக்கறை உடையவர்களாம்
2. அப்படிபட்ட அவர்கள்தான் ஷாப்பிங்க் செய்வதிலும் அதிக விலையுள்ள சேலைகளையும் வாங்குவார்கள்.
3. அப்படி அதிக விலையுள்ள சேலைகளை வாங்கினாலும் எங்காவது போகும் போது நன்றாக உடுத்த ஒரு சேலையும் இல்லை என்று புலம்புவார்கள் .
4. அப்படி உடுத்த சேலை இல்லையே என்று புலம்புபவர்கள் சேலையை உடுத்தி வரும் போது மிகவும் அழகாக தேவதை போல தோன்றுவார்கள்
5. அப்படி தேவதை போல அழகாக உடுத்தி வந்தாலும் அவர்கள் மனதிற்கு திருப்தியே இருக்காது.
6. அப்படி மனதிற்கு திருப்தி இல்லாத அவர்களுக்கு கணவன் அவள் மனது சந்தோஷப்படும்படி ஏதாவது சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
7. அப்படி மனது சந்தோஷப்படும்படி ஏதாவது சொன்னால் அதையும் அவர்கள் மனது நம்பாது.
8.அப்படி நம்பாது இருக்கும் அவர்களின் தலையில் சத்தியம் செய்ய சொல்லுவார்கள்.
9. அப்படியே நாம் தலையில் சத்தியம் செய்தாலும் என் உயிர் மேல் அக்கறை இல்லாததால் நீங்கள் பொய் சத்தியம் செய்கிறீர்கள் என்று சொல்லுவார்கள்


உஷ் இப்பவே கண்னை கட்டுதே ....பெண்களை புரிஞ்சுக்க முடியலையே போதுமடா சாமி

கல்யாணத்திற்கு முன்பு பல பேர் சொன்னாங்க ....
போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய்,
கடலுக்குள் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய்,
திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய்யுன்னு....
இப்ப புரியுது அவங்க இதை எதற்க்காக சொன்னார்கள் என்று



அன்புடன்
மதுரைத்தமிழன்
17 May 2013

4 comments:

  1. itha 2 naal munnaadi Facebook la padichchen.

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னது எல்லாம்
    மிக மிகச் சரியாகத்தான் இருக்கு
    முடிவாகச் சொல்லிப்போனது
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திருமணத்திற்கு முன் பிரார்த்திக்க மறந்திட்டேன் அதற்கு அப்புறம் திணம் திணம் பன்னுகிறேன்.

    ReplyDelete
  4. நல்ல பெண்கள் சைக்காலஜி !
    பல பெண்கள் இப்படித் தான் இருக்கிறார்கள் !
    உங்க பிரார்த்தனை ஓயாத பிரார்த்தனை
    போல் இருக்கிறதே !

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.