உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, January 24, 2013

கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய பதிவு

 
கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய பதிவு


பெண்களுக்கு கல்யாணம் ஆனாதான் வாழ்க்கையில் இன்பம் ஆரம்பிக்கிறது என்றும் ஆண்களுக்கு அப்போதுதான் துன்பம் ஆரம்பிக்கும் என்று சொல்லுவார்கள் ஆனால் உண்மையில் நடப்பதென்ன என்று தெரிந்து கொள்ள ஆசையா அப்ப மேலே படியுங்க.

லவ் :
6 வாரத்தில் : கண்ணா லவ் யூடா  செல்லம் லவ் யூடா தங்கம் லவ் யூடா
6 மாதத்தில் : ஆமாம் உன்னைதான் நான் லவ் பண்ணுறேன்
6 ஆண்டுகளில் : சனியனே உன்னை லவ் பண்ணலேன்னா உன்னையை எதுக்குடி கல்யாணம் பண்ணினேன்.

வேலையில் இருந்து திரும்பி வரும் போது ;
6 வாரத்தில் :  செல்லம் நான் வந்துட்டேன்.
6 மாதத்தில் :   என்ன நான் வீட்டிற்கு வந்துட்டேன்னு சொல்லன்னும்மா
6 ஆண்டுகளில் : ஏய் என்னடி சமைச்சு வைச்சுருக்கே

கிப்ட் :
6 வாரத்தில் : செல்லக்குட்டி   உனக்காக இந்த தங்க செயின் வாங்கி இருக்கிறேன்.
6 மாதத்தில் :  இந்தா உனக்காக இந்த பெயிண்டிங் வாங்கி இருக்கேன் சுவத்தில மாட்டி வை
6 ஆண்டுகளில் : இந்தா பணம் உனக்கு வேண்டியதை வாங்கிக்கோ

போன் அடிக்கும் போது:
6 வாரத்தில் :  செல்லம் உனக்கு போன் வந்திருக்குடி செல்லம்.
6 மாதத்தில் :  உனக்குதான் போன் இந்தா
6 ஆண்டுகளில் : ஏய் சனியன் போன் அடிக்குதுல்ல எடுத்து தொலைய வேண்டியதுதானே...

சமையல் :
6 வாரத்தில் : சாப்பாடு சூப்பர்ம்மா  என் வாழ்க்கையில் இந்த மாதிரி டேஸ்ட்டா சாப்பிட்டதே இல்லைம்மா
6 மாதத்தில் :  என்ன சமைச்சு வைச்சுருக்க....
6 ஆண்டுகளில் : இதை விட்டா உனக்கு  வேற எதுவும் சமைக்க தெரியாதா தினம் தினம் இதேதானா


மன்னிப்பு :
6 வாரத்தில் :  ஹேய் இதெல்லாம் ஒன்றும் தப்பு இல்லைடா நீ தெரியாமதான பண்ணிருக்கே இதுக்கெல்லாம் மன்னிப்பா போடா போ செல்லம்
6 மாதத்தில் :   இந்தா பாரு இனிமே இது மாதிரி நடந்தா எனக்கு பொல்லா கோபம் வந்துடும்
6 ஆண்டுகளில் : ஏய் என்னடி உனக்கு என்ன கொழுப்பா அறைஞ்சா பல்லு எல்லாம் கலண்டு விழுந்திடும்

புதிய துணி :
6 வாரத்தில் : வாவ் செல்லம் இந்த டிரெஸ்ல நீ தேவதை போல இருக்கே....
6 மாதத்தில் :  என்ன புதுசா டிரெஸ் வாங்கினியா
6 ஆண்டுகளில் : எனக்கு என்ன செலவு வைச்ச?

வெகேஷன்
6 வாரத்தில் : செல்லக்குட்டி  வெகேஷனுக்கு கோவா போகலாமா அல்லது ஊட்டிக்கு போகலாமா
6 மாதத்தில் :  வெகேஷனுக்கு போகணும் என்றால் எங்க அம்மா வீட்டிற்கு போகலாம்
6 ஆண்டுகளில் : சும்மா வீட்டுல கிட

டிவி ;
6 வாரத்தில் : உனக்கு என்ன பிடிக்குதோ அதை பார்ப்போம் கண்ணா
6 மாதத்தில் :  எனக்கு இந்த இந்த சேனலில் இந்த படம்தான் பிடிக்குது
6 ஆண்டுகளில் : நான் ஸ்போர்ட் சேனலை பார்க்க போறேன் உனக்கு பார்க்க பிடிக்கலைன்னா வீட்டு வேலை பார்த்துட்டு மூலையில போய் படுடி


பெண்களே படிச்சு முடிச்சிட்டீங்களா? அப்ப கல்யாணத்துக்கு நீங்க ரெடிதானே...
 டிஸ்கி : இதை படிப்பவர்கள் உங்கள் வீட்டில் இப்படிதான் மனைவியை நடத்துகிறீர்களா என்று கேட்காதீர்கள். நான் ஒரு அப்பாவி கணவன்...இப்படி எல்லாம் பேசி பூரி கட்டையால் அடி வாங்க என் உடம்பில் தெம்பு இல்லை. எங்கள் வீட்டில் மீனாட்சி ஆட்சிதான் மக்காஸ்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
அப்பாவி மதுரைத்தமிழன்

17 comments :

 1. அது தான் என் கேள்வியும் ...
  எட்டிய கனி கசக்கிறதோ ?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. எட்டாத கனிமட்டுமல்ல நாள்பட பட கனியின் ருசியும் மாற ஆரம்பிக்கிறது அவ்வளவுதான்

   Delete
 2. சரியான அவதானிப்பு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 3. இதெல்லாம் சலிப்பு இல்லை நண்பா, "உரிமை" கல்யாணம் ஆனாப் புதியதில் அவங்களை இம்ப்ரஸ் பண்ண சில அழகான வார்த்தைகள் வேண்டும், இல்லை என்றால் ச்சே! என்ன வாழ்க்கைடா இதுன்னு தோணும். கொஞ்ச நாளுக்கு அப்பறம் குழந்தை, குட்டிங்க, குடும்ப செலவுகள் சுமைகள் என்று வரும்போது, கொஞ்சம் வெறுப்பும் சிரிப்பும் இருந்தால்தான் நல்லாருக்கும், எப்பவும் செல்லம் என்று அழைத்தாலும் தவறுதான், எப்பவும் திட்டினாலும் தவறுதான், சோ! எல்லாம் நிறைந்தவைதான் வாழ்க்கை,

  நல்ல பதிவு நன்றி நண்பா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அவ்வளவுதான் நண்பா

   Delete
 4. உங்கள் பட்டியலில் இன்னும் ஒன்று:
  திருமணமான முதல் வருடம் கணவன் மனைவி இருவரும் கோவிலுக்குப் போகிறார்கள். வழியில் மனைவியின் காலை ஒரு கல் பதம் பார்க்கிறது.
  கணவன்: ஆஹா!, என் அருமை மனைவியின் காலை பதம் பார்த்தாயா, ஏ! கல்லே! சனியனே! உன்னை என்ன செய்கிறேன் பார்!

  இரண்டாம் வருடம்: அதே கோவில், அதே கல். அதே நிகழ்வு.
  கணவன்: ஏ! சனியனே! கல் இருப்பது கண் தெரியவில்லையா? பார்த்து நடக்கக் கூடாதா? உன்னை என்ன செய்யறது?
  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா. உங்களின் அனுபவம் இங்கே கருத்தாக வந்து விழுந்தது போல இருக்கிறதே...

   Delete
 5. படிக்க ரொம்ப(பழைய)தமாஸா இருக்கு பாஸ்
  சிரிக்க வச்சதுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி . படித்து ரசித்து சிரித்து கருத்து சொன்னதற்கு நன்றி

   Delete
 6. நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்.
  மிகவும் ரசித்தேன்.
  பதிவு புன்னகையை வரவழைத்தது.
  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கும் படித்து ரசித்து புன்னகை புரிந்து கருத்து சொன்னதற்கு எனது நன்றிகள் .

   Delete
 7. நல்ல நகைச்சுவையான பதிவு.
  மிகவும் ரசித்தேன்.
  படிக்கும்போதே சிரிப்பு வந்தது.

  ReplyDelete
 8. மூனாவதா சொன்னதெல்லாம் சொல்லனும்னு நிறையப் பேருக்கு ஆசைதான். ம்ம்
  ஆமாம் ஒரு சந்தேகம்! பூரிக் கட்டை அவங்க கையில் இருந்தா நீங்க எப்படி பூரி செய்வீங்க!

  ReplyDelete
  Replies
  1. பூரி கட்டை எங்கள் வீட்டில் என்னை அடிப்பதற்கும் மட்டும்தான் நண்பா. என் மனைவிக்கு தங்க மனசு அடிச்சாலும் நான் பூரி இட அதற்கென பூரி இடும் மிஷின் எனக்கு வாங்கி தந்திருக்காங்க... உங்க வீட்டுல உங்களுக்கு வாங்கி தரலையா ஹீ.ஹீ

   Delete
 9. வ்யிறு வலிக்க சிரித்தேன் நண்பரே! சிறப்பான பதிவு...!

  ReplyDelete
 10. ஹய்யோ..! ஒரு பேய்ப்படத்தை போட்டு மிரட்டிருந்தா கூட இந்த அளவுக்கு பயம் வந்திருக்காது.
  நாங்க அப்பாவி பொண்ணுங்கப்பா. பாவம். ரொம்ப பயமுறுத்தாதீங்க.

  பல வீடுகளில் புருஷன் பேசுவதும், ஒரு சில வீடுகளில் பூரிக்கட்டை பேசுவதும் இயல்புதான். அதற்காக இப்படியா?

  இனிமேல் பெற்றோர்கள் பெண்களை புகுந்த வீட்டிற்கு அனுப்பும்போது சீதனமாக மறக்காமல் பூரிக்கட்டையையும் சேர்த்து கொடுப்பதுதான் நல்லதோ?

  ஆனால் யதார்த்தமான உண்மை. அருமை நண்பரே.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog