Wednesday, January 2, 2013




மனைவியை திருப்திப்படுத்துவது எப்படி? ( புது மாப்பிள்ளை மட்டுமல்ல பழைய மாப்பிள்ளைகளும் படிக்கலாம் )

1. கல்யாணம் ஆனதும் தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் அதுவும் மாமியார் வீட்டுக்கு அருகில் வீடு பார்த்துச் செல்ல வேண்டும்.

2. உன் சகோதர சகோதரிக்குப் படிக்கச் செலவு செய்தால் அது அனாவசிய செலவு அதற்குப் பதிலாக மைத்துனி படிப்பு அல்லது திருமணத்திற்குச் செலவு செய்தால் அது மனைவியைப் புரிந்த கொண்ட நல்ல கணவன் செய்யும் செயல்.

3. மனைவி எழும் முன் எழுந்தும் மனைவி படுக்கச் செல்லும் போது கூடவே படுக்கச் செல்ல வேண்டும்.

4.  அம்மா அப்பா நண்பர்களுக்கு மனைவி போன் செய்து மணிக்கணக்கில் பேசும் போது தொந்தரவு செய்யாமல் முடிந்தால் பாத்திரம் கழுவி வைக்க வேண்டும்.

5. உங்கள் அம்மா அப்பா நண்பர்களிடம்  நீங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் பேசி நேரம் வீணாக்கக் கூடாது.

6. வீக்கெண்டுகளில் நண்பர்களைக் கூப்பிட்டு வீட்டில் சமைக்கச் சொல்லக் கூடாது,  அதற்குப் பதிலாக  மனைவியையும் அவர்கள் பெற்றோர்களை ஹோட்டலுக்கு கூப்பிட்டுச் செல்ல வேண்டும்.

7. பண்டிகை தினங்களில் மனைவியின் பெற்றோர் மட்டும் ,சகோதர சகோதரிகளுக்கு நல்ல துணிமணிகளை வாங்கி கொடுத்து விருந்து கொடுக்க வேண்டும்

8. குழந்தை பிறந்த பிறகு மாமனார் மாமியாரை வீட்டோடு கூப்பிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையைப் பார்த்துக் கொள்ளத்தான் அவர்களைக் கூப்பிட வேண்டும் ஆனால் அவர்கள் வீட்டிற்கு வந்த பின் அவர்களைக் குழந்தைகளை பார்த்துக்கொள்ளச் சொல்லி தொந்தரவு பண்ணக் கூடாது.

9. மிகவும் முக்கியமாக மனைவி இருக்கும் போது  ஆன்லைன் பக்கம் தப்பித் தவறி வந்திடக்கூடாது.

10. தப்பித் தவறி எங்கள் அம்மா நல்லா சமைப்பாங்க என்று மட்டும் சொல்லிவிடக் கூடாது.

11. தப்பித் தவறி  மனைவி, சமையலைச் சொதப்பி இருந்தால் சமையல் நல்லா இல்லை என்றும் மட்டும் சொல்லிவிடக் கூடாது

12. இறுதியாகப் பக்கத்து வீட்டுக்காரனை விட அதிக அளவு சம்பாதிக்கவேண்டும் பக்கது வீட்டில் இருப்பதைவிட எல்லாம் விலையுர்ந்தவைகள் நம் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


இதையெல்லாம் நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடித்தால் உங்கள் மனைவியைத் திருப்திப் படுத்த முடியும். அப்புறம் என்ன உங்கள் வாழ்க்கையில் எப்போதும் வசந்தம்தான் வீசும்....

இதை எல்லாம் கடைப்பிடிக்கவில்லையென்றால் புயல்தான் அடிக்கும்..
 
அன்புடன்
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன்


படிக்காதவர்கள் படிக்க
 (அனைத்தும் நகைச்சுவைகள்தான் )







 




20 comments:

  1. இவையெல்லாம் அனுபவ மொழிகளா... இல்லை அறிவுரைகளா பிரதர்? ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. அனுபவமுமில்லை அறிவுரையும் இல்லை எல்லா பக்கத்து ஆத்துக்களை நோக்கியதில் அறிந்ததுதான் நண்பா

      Delete
  2. நான் மிகப் பழைய மாப்பிள்ளை!

    நீங்கள் சொல்லியிருப்பதெல்லாம் உண்மைதான்.

    இத்தனை செய்தும் திருப்திபடாத ‘கல்லுளி மங்கிகளை’ என்ன செய்வது?

    மிகப் பல ஆண்டுகளாக யோசிக்கிறேன். விடை கிடைத்தபாடில்லை!

    பதிவு மிகவும் சுவையானது.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்தற்கு நன்றி

      Delete
  3. எவ்ளோ அடிச்சாலும் வலிகலன்னு சொல்ற உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு பாசு..

    ReplyDelete
    Replies
    1. அடி வாங்கி வாங்கி மரத்து போச்சு நண்பா

      Delete
  4. இத படிச்சி பையன் உசார இருப்பானோ இல்லையோ இத படிக்குற பொண்ணு கண்டிப்பா உசராயிடும், இது தானே வேணும், உங்களுக்கு ....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் படிச்சிட்டு பொண்ணுக உசார் ஆனா போதும் , எனக்கு இருப்பது பொண் குழந்தைதான் ஹீ.ஹீ.ஹீ

      Delete
  5. சபாஷ்.இது எல்லாம் தெரியாமல் என் சொந்தக்காரர் ஒருவர் அவமான பட்டு கொண்டு இருக்கிறார்.அவரை படிக்க சொல்லணும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யோ அம்மா இது ஏதோ நகைச்சுவைக்காக எழுதியது இதை சீரியஸாக அவரிடம் சொல்லாதீர்கள்

      Delete
  6. அம்மா அப்பா நண்பர்களுக்கு மனைவி போன் செய்து மணிக்கணிக்கில் பேசும் போது தொந்தரவு செய்யாமல் முடிந்தால் பாத்திரம் கழுவி வைக்க வேண்டும்.//

    அய்யய்யோ இது வேற செய்யனுமா...?

    ReplyDelete
    Replies
    1. நண்பா அப்படித்தான் நான் செய்கிறேன் ஏதோ என் வண்டி நல்ல படியா ஒடுது..

      Delete
  7. பாவம், ரொம்ப அடிபட்டிருகீங்க போலிருக்கு...உங்க வார்த்தையிலேயே தெரியுது...

    ReplyDelete
    Replies
    1. வார்த்தையிலே நான் அடிப்பட்டதை புரிஞ்சுகிட்ட நீங்க என்னை நேருல பார்த்த வேற பொண்னை பார்த்து கட்டிவைத்து விடுவீர்களோ???

      Delete
  8. பதிவு அருமை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. உண்மையான் பதிவு . நன்றி

    ReplyDelete
  10. ஆண்கள் அடி வாங்கக் கூடாதுங்கற உங்க நல்ல உணர்வை பாராட்டறேன் பாஸ்

    ReplyDelete
  11. குடும்ப வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா ...
    இன்னும் எவ்வளவோ உண்டு...இப்பவே கண்ணை கட்டினால் எப்படி ??

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.