உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 20, 2011

உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக

உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக)
இது அட்வைஸ் அல்ல. அனுபவத்தில் அறிந்த ரகசியம்.( உடனே கேட்காதீரகள்...மக்கா இது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமா என்று. அதை நான் சொல்ல மாட்டேன் அது என் குடும்ப ரகசியம். ஏதோ வேளா வேலைக்கு சோறுகிடைக்கிறது. அதில் பிரச்சனை ஏற்பட விரும்பவில்லை....புரிஞ்சிகங்க மக்கா நான் என்ன சொல்ல வருகிறேன் என்று) சரி வாங்க விஷயத்துக்கு போவோம்.இது ஒரு அமெரிக்க பெண்ணின் அனுபவம் ஆனால் இதை எல்லா நாட்டு பெண்களும் பயன்படுத்தலாம்.ஒரு அமெரிக்க தம்பதியினர் தங்களது 50வது திருமண ஆண்டு விழாவை பீச்சில் வைத்து தங்கள் நண்பர்களுடன் கொண்டாடினர்.அந்த தம்பதியினரை பார்த்து எல்லோரும் அதிசயப்பட்டனர்( கல்யாணம் ஆகி 5 வருடம் ஒன்னா இருந்தால் மிக அதிசியம் அவர்களூக்கு) ரொம்ப பொருத்தமான தம்பதியினர் என்று அவர்கள் பேசிக்கொண்டனர். அந்த விழாவைபற்றி கேட்ட லோக்கல் மீடியா ரிப்போர்ட்டர் அந்த தம்பதிகளை பார்த்து அவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த பெண் வெகு அடக்க ஒடுக்கமாக எல்லாம் என் கணவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று வெட்கப்பட்டவாறே அங்கிருந்து நழுவினார்.

அந்த ரிப்போர்டருக்கோ மிகுந்த ஆர்வம் எப்படியாவது அவர்களின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த பெண்ணின் கணவரிடம் கேட்டார்அதற்கு அந்த பெண்ணின் கணவர் சொன்னார். நாங்கள் கல்யாணம் ஆன புதிதில் ஹனிமூன் சென்ற போது என் மனைவி என்னிடம் நடந்த கொண்ட விதத்தில் இருந்து நான் முடிவு செய்துகொண்டேன் வேறு எந்த பெண்ணையும் ஏறு எடுத்து பார்ப்பதில்லை என்று . அதுதான் எங்கள் திருமண வாழ்வின் வெற்றிக்கு காரணம் என்றார்.அந்த ரிப்போர்ட்டருக்கோ மிகுந்த ஆர்வம் அப்படி என்னதான் அந்த பெண் ஹினிமூனில் செய்தாள். ஆவலை அடக்கமுடியாமல் அவரிடம் கெஞ்சி கேட்டார்.அதற்கு அந்த கணவர் கண்களை முடிக்கொண்டு நீண்ட யோசனைக்கு பிறகு அமைதியாக சொன்னார். நாங்கள் ஹினிமுனுக்கு அரிசோன மாநிலத்தில் உள்ள க்ராண்ட் கேன்யன்( Grand Canyon, in Arizona )க்கு சென்றோம். அப்போது கேண்யனுக்கு கிழே செல்ல குதிரையை பயன் படுத்தினோம். அந்த சமயத்தில் என் மனைவி சென்ற குதிரை கல் தடுக்கி கிழே விழுந்தது. கிழே விழுந்த என் மனைவி குதிரையை பார்த்து சொன்னாள். "இது முதல் தடவை" என்று.....சிறிது தூரம் சென்ற குதிரை மீண்டும் கல் தடுக்கி கிழே விழுந்தது. அப்போது என் மனைவி சொன்னாள் ' இது இரண்டாம் தடவை என்று" மீண்டும் அதன் மேல் சவாரி சென்ற என் மனைவி மேலும் அரைமைல் தொலைவு சென்ற போது மீண்டும் அந்த குதிரை கிழே விழுந்தது. இந்த தடவை அவள் ஓன்றும் சொல்லவில்லை. அவள் தரையில் இருந்து எழுந்ததும் அவள் கைப்பையை திறந்து அதில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டு கொன்றுவிட்டாள்.அதை பார்த்த நான் அவளை நோக்கி ஏய்ய்ய்ய்ய்ய்ய் உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிறுக்கு? ஆர் யூ க்ரேஸி? என்று சத்தம் போட்டேன்.அதற்கு அவள் என்னை நோக்கி இது முதல் தடவை என்று சொன்னாள்அந்த நிமிடத்தில் இருந்து 'We have lived happily ever after'என்ன இந்த ரகசியம் யூஸ் புல்லா இருந்துச்சா பதில் எழுதுங்கள்.. ஆனா என் மனைவியிடம் மட்டும் இந்த ரகசியத்தை சொல்லிவிடாதிர்கள். அப்படி நீங்கள் சொன்னால் மீண்டும் என்னை பார்க்க முடியாது என்றென்றும். ஏனென்றால் நான் சொர்க்கத்தில் இருப்பேன். நீங்கள் நரகத்தில் இருப்பிர்கள் அவ்வளவுதான்  நான் சொல்லிப்புட்டேன்\
2 comments :

  1. ஏற்கனவே படிச்சிருந்தாலும் தமிழில் சுவையாவே தருகிறீர்கள்..

    ReplyDelete
  2. அப்ப வீட்டுல சொல்லிடவா?.. அதான் உங்க வீட்டுல..?

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog