உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, June 26, 2012

ஜெயலலிதாவை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டும் அறிவு ஜீவிகள் படிப்பதற்காக (நீங்களும் படிக்கலாம்)


ஜெயலலிதாவை துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டும் அறிவு ஜீவிகள் படிப்பதற்காக (நீங்களும் படிக்கலாம்)

ஜெயலலிதா தமிழகத்திற்கு அம்மாவாம் ரொம்ப படிச்சவங்களாம் சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.அவர்கள் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். காரணம் அவர் மிக போல்டாக துணிச்சலாக எந்த முடிவையும் எடுப்பார்களாம். இதை அந்த அறிவு ஜீவிகள் சொல்லும் போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

அறிவு ஜீவிகள் சொல்வது போல அப்படி என்ன துணிச்சலான முடிவை எடுத்தார் அவர்? தமிழகத்திற்கு தாயாக போற்றப்படும் அவர் தமிழக மக்களை தன் பிள்ளையாக கருதி அவர்களின் நலன் கருதி டாஸ்மாக்  கடைகளை மூடிவிட்டாரா? அல்லது அணு உலை மக்களை பாதிக்கும் அதனால் அதை நான் ஆட்சியில் இருக்கும் வரை தொடங்க விட மாட்டேன் என்று அறிவித்தாரா?கர்நாடகா தண்ணிர் தரவில்லை அதனால் கர்நாடகம் கிடுகிடுங்க எதாவது செய்தாரா? இல்லை தமிழகத்தில் நடக்ககும் மணற் கொள்ளைகளை தடுப்பதற்காக எந்த துணிச்சாலான முடிவை எடுத்தார்?

துணிச்சலாம் துணிச்சல் நினைக்க நினைக்க சிரிப்பு வருகிறது. அவர் செய்வதெல்லாம் சர்க்கஸில் வரும் ரிங் மாஸ்டர் மிருகங்களிடம் அப்படியே என்னை ஒரு ரவுண்டு சுற்றிவா? எல்லோருக்கும் ஒரு கும்பிடு போடு. இந்த பெஞ்சில் இருந்து அந்த பெஞ்சுக்கு தவ்வு. அப்படிய தரையில் விழுந்து வணங்கு என்று சொல்வது போல அமைச்சர்களை ஆட்டுவித்து கொண்டிருக்கிறார். இதையே பல பள்ளிகூட ஆசிரியர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஆனால் அவர்களும் பிரதமர் பதவிக்கு இவரை விட அதிக அளவு தகுதி வாய்ந்தவர் தானே?

ஆமாம் இதை ஏன் இப்ப சொல்லிக் கொண்டு இருக்கிறாய். இப்ப வருவது ஜனாதிபதி தேர்தல்தானே பிரதமர் பதவிக்கான தேர்தல் வரவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

நேற்று டிவியில் நான் பார்த்த ஒரு நிகழ்ச்சியில் சிக்கிம் மாநிலத்தில் எடுத்த ஒரு நல்ல முடிவு அந்த மாநிலத்திற்கும் அந்த மாநில மக்களுக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவர்களை இட்டு செல்கின்றது.அது மட்டுமில்லாமல் அந்த மாநிலம் இந்தியாவிற்கு ஒரு முன் மாதிரியான மாநிலமாகவும் விளங்குகிறது.. இந்த மாதிரியான துணிச்சலான முடிவை எடுத்து மக்களின் நலனை கருதும் அந்த மாநில முதல்வர்களை பாராட்டி அவர்கள் மாதிரியான மக்கள் நலன் கொண்ட ஆட்கள் இந்தியாவின் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வர வேண்டும் அப்போதுதான் நம் நாடு உலகின் தலை சிறந்த நாடாக இருக்கும் என்பது என் கருத்து. அப்படி என்ன முடிவை அந்த மாநில முதல்வர்கள் எடுத்தார்கள் என்பது தெரிய வேண்டுமா தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு புரியும்

2003 ம் ஆண்டில் இருந்து சிக்கிம் மாநிலம் செயற்கை உரங்களையும் மருந்துக்களையும்(chemical fertilizers and pesticides) முற்றிலும் தடை செய்துவிட்டது. 2015 க்குள் மாநிலம் முழுவதும் 100 சதவிகிதம் இயற்கையான முறையில் விவசாயம் செய்து மக்கள் உடல் நலத்திற்கு நலம் விளைவிக்கும் முறையில் பயிரிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர்  பவான் (Chief Minister Pawan Chamling) அறிவித்துள்ளார். இதை விவசாயிகளுக்கு மிக பக்குவமாக எடுத்து உரைத்து அதன் பலன்களை உணரச் செய்து இந்த இயற்கை முறையில் விவசாயம் செய்யது மக்கள் உடல் நலனை பாதுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.சிக்கம் மாநிலத்தை போல மற்ற மாநிலமும் இந்த திட்டத்தை தொடருமானால் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா வரும். உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா வரும் என்பது இயற்கை முறை உணவை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல மக்களின் உடல் நலத்திலும் கூடத்தான்.

 இப்ப சொல்லுங்க இந்த மாதிரி முடிவுகளை எடுப்பவர்கள் நம் நாட்டை ஆள வேண்டுமா அல்லது டாஸ்மாக்கின் டார்கெட்டை கடந்த ஆட்சியில் உள்ளவர்கள் செய்ததைவிட இந்த ஆட்சியில் உள்ளவர்கள் அதிகரித்து மக்களின் நலனை கெடுத்து அதில் வரும் வருமானத்தின் மூலம் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று அறிவிஜீவித்தானமாகவும் போல்டாகவும் சிந்திப்பவர்கள் நம் நாட்டின் தலைவராக வேண்டுமா?

எது உங்கள் மனதில் என்ன  நியாமாகபடுகிறது என்பதை அறிவு ஜீவிகள் மட்டுமல்லாமல் இதை படிப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாமே?

அன்புடன்
உங்கள் அபிமானத்திர்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் 
இங்கு கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு

16 comments :

 1. உண்மையான கருத்து

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com

  ReplyDelete
  Replies
  1. ஜோசப் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. நல்ல செய்திதான் சொல்லியிள்ளீர்! ஆனால் பலன் தருமா என்பதே
  கேள்வி!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. புலவர் சா இராமாநுசம் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


   ///நல்ல செய்திதான் சொல்லியிள்ளீர்! ஆனால் பலன் தருமா என்பதே
   கேள்வி!///

   நல்லவைகள் எல்லாம் பலன் தர சிறிது நாள் கூட எடுத்து கொள்ளலாம் ஆனால் நிச்சயம் பலன் தரும் என்பது எனது நம்பிக்கை.
   நல்ல சொல், நல்ல மனம், நல்ல செயல் இவைகள் எல்லாம் எந்த நேரத்திலும் தீங்கை தருவதில்லை

   Delete
 3. பொத்தம் பொதுவா சொல்லி இருக்கேங்க....
  சிக்கிம் முதல்வர் செஞ்சது ரொம்ப தைரியமான முடிவு என்று எப்படி சொல்ல்கிறேர்கேள்..???? அவர் என்ன சிக்கிம்ல வறுமையை ஒழித்து விட்டாரா, இல்லாட்டி கேரளா மாதிரி கல்வி அறிவில் 100% அடைந்து விட்டாரா..????
  நீங்க ஜெயலலிதா மேல மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் மேல இருக்குற வெறுப்புல ஏனோ தானோன்னு எழுதின பதிவு மாதிரி தான் எனக்கு தெரியுது....
  தவறாக நினைக்க வேண்டாம்... :)

  ReplyDelete
  Replies
  1. ராஜ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   //பொத்தம் பொதுவா சொல்லி இருக்கேங்க...//.

   என் மனதில் பட்டதை நான் சொல்லி இருக்கிறேன்

   //சிக்கிம் முதல்வர் செஞ்சது ரொம்ப தைரியமான முடிவு என்று எப்படி சொல்ல்கிறேர்கேள்..???? அவர் என்ன சிக்கிம்ல வறுமையை ஒழித்து விட்டாரா, இல்லாட்டி கேரளா மாதிரி கல்வி அறிவில் 100% அடைந்து விட்டாரா..????//
   நீங்க மேலே சொன்னவைகளை எல்லாம் அவர் செய்யலை ஆனால் அவர் மனிதவர்க்கத்திற்கு கெடுதல் செய்யும் டாஸ்மாக் கடைகளை திறந்து அதின் வருமானத்தை அதிகரிக்க டார்கெட் நிர்ணயிக்கவில்லை. அதற்கு மாறாக மனித உடல் நலத்திற்கு உதவும் வகையில் ராசயான உரங்களை தடை செய்து இருக்கிறாரே அது ஒரு நல்ல முடிவாக உங்கள் கண்ணில் படவில்லை போலும்


   //நீங்க ஜெயலலிதா மேல மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் மேல இருக்குற வெறுப்புல ஏனோ தானோன்னு எழுதின பதிவு மாதிரி தான் எனக்கு தெரியுது....//

   நான் என்ன ஜெயலலிதாவிற்கு அரசியல் எதிரியா என்ன இப்படி எழுதுவதினால் எனக்கு எந்த ஒரு லாபமும் இல்லை. அவர் தமிழக முதல்வராக இருப்பாதாலும் அவரை சுற்றி உள்ள ஜால்ராக்கள் அதிக அளவு துதிபாடி கொண்ட்டிருப்பதாலும் தான் நான் இதை எழுதியுள்ளேன். ஒரு வேளை நான் எழுதியுள்ளதை அவர் படிக்க நேருமானால் இதை படித்த பின் மக்களுக்கு நல்லது ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த்து அதற்கான நடவைடிக்கையை அவர் எடுக்கலாம் அல்லவா.

   எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் நான் விடுக்கும் வேண்டு கோள் நீங்கள் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை மக்களுக்காக செய்து சரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெறஸ் செய்யுங்கள் என்று கேட்பேன்.


   //தவறாக நினைக்க வேண்டாம்... :).///

   நீங்கள் உங்கள் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறிர்கள். அதை நான் ஏன் தவறாக எடுத்து கொள்ளப் போகிறேன் சகோதரா

   Delete
 4. iya karuththu nallaathaan irukku megaa serilkalilum ilavasankalilum mayanki kidakkum tamilaga makkalukku theriyanume

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க

   Delete
 6. நம் குரல் எடுபடுமா?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நல்லதை நினைத்து நாம் குரல் கொடுப்போம். அது அவர்களுக்கு புரிந்த்து மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நன்று
   Delete

   Delete
 7. தைரியலட்சுமின்னு சொன்னவரை முதல் போயி பிடிங்கய்யா கொய்யால...!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சொல்லுறது என் வேலை மனோ பிடிப்பது அருவாளை தூக்குவதெல்லாம் நீங்கள் தான் செய்ய வேண்டும்

   Delete
  2. எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் தைரியம் தான்!

   Delete
 8. கேரளா மாதிரி கல்வி அறிவில் 100% அடைந்து விட்டாரா..????
  ஒது கேரளாவின் பெரிய நாடகம். தமிழ அரசியல் அடிமை அரசியலாக மாறுவதில் வருத்தமே. நல்ல கட்டுரை.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog