உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, May 2, 2012

திறமையான கட்சிகாரன் யார்? ( திமுக Vs அதிமுக )
திறமையான கட்சிகாரன்  யார்? ( திமுக Vs அதிமுக )


5 திமுக கட்சியாளர்களும் 5 அதிமுக கட்சியாளர்களும் விழுப்புரம் போவதற்காக எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் தனி தனி குழுவாக காத்திருந்தார்கள். அந்த இரு குருப்பும் மற்றவர் காதில் படும்படி தாங்கள் தான் மிக திறமையானவர்கள் என்று சத்தம் போட்டு விவாதித்து கொண்டிருந்தனர்.


அதிமுக கட்சியாளர்கள் டிக்கெட் கவுண்டரில் ஆளுக்கொரு டிக்கெட் எடுத்தனர் ஆனால் திமுக கட்சியாளர்கள் ஐந்து பேரு இருந்த போதிலும் ஒரே ஒரு டிக்கெட் எடுத்தனர். ரயில் வந்ததும் அனைவரும் அடித்து பிடித்து  ஒரே கம்பார்ட்மெண்டில் ஏறினர்.  அதிமுக கட்சியாளர்கள்  டிடி ஆர் வந்தால் இந்த திமுக கட்சியாளர்கள்  என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்த்து கொண்டனர்.


கடைசியில் டிடி ஆர் வரும் போது திமுக கட்சியாளர்கள்   அனைவரும் டாய்லெட்டில் போய் ஒளிந்து கொண்டனர். இறுதியில் டி டி ஆர் வந்து டாய்லெட் கதவை தட்டும் போது ஒரே ஒரு கைமட்டும்   வெளீயே நீண்டு  டிக்கெட்டை காண்பித்தது. அதை பரிசோதித்துவிட்டு அவரும் அங்கு இருந்து சென்றார்.இதை அதிமுககட்சியாளர்கள்  நன்கு கவனித்து கொண்டனர். நாம் திரும்பி வரும் போது இதே மாதிரி பண்ணலாம் என்று முடிவு செய்தனர்.


விழுப்புரத்தில் இருந்து திரும்பி வரும் போது அவர்களுக்கு எக்மோர் வருவதற்கு டைரக்ட் ரயில் கிடைக்கவில்லை. மதுரையில் இருந்து தாம்பரம் வரும் வரை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் அவர்களுக்கு கிடைக்கும் போலி இருந்தது. அப்போது அதிமுக கட்சியாளர்கள்  ஒரே ஒரு டிக்கெட் மட்டும் எடுத்தனர் ஆனால் திமுக கட்சியாளர்கள்  ஒரு டிக்கெட் கூட எடுக்கவில்லை.


அதிமுக கட்சியாளர்கள் நினைத்தார்கள் முட்டாள் திமுக காரன் புத்தி இல்லை அவங்களுக்கு இந்த தடவை நல்ல மாட்டிக்க போறங்கள் என்று.


டி டி ஆர் வரும் போது அதிமுக கட்சியாளர்கள்  முதலில் ஒடிப் போய் டாய்லெட்டில் ஓளிந்து கொண்டனர். திமுக கட்சியாளர்கள்  அதற்கு எதிர்த்தால் போல இருக்கும் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டனர். திமுக கட்சியாளர்களில் ஒருவன் அதிமுக கட்சியாளர்கள் ஒளிந்து இருக்கும் டாய்லெட் கதவை தட்டினான் அப்போது ஒரு கைமட்டும் டிக்கெட்டை வெளியே நீட்டியது அதை வாங்கிய திமுக காரன் அதை எடுத்து போய் அவ்ர்கள் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டான். இப்போது அதிமுக கட்சியாளர்கள் டி டி ஆரிடம் மாட்டி கொண்டு பெரும் தொகையை அபராதமாக கட்டி தாம்பரம் வந்து இறங்கினர்.


இந்த தடவை நாம மிக உஷராக இருக்க வேண்டுமென்று அதிமுக கட்சியாளர்கள் பிளான் போட்டு ஒரே ஒரு டிக்கெட் எடுத்தனர். அங்கு இருந்த திமுக கட்சியாளர்கள்  அவர்களுக்கு தெரியாமல் 5 டிக்கெட் எடுத்து கொண்டு மின்சார ரயிலில் ஏறினார்கள்.


அவர்களோடு அதிமுக கட்சியாளர்களும் அதே ரயிலில் ஏறினார்கள். டி டி ஆர் வர்ம் போது திமுக கட்சியாளர்கள் டிக்கெட்டை காண்பித்தனர் ஆனால் அதிமுக கட்சியாளர்கள் டாய்லெட்டை தேடி இங்கும் அங்கும் அலைந்தது இறுதியில் இந்த ரயில் டாய்லெட் இல்லை என்பதை அறியும் போது டி டி ஆர் அவர்களிடம் வந்து டிக்கெட் கேட்ட போது முழி முழி என்று முழித்து அபராதம் கட்டி சென்றனர்.

இப்போது சொல்லுங்க மக்கா யார் மிக திறமையானவர்கள் என்று.....


என்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"

13 comments :

 1. அடங்கப்பா...உண்மையிலேயே நிலைமை புரிந்ததுங்கோ!

  ReplyDelete
 2. இந்தக் கதை ஆண் வேறொரு வடிவில் படித்துள்ளேன் என்றாலும் அதிமுக திமுக விளையாட்டில் அருமையாக இருக்கிறது. உண்மையான முட்டாள்கள் என்னவோ நாம் தான் என்று என் அடிமனது சொல்லுவதை என்னால் பதிவிடாமல் இருக்க முடியவில்லை

  ReplyDelete
 3. எனக்கு புரிஞ்சுடுச்சுதுங்கோ.

  ReplyDelete
 4. இப்படிதான் நம்மளையும் ஏமாத்துறாங்க . ம்ம்

  ReplyDelete
 5. கதை நல்லா இருக்கு. ஆனால் உண்மையில், அவனவன் ஆட்சியில் இருக்கும் போது எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, சுருட்ட முடியுமோ அவ்வளவும் அடிக்கிறார்கள், சுருட்டுகிரார்கள். எம்ஜிஆர் இருந்த போது பூட்ட கேஸ் என்று நினைத்த மஞ்சள் துண்டுக் கட்சி இன்றைக்கு ஆசியாவில் முக்கிய பணக்காரர்களில் ஒருத்தனாயிட்டான். அடுத்த இப்போ அமா கட்சிக் காரனுங்க கொள்ளையடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க. இதில பாவப் பட்டது வாயில்லா ஜீவன்களான பொது சனம்தான்.

  ReplyDelete
 6. திருட்டில், ஏமாற்றில் காண்பிக்கிற சாமர்த்தியத்தை, புத்திசாலித்தனத்தை நல்ல விஷயங்களில் இவர்கள் காண்பித்திருந்தால்... ஹும்! அனல்மூச்சு விடத்தான் முடியுது. பாவம்பா மிஸ்டர் பொதுஜனம்!

  ReplyDelete
 7. தல சொட்டைக்கும் நரைக்கும் வித்தியாசமிருக்குது:)

  ReplyDelete
 8. ivalo periya kathai tevaai thaanah oru oorukae sothu seakuravan periyavanah ila oru streetku sothu seakuravan periyavanah.....aga motham namaku bulb hayo pavam powercut ...... vada pochae...

  ReplyDelete
 9. ivalo periya kathai tevaai thaanah oru oorukae sothu seakuravan periyavanah ila oru streetku sothu seakuravan periyavanah.....aga motham namaku bulb hayo pavam powercut ...... vada pochae...\\\ 'டமிலச்சி' ... பேருக்கான அர்த்தம் விளங்கிடுச்சி!!

  ReplyDelete
  Replies
  1. nandri thola tamilil muyalkirane... tamilai kulai panum ennam ilai enaku terintha thanglish pesukirne.....

   Delete

  2. நீங்க ஏன் அவ்வளவு கஷ்டப் படனும் இந்த சுட்டிக்குப் போங்க, தமிழில் தட்டச்சு பண்ணி காபி, பேஸ்ட் பண்ணி அனுப்புங்க.
   http://www.google.com/transliterate/tamil

   இதோ நீங்க எழுதியை அப்படியே அடிச்சா என்ன வருது பாருங்க!!

   நன்றி தோழா தமிழில் முயல்கிரனே... தமிழை குலை பண்ணும் எண்ணம் இல்லை எனக்கு தெரிந்த தங்க்லீஷ் பேசுகிறேனே.....

   இதில் குலை என்பது கொலை ஆகா இருக்க வேண்டும், மற்றவை கிட்டத் தட்ட, ஒ.கே. அடுத்த முறை இதை முயற்சி பண்ணுங்க. நீங்க பிரபலபதிவர் தமிழச்சின்னு நினைச்சிட்டேன், சாரி......

   Delete
  3. நன்றி தோழரே ....!

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog