Wednesday, May 16, 2012


ஜாமினில் வெளிவந்த ராசா சொல்லாத நிர்வாண (அனுபவ) உண்மைகள்.


கொள்ளை அடிக்கும் போது மட்டும் கூட்டு சேர்ந்து ப்ளான் பண்ணி சந்தோஷமாக கொள்ளை அடித்தவர்கள். மாட்டிக் கொண்டதும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தாங்கள் மட்டும் வெளி வருவதற்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் "உடல் உறவுக்கு முன்னால் நிர்வாணமாக ஆக ஒருவருக்கொருவர் சந்தோஷத்தில் உதவிக் கொள்வார்கள். ஆனால் உடல் உறவு முடிந்த பின் அவரவர் உடைகளை அவரவர்தான் தேடி அணிந்து கொள்ளவேண்டும்" என்பது போல இருக்கிறது.

இது தான் ராசாவின் அரசியல் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது.

இதில் இருந்து ராசா மட்டுமல்ல நாமும் கற்று கொள்ளும் நீதி : In life no one helps you, Once you fucked up என்பதுதான்.


ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராசாவின் "பெயில்' மனு விசாரணைக்கு வந்தபோது,  நீதிபதி பெரிய தொகையை ஈடாகக் கொடுக்க உத்தரவிட்டபோது, அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் தலையைச் சுற்றியதாம்.  அதாவது பரவாயில்லை மேலும் இரண்டு பேர் அதே தொகைக்கு இவருக்காக உறுதி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு. ஜாமின் தொகை தலா 20 லட்சம் ரூபாய் கட்ட வேண்டுமென்ற பரபரப்பு கிளம்பியபோது, யார் கட்டுவது என்ற கேள்வி எழுந்தது.

கனிமொழிக்கு ஜாமின் தொகை கட்ட, போட்டா போட்டியே நடந்தது. ஆனால், ராஜாவுக்கு நேற்று முன்தினம் யாரும் தானாக முன்வரவில்லை; மாறாக பலரும் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தி.மு.., தலைமை உத்தரவின் பேரிலேயே, திருச்சி சிவாவும், கள்ளக்குறிச்சி ஆதிசங்கரும் முன்னிறுத்தப்பட்டு,அதன் பின் இவர்கள் சார்பில் ஜாமின் தொகைக்கு பொறுப்பு ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது


ஜாமீன் தொகையை யார் கொடுப்பது என்று நீதிமன்ற வளாகத்தில் நடந்த விவாதம் பாவம் அவரை "' என்று அலற வைத்துவிட்டதாம். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்ணம்மா' என்று சோக கீதம் இசைக்காத குறையாகச் சோர்ந்து போய்விட்டாராம்.

இவர் ஒழுங்காக வக்கில் தொழில் பண்ணியிருந்தால் இந்த நிலமைக்கு வந்து இருப்பாரா என்ன? அரசியல் என்ற சாக்கடையை சந்தனம் என்று நினைத்து ஏமாந்ததால்தான் இவருக்கு இந்த நிலமை.

சிறை வாழ்க்கை  இவருக்கு மிக நல்ல அனுபவத்தை கொடுத்து இருப்பதால் இவர் அரசியலைவிட்டு வக்கில் தொழிலுக்கு  வந்து வாழ்க்கையில்   வெற்றி பெற்று மிகவும் புகழ் பெற எனது வாழ்த்துக்கள்


16 May 2012

6 comments:

  1. அனைவருக்குமான அருமையான கருத்து
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஐயோ பாவம் ராசா.... வேறென்ன சொல்ல...

    ReplyDelete
  3. இந்த கருமத்துக்குதான் எனக்கு அரசியலே பிடிக்காம போச்சு

    ReplyDelete
  4. ஒன்னேமுக்கால் லட்சம் கோடி அடிச்சவருக்கு ஜாமீன் பணம் கட்ட ஆளிலையா? பாவம் பணம் இருந்தும் பயன்படாதது இவருக்குதான்

    ReplyDelete
  5. நீங்களும் இப்படி தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

    ReplyDelete
  6. அட அரசியல் வேணாம்பா வம்பு...சாக்கடை என்றாங்க சந்தனம் என்றாங்க...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.