Wednesday, May 9, 2012

அமெரிக்காவிற்கு வேலைக்கு வந்த  வடிவேலு.  
நடந்தது என்ன? (நகைச்சுவை)


சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நம்ம வடிவேலு என்னடா பண்ணுவது என்று யோசித்து கடைசியில் அமெரிக்கா செல்ல முடிவு எடுத்தார். அதற்காக யாரை தொடர்பு கொள்வது என்று நெட்டில் ஸர்ச் பண்ண ஆரம்பித்த போது இறுதியில் அவர் ஊருக்காரர் ஆன மதுரைத்தமிழன் என்பவர் நடத்தும் அவர்கள்...உண்மைகள் வலைத்தளத்துக்கு வந்து அடைந்து அதை படித்து நம்ம மாதிரி ஒரு புத்திசாலி அமெரிக்காவில் இருப்பதை அறிந்து அவரை போனில் தொடர்பு கொண்டார்

வடிவேல் : மதுரைத்தமிழனுக்கு போன் செய்து ரிங் டோன் போய் கொண்டிருப்பதை கேட்டதும் மனதுக்குள் நினைத்து கொண்டார். என்னடா இந்த மதுரைத்தமிழன் எப்ப போன் செய்தாலும் எடுக்க மாட்டேங்கிறான். பிள்ளையாரப்பா அவன் இந்த தடவை போன் எடுத்தால் உனக்கு ஒரு ஜெனரேட்டரும் ஒரு ஃபேனும் வாங்கிதரேன் என்று வேண்டிக் கொண்ட மறு நிமிடமே மதுரைத்தமிழன் போனை எடுத்தார்.

மதுரைத்தமிழன் : ஹலோ..ஹலோ..
வடிவேல் : ஹலோ..ஹலோ.. மதுரைத்தமிழனா? தம்பி நல்லா இருக்கியப்பா...நாந்தான் வடிவேலு பேசுறேனப்பா...அப்பா தம்பி போனை வைச்சுடதப்பா...உன்னால எனக்கு ஒரு உதவி வேண்டுமப்பா...நாமெல்லாம் ஒரே ஊருக்காரன் என்பதால்தான் கேட்கிறேனப்பா நீ மட்டும் மாட்டேனு சொல்லிடாதப்பா.
மதுரைத்தமிழன் : அண்ணே சொல்லுங்கண்னே என்ன உதவி வேண்டும்?
வடிவேலு : தம்பி உனக்குதான் நல்லா தெரியுமப்பா நான் அரசியலில் காமெடி பண்ண ஆரம்பிச்சதும் சினிமாவில் வாய்ப்பு போச்சுடுப்பா அதுமட்டுமல்ல அரசியலில் என்னைவிட தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட நல்லாவே காமெடி பண்ணுறாங்கப்பா அதனால அங்கேயும் எனக்கு வாய்ப்பு கிடைக்கலைப்பா அதனால எல்லா வீணா போறவங்களும் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகிடறாதாக கேள்விப்பட்டேனப்பா எனக்கு ஒரு வழி பண்ணுப்பா?

மதுரைத்தமிழன் : (மதுரைத்தமிழனின் மைண்ட் வாய்ஸ் அட நாம் வீணாப்போனவன் என்பது இந்த் நெட்வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிஞ்சு போய்டுச்சே ஹும்,...)  அண்ணே கவலைபாடாதிங்க அண்ணே உங்களுக்கு ஒரு நல்ல வழி பண்ணுறேன்.

வடிவேலு : தம்பி எனக்கு ஒரு நல்ல வேலைகிடைக்குமப்பா என் தகுதிக்கு என்ன வேலை கிடைக்கும் தம்பி

மதுரைத்தமிழன் : அண்ணே உங்க அரசியல் காமெடியை நான் பேப்பரில்  போன தேர்தல் அப்ப படித்து பார்த்தேன்.நல்ல இருந்துச்சுண்ணே.. இங்க அமெரிக்க அதிபருக்கு தேர்தல் வரப்போகுது . ஒபாமா நம்ம நெருங்கிய நண்பர் அவர்கிட்ட சொல்லி அவரின் கட்சிக்கு உங்களை கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்க ஏற்பாடு செய்கிறேன் நீங்க முடிஞ்சா கலைஞர்கிட்ட ஒரு சிபாரிசு கடிதம் வாங்கி சீக்கிரம் அனுப்புங்க மத்ததை நான் பார்த்துகிறேன்.

வடிவேலு : தம்பி நீ மகாராசனாக இருக்கனுமப்பா....மதுரைக்காரய்ங்கனா மதுரைகாரய்ங்கப்பா உதவின்னா ஒடி வந்து செய்கிறாங்கப்பா....

சிலமாதம் கழித்து அமெரிக்காவிற்கு வந்து இறங்குகிறார் வடிவேல். அவரை விமானநிலையத்தில் வந்து பார்த்த மதுரைத்தமிழன் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு அறிவுரை வழங்கிவிட்டு அண்ணே எனக்கு நம்ம ஊரில் சில மாதம் வேலை இருக்கிறது. இனிமேல் நீங்கள்தான் சமார்த்தியமாக இங்கு நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இறுதியாக நான் ஊருக்கு போவதால் நான் என் டெலிபோனை கட் செய்துவிட்டேன் நான் திரும்பி வந்த பின் புது லைன் வாங்கிய பின் உங்களை தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி அடித்தேன் பிடித்தேன் என்று ஒடிவிட்டார். வடிவேல் குடி இருந்ததோ அமெரிக்கர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் பகுதி அங்கு இந்தியர்கள் யாருமில்லை.


அடுத்தநாள் காலையில் வடிவேலுவின் பக்கத்து வீட்டில் இருந்த வெள்ளைக்கார அமெரிக்கர் பக்கத்துவீட்டிற்கு வந்த வடிவேலை மரியாதை நிமித்தமாக வரவேற்க்க வடிவேலுவின் வீட்டிற்கு சென்றார். அப்போது வடிவேல் வீட்டின் பின்புறம் 10 கோழிகளை ஸேஸிங் பண்ணி பிடித்து பின் அதை விட்டுவிட்டு மீண்டும் அதையேயே செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த அமெரிக்கர் இது இந்தியர்களின் பழக்கவழக்கம்(Indian custom) போல என்று நினைத்து அதைக் கெடுக்க வேண்டாம் என்று நாளை வந்து பார்ப்போம் என்று சென்றுவிட்டார்.


அடுத்த நாள் காலையில் மீண்டும் வடிவேல் வீட்டிற்கு சென்ற போது வடிவேல் ஒரு கிளாஸில் மூச்சா போய் அதை குடித்து கொண்டு இருந்தார் அதைபார்த்த அமெரிக்கர் இதுவும் இந்தியர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று போல என நினைத்து நாளை வருவோம் என்று கருதி சென்றுவிட்டார்

அடுத்த நாள் காலையில் மீண்டும் வடிவேல் வீட்டிற்கு சென்ற போது அவரைப்பார்த்த வடிவேல் உடனே வீட்டில் இருந்த மாட்டை அருகில் சென்று அதன் மலத்துவாரத்தில் காதை வைத்து  ஏதோ கேட்பது போல நடிக்க ஆரம்பித்தார்.


அதை பார்த்து அருவறுப்பு அடைந்த  வெள்ளைக்காரன் வடிவேல் அருகில் சென்று  மன்னனிக்கவும் ...நான் கடந்த சில நாட்களாக இந்த குடியிருப்பு பகுதிக்கு வந்த உங்களை வரவேற்க வந்தேன். ஆனால் கிரேஸி இந்தியர்களின் பழக்கவழக்கத்தை பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை .. நீங்களும் உங்கள் பழக்கவழக்கமும் என்று கத்த தொடங்கினார்.

அதை கேட்ட வடிவேல் சிறிது குழப்பமடைந்து பின் அவரை நோக்கி யோவ்வ்வ் நிருத்துஐய்யா நிறுத்து ரொம்ப பேசதய்யா அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வந்துரும் கோவம் வந்துரும் என்று பதிலுக்கு கத்தியாவாறே யோவ் இதெல்லாம் அமெரிக்கர்களின் பழக்க வழக்கமைய்யா... பழக்க வழக்கம் என்று சொன்னார்.

அதை கேட்டு அந்த வெள்ளைக்காரர் இது அமெரிக்கர் பழக்கவழக்கமா யாரைய்யா அப்படி சொன்னது என்று சத்தம் போட ஆரம்பிதார்.

அதை கேட்ட வடிவேலு எல்லாம் எங்கள் ஊருக்காரன் மதுரைத்தமிழந்தானைய்யா சொல்லி கொடுத்தான்.

அப்படி என்னய்யா அவன் சொல்லி கொடுத்தான் அதை சொல்லு இங்கிலிஷில் தெளிவாகா கூறு என்றார்.

அதற்கு வடிவேல் மதுரைத்தமிழன் சொன்னான் நீ (உண்மையான அமெரிக்கன் ஆகணுமுமனா)  in order to be a true American, you have to chase chicks, when you get pissed you have to  drunk, and listen to bullshit always. இப்படித்தான்ய்யா எனக்கு சொல்லி கொடுத்திட்டு அந்த மதுரைத்தமிழன் போய்ட்டானய்யா போய்ட்டானய்யா என்று சொன்னான்.\

அதை கேட்டு அந்த வெள்ளைக்காரன் வடிவேலைப் பார்த்து சிரித்தார்....அட என்னங்க நீங்களும் சிரிக்க ஆரம்பித்து விட்டிங்களா....

ஏய் மதுரைதமிழா என்னைய் இப்படி சந்தி சிரிக்க வைச்சிட்டேய்யா...நீ மட்டும் என் கையில் கிடைத்தால்....மவனே விஜயகாந்த் மாதிரி நாக்கை துறுத்தி உன்னை நங்கு நங்குன்னு குத்தல நான் மதுரைக்காரன் இல்லையடா


அப்பசரி நான் இந்த இடத்தை விட்டு ஒடிப்ப்போகிறேன்.........


என்றும் அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய 'மதுரைத்தமிழன்"

டிஸ்கி : நான் படித்த ஆங்கில ஜோக்கை எனது கற்பனையில் மாற்றி எனது வழியில் தந்துள்ளேன்...

9 comments:

 1. இங்கேயும் ஜனாதிபதி தேர்தல் வருதே அதுல முயற்சி பண்ண சொல்லுங்க....!!!

  ReplyDelete
 2. // உனக்கு ஒரு ஜெனரேட்டரும் ஒரு ஃபேனும் வாங்கிதரேன்// சூப்பர்

  நல்ல டைமிங் காமெடி, அது உங்க கற்பனை நு நினைச்சேன். ஆனாலும் படித்ததை அழகை தமிழ் படுத்திய விதம் அருமை.

  படித்துப் பாருங்களேன்
  சென்னையில் வாங்கலாம் வாங்க

  ReplyDelete
 3. நல்ல அங்கில புலமை உங்களுக்கு சகோ. இந்த ஆங்கில அறிவை வெச்சுதான் அமெரிக்காவுல குப்பை கொட்டுறீங்களா?! ஐயோ பாவாம் அமெரிக்கர்கள்

  ReplyDelete
 4. சிரிக்க வைப்பது என்பது எளிதான காரியம் அல்ல . சிறப்பாக பதிவாக்கிய விதம் அருமை .

  ReplyDelete
 5. எதையும் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு செய்யணும்ங்கிரதுக்கு மிஸ்டர்.வடிவேலு வாழ்க்கை உதாரணம்.,

  ஹி ஹி ஹி காமெடி தூக்கல்ண்ணே ..!

  ReplyDelete
 6. சூப்பர் நண்பா

  ReplyDelete
 7. NALLA KARPANAI!

  AANAAL VADIVELU -
  ILLAAMAL CENIMA COMEDY KURAICHALTHAAN ENPATHU-
  UNMAI!

  ReplyDelete
 8. வடிவேலு இருக்கறப்ப சிரிப்புக்கா பஞ்சம். பாவம் வடிவேலு வேல தேடுறதில மும்முரமா இருக்கார்.

  ReplyDelete
 9. இந்த ஆங்கிலத்தில் இப்படி ஒரு அர்த்தம் உள்ளது என்று இப்போதுதான் தெரிகின்றது

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.