Friday, May 18, 2012



அன்னை ஜெயலலிதாவை மதிக்காத அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்

 ஜெயலலிதாவை மதிக்காத அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களா? அப்படி எதுவும் நடந்துவிட முடியுமா? இந்த செய்தி உண்மைதானா? என்று யோசித்து பார்த்தால் அது நூறு சதவிகிதம் உண்மைதான் என்று நிருபணம் ஆகி உள்ளது என்று அவர்கள்...உண்மைகள் வலைதளத்தின் புலனாய்வு துறையினர் மதுரைத்தமிழன்  கையில் அடித்து சத்தியம் செய்கின்றனர்.அதனை உறுதி செய்த பின் தான் இந்த செய்தி முதன் முதலாக இந்த வலைத்தளத்தின் மூலம் வெளியிடப்படுகிறது.



அவர்கள்...உண்மைகள் வலைதளத்தின் புலனாய்வு துறையினர் இந்த மாதம் மே 11ம் தேதியில் இருந்து மே 14 ஆம் தேதி வரை அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை தொடர்ந்து கண்காணித்து வந்த போது அவர்களின் செயலை வைத்து அவர்கள் அன்னை ஜெயலலிதாவை கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. இந்த பதிவை படிக்கும் நீங்களும் கூர்ந்து கவனித்து இருந்தால் உங்களுக்கும் புரிந்து இருக்கும் ஆனால் நீங்கள் கவனிக்க வில்லை ஆனால் இந்த மதுரைத்தமிழன் நன்கு கவினித்து இந்த செய்தியை தருகிறான்.

என்ன மக்காஸ் இன்னும் உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியவில்லையா? இப்போ நான் சொல்லுறேன் அதை கவனமாக படியுங்கள் அப்ப புரியும் இந்த அதிமுக அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை உண்மையில் மதிக்கிறார்களா அல்லது வேஷம் போடுகிறார்களா என்று?


இந்த அதிமுக அமைச்சர்கள் ,எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் மூச்சுக்கு மூச்சு  அன்னை ஜெயலலிதா... அன்னை ஜெயலலிதா என்று சொல்லுகிறார்களே அவர்கள் உண்மையில் ஜெயலலிதாவை அன்னையாக கருதி இருந்தால் அன்னையர் தினம் அன்று ஏன் ஒருத்தர் கூட வாழ்த்து சொல்லி பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து அவரிடம் ஆசி பெறவில்லை. அவர்கள் உண்மையில் அவரை தாயாக மதித்து இருந்தால் அதை அவர்கள் கண்டிப்பாக செய்து இருப்பார்கள்தனே?

அப்படி அவர்கள் செய்யாததால் அவர்கள் ஜெயலலிதாவை உண்மையில் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

இதைத்தான் கடந்த வாரம் முழுவது எல்லாவித ஊடகங்களிலும் அவர்கள்...உண்மைகள் வலைதளத்தின் புலனாய்வு துறையினர் கண்காணித்தனர்.அந்த குழுவினரின் கண்ணுக்கு அதிமுகாவினர் யாரும் அம்மாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்று கண்டுபிடித்தனர்



டிஸ்கி : பாருங்க அடுத்த வருடம் ஜெயா அம்மாவிற்கு வரிசையில் நின்று யார் முதலில் அன்னையர் தின வாழ்த்து சொல்லி பரிசு கொடுப்பது என்று கடுமையான போட்டி நிலவும். நிச்சயம் அடுத்தாண்டு இது நடக்கும். அப்படி நடந்தால் ஜெயா அம்மா தான் பெறும் பரிசில் பாதியை எனக்கு அனுப்பிவைக்க  வேண்டும் என்று இதன் மூலம் வேண்டுகோள் விடுகிறேன்.இதை எந்த அதிமுக அமைச்சர்கள் அல்லது எம் எல் ஏக்கள் படித்தால் அன்னையர் தினம் இனி தமிழ் நாட்டில் "ஜெயா தினமாக" கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் ஆச்சிரியப்படுவதற்கில்லை.



அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய       'மதுரைத்தமிழன்'

4 comments:

  1. மந்திரிகள் பொழைப்பில் கைவைத்துவிட்டீர்களே
    அம்மாவின் கவனத்திற்கு இந்தத் தகவல் போனால்
    அவர்கள் நிலைமை என்னாகும் ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ரமணி சார் தங்களின் வரவுக்கும் உடனடியான கருத்துக்கும் நன்றி

    //மந்திரிகள் பொழைப்பில் கைவைத்துவிட்டீர்களே
    அம்மாவின் கவனத்திற்கு இந்தத் தகவல் போனால்
    அவர்கள் நிலைமை என்னாகும் ?///

    நிலைமை என்னவாகும் என்பதை அடுத்த அன்னையர் தினம் வரை நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டியதுதான். உறுதியாக சொல்லிகிறேன் அடுத்த வருடம் யாரவது ஒருத்தாராவது அன்னையர் தின வாழ்த்து சொல்லி பூங்கொத்து ஜெயலலிதாவுக்கு கண்டிப்பாக கொடுத்து வருவார்கள்

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா என்னத்தை சொல்றது போங்க, என்னமோ சொல்றீக பாப்போம்

    ReplyDelete
  4. ஐயோ சாமி, இட்ந்த பதிவை நான் படிக்கலை. கமெண்டும் போடலை. என் வீட்டுக்கு யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்கப்பா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.