Thursday, May 3, 2012

 

இப்படியும் சிலர் உங்களை எரிச்சல் படுத்தி இருக்கலாம்?


சிலர் கேட்கும் கேள்விகளும் அல்லது அவர்களின் பதில்களும் என்னை சில நேரங்கலில் எரிச்சல் படுத்தி இருக்கு அது போல அது உங்களையும் எரிச்சல் படுத்தி இருக்கலாம். ஆனால் சில நிமிஷங்கள் கழித்து சிந்தித்து பார்க்கும் போது நகைப்பை கொடுக்கலாம் அதை பற்றிய பதிவுதான் இது.


நாம் ரோட்டில் போகும் போதோ அல்லது பஸ்,ரயிலுக்காக காத்திருக்கும் போது நாம் கட்டி இருக்கும் வாட்சை சுட்டிகாட்டி இப்போ மணி என்ன என்று கேட்பார்கள். இதில என்ன எரிச்சல் எங்கீறிர்களா? அப்பறம் என்னங்க மணி என்ன என்று கேட்டா போதாதா நான் சொல்ல மாட்டேனா அது என்னங்க என் வாட்சை சுட்டிகாட்டி மணி என்ன என்று கேட்கறது. நான் என்ன வாட்சு எங்க கட்டிருக்கிறேன்னு தெரியாத மாங்காவா? இவங்களால நான் வாட்சு கட்டிகிற பழக்கததையே விட்டுடேன்.

இந்த மாதிரி கேட்கிற ஆட்கள் கிட்ட நான் நல்ல ஒரு கேள்வி கேட்கனுமுனு நினைப்பேங்க ஆனா போடானு விட்டுறுவேன்.

என்ன அந்த கேள்வினு நீங்க மண்டைய உடைக்க வேண்டாம் நான் இங்கேயே சொல்லிறேன்.

அது என்னன்னா இவங்களுக்கு மூச்சா வந்தா நாம்மகிட்ட வந்து பாத்ரும் எங்க இருக்குன்னு கேட்க போது எனது "அதை" சுட்டிகாடியா கேட்பானுங்க?


அடுத்தாக ஓன்று

நாம் படம் பார்க்க தியோட்டருக்கு போவோம் அப்போது கூட இருக்கும் மனைவியோ அல்லது தோழியோ சில சீன் வரும் போது நம்ம கிட்ட கேட்பாங்க அல்லது சொல்லுவாங்க எங்க அதை பாருங்க அல்லது பாத்தீங்களா என்று அப்ப வரும் பாரு எரிச்சல். ஏம்மா பணம் செலவழிச்சு தியோட்டருக்கு வருவதற்க்கு காரணம் படம் பார்க்கதானே அதைவிட்டுவிட்டு நான் என்ன தரையை அல்லது உன் மூஞ்சியை பார்க்க வந்த மாங்காவா நான் என்று நல்ல கேட்க வரும்( ஆனா கேட்க முடியாதே அப்படி கேட்டா வீட்டுல நாளுநாள் சாப்பாடு கிடைக்காதே)


அடுத்தாக குழந்தை பிறந்ததை சில நாட்களுக்குள் வந்து பார்க்க வரும் பெண்கள் சொல்வதுதான்.. குழந்தையை பார்த்தவுடன் குழந்தை ரொம்ப க்யூட்ட்ட்ட்ட்ட்னு ஒரு பொய் சொல்லுவாங்க பாருங்க அம்மா தாங்காதுடோய்...எந்த குழந்தையும் பிறந்த சில தினங்களுக்கு அழகாக இருக்காது என்பது எல்லோரும் அறிந்ததுதானே?.(குழந்தையை பார்த்தோமா நல்ல ஹெல்தியா பிறந்திருக்கா குழந்தை பெற்றவள் நல்லா இருக்கானு கேட்கிறதை விட்டுவிட்டு )


அதைவிடுங்க பிறந்த குழந்தை அழுகும் போது நாம் அதை தோளில் போட்டு சமாதானப்படுத்தி கொண்டிருபோம். அப்போது யாராவது வந்து குழந்தை எதுக்காக அழுதுங்க என்று நம்மிடம் கேட்பார்கள். அப்பவரும் பாருங்க எரிச்சல் அது யாருக்குடா தெரியும்


அடுத்ததுங்க சில பெண் தோழி அல்லது மனைவியின்னே வைச்சுகுங்களேன் அவங்க வந்து கேட்பாங்க நான் உங்க கூட பேசணுமும் என்று, நாம் ஒகே அதுக்கென்ன நீ தாராளமாக பேசுன்னு அனுமதி கொடுத்துவிட்டு நாம நம்ம வேலைய அக்கடான்னு செய்ய போவோம் அப்ப சொல்லுவாங்க என்னங்க நீங்க கேட்கவேய்ல்லையே என்று...அப்ப எரிச்சல் வரும் பாருங்க ஏய் நீ எங்கிட்ட சொன்னது நீ பேசனுமுதானே நீங்க அதை கேட்கனுமுனா சொன்னே என்று திருப்பி கேட்கலாமுனு தோன்றும் ஆனா அடுத்த வேளை சாப்பாடு என்ற நினக்க்கும்போது எரிச்சலை அடக்கி கொள்ள வேண்டி இருக்கே


அடுத்தாக நாம் டெய்லி பஸ் ஸ்டாப்பில் நம்ம கூட வந்து பஸ் ஏறும் நபர் சில நாள் லேட்டாக வந்து என்னங்க நம்ம பஸ் இன்னும் வரலையாங்கனு கேட்பாங்க பாருங்க. டேய் டேய் வாயில நல்லா வருதுடா பஸ் வந்து இருந்தா நான் ஏண்டா இங்கே நிண்ணுக்கிட்டு இருக்கேன் என்னை பார்த்தா மாங்கா மாதிரியடா தோணுது மாங்காண்னு கேட்க தோணும் ஆனா கேட்க மாட்டேன்


சில பேர் எதுன்னாலும் நேரா கேட்க மாட்டாங்க நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேள்வி கேட்பார்கள்..எரிச்சலில் அவங்ககிட்ட சொல்லனுமுனு தோணும் டேய் அதுதான் ஒரு கேள்வியை கேட்டுடேயே என்று


சில பேர் டிவி ஆன் பண்ணி அவங்களுக்கு பிடிச்ச ஸோ பார்க்க எங்காவது வைத்த ரிமோட் கண்ரோலை அரைமணி நேரம்மா தேடிகிட்டு இருப்பாங்க ஆனா அதற்கு பதிலாக டிவியில் உள்ள பட்டனை தட்டி சேனலை சில நொடிகளில் மாற்றி தனக்கு பிடிச்ச ஸோவை பார்க்காமல் மாங்கா மாதிரி இருப்பதை பார்க்கும் போது நல்லாகவே எரிச்சல் வருமுங்க


இதுக்கு மேல நான் ஏதாவது சொன்னா உங்களுக்கும் எரிச்சல் வந்துரும் அதனால நான் ஒடிப் போகிறேன் .ஆனா நான் திரும்பி வருவேன்ல என் அடுத்த பதிவின் மூலம் மக்கா நீங்க என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது


என்றும் அன்புடன்,

உங்கள் அபிமானதிற்குரிய "மதுரைத்தமிழன்"

6 comments:

  1. ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா முடியல சாமி! நான் போடுற கமெண்ட் வச்சு அடுத்த பதிவ எழுதிருவீங்கலோனு பயமா இரூக்கு

    ReplyDelete
  2. சொன்னதெல்லாம் மிகச் சரி
    நாங்கள் அன்றாடம் சந்திக்கிற கேள்விகள்தான்
    அதையே அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    நன்றாக எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. குற்றாலத்துல ‘குளிக்க’ வந்தீயளா ? -ன்னு கேட்பாங்க. தியேட்டர்-ல படம் பார்க்க வந்தியளா-ன்னு கேட்பாங்க. கோவில்-ல சாமி கும்பிட வந்தியளா-ன்னு கேட்பாங்க... அபியும் நானும் பிரகாஷ்ராஜ் மாதிரி பதில் சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  4. enna sollanum-
    comment podanum-
    athaiyum neengale sollunga!

    ReplyDelete
  5. சில என்னை போன்ற திக்கு வாயர் மற்றும் சரியாக பேச முடியாதவர்கள் சொல்ல வரும் விஷயத்தை குறிப்பால் உணர்த்த தலையை அசைத்தோ கண்களால் பேச முனைவர்.

    ReplyDelete
  6. the last but most important question naan loosah ila antha madurai tamilanah..... elorumae ipd thaanah unga kita pesanumna puriyatha taniya kaekanumnu solanuma........ apo varum parunga enaku yerichal.......isssssssssssss its al in the game......but u make me to laugh thola thank u

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.