Thursday, May 24, 2012


http://avargal-unmaigal.blogspot.com/


நினைத்ததும்  ஆனால் இப்போது நடப்பதும்

நாம் நினைப்பது ஓன்றாக இருக்க, நடப்பது வேறொன்றாக இருப்பது சில நேரங்களில் வியப்பையும், சிரிப்பையும் தரும். அந்தக் காலத்தில் நாம் நினைத்த சில எண்ணங்கள், கருத்துக்கள் பல இன்றைய மக்களுக்கு வியப்பையும், சிரிப்பையும் அதே சமயத்தில் சிந்திக்கவும் வைக்கின்றன என்பதற்கு  சில உதாரணங்களை கூறலாம்.

உலகில் மொத்தம் ஐந்து கம்ப்யூட்டர்களை விற்கச் சாத்தியமும், சந்தையும் உள்ளது என்று தாமஸ் வாட்ஸன், IBM நிறுவன சேர்மன், 1943 ல் சொன்னார். ஆனால் நடந்தது ?

எல்லாருடைய வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்ற அவசியத்துக்கான காரணமே இல்லை என்று - கென் ஒல்சன், பிரசிடெண்ட் , சேர்மன் & பவுண்டர் ஆஃப்  டிஜிடல் எக்யுப்மெண்ட் கார்ப்ரேஷன்  1977 சொன்னார் ஆனால் நடந்தது ?.

மைக்ரோசிப்புகள் குறித்து  இது எதற்குத்தான் பயன்படும்.. ?` என்று IBM நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் , 1968 கேட்டார். ஆனால் நடந்தது.?


நான் மேலே சொன்னது எல்லாம் உலக அளவில் நடந்தது. இப்போது நாம் தமிழக அளவில் நினைத்ததும் நடப்பது என்ன என்று பார்ப்போம்.

தமிழர்களின் முக்கிய உணவாக  இட்லி தோசை என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் இப்போது  மேலை நாட்டினரது  பிட்ஸா, பர்கர்  இப்போது முக்கிய உணவாக இடம் பிடித்திருக்கிறது.

கலைஞரை அவர் கட்சியினர் மட்டுமல்ல எதிர் அணியினரும் சிறந்த தலைவனாகவும் சாணக்கியனாகவும்  நினைத்து இருந்தார்கள் ஆனால் இப்போது அவர்களின்  மனநிலையில்  (எதிர் அணியினர் மட்டுமல்லாமல் தன் கட்சியினரும்) கேலிக்குரிய தலைவனாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ( இந்த தள்ளாத வயதிலும் கலைஞரிடம் இன்னும் மாறாதது மற்றும் எனக்கு பிடித்தது அவரின் சுறுசுறுப்பு அதுதான் என்னை வியக்க வைக்கிறது. அது போல நம் தமிழில் வலைத்தளம் நடத்தும் முதியவர் என்னால் "குறும்புகாரஇளைஞர்" என்று அழைக்கபடும் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் சுறுசுறுப்பும் எனக்கு பிடித்தவை)


ஜெயலலிதா படித்தவர் திறமையானவர் தமிழகத்தை வளமான எதிர்காலத்திற்கு அழைத்து செல்வார் என்று நினைத்திருந்தனர் ஆனால் இப்போது தமிழக மக்கள் அவர் இப்போது இருண்ட காலத்திற்கு அழைத்து செல்வதாக கருதுகின்றனர்.

கஷ்டப்பட்டவர் நல்லமனதுடையவர் நடிப்பால் உயர்ந்தவர் ரஜினிகாந்த் தலைவராக வந்து தமிழக மக்களை கஷ்டங்களில் இருந்து காப்பார் என மக்கள் நினைத்தனர் ஆனால் இப்போது அவர் குழந்தைகள் படுத்தும் கஷ்டங்களில் தவித்து கொண்டிருக்கிறார்.

பக்கத்துவீடுகளில் வம்பும் வாதமும் செய்து கொண்டிருந்தவர்கள் நம் தமிழக பெண்கள் ஆனால் இப்போது பேஸ்புக்கின் மூலம் உலக அளவில் செய்து கொண்டிருக்கின்றனர்.( பெண்கள் என்றால் உங்களுக்கு கிண்டலாக போச்சா மதுரைத்தமிழா நாங்கள் எல்லாம் அப்படி வம்பு செய்பவர்கள் இல்லை என்று சொல்லி என்னிடம் வம்பு செய்யவர்களுக்காக எனது தளத்தில் comments காலம் திறந்து இருக்கிறது என்பதை இங்கே நினைவு படுத்துகிறேன்)

பக்கத்து தெருக்களில் உள்ள பெண்களை பார்த்து ஜொள்ளுவிட்டவர்கள் நம் தமிழக ஆண்கள் ஆனால் இப்போது உலக அளவில்  உள்ள பெண்களை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.( அப்ப நீங்க பெரிய ஜொள்ளா என்று யாருடா அது சவுண்ட விடுறது. நானெல்லாம் "நித்தி" மாதிரிடா நான் ஜொள்ளு எல்லாம் விடமாட்டேன்...ஆமாம் சொல்லிப்புட்டேன்..)


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்.

7 comments:

  1. டேஷ் போர்டில் காட்டப்பட்டுள்ள கார்ட்டூன் படத்தைப்பார்த்து வாய்விட்டுச் சிரித்தபடி உள்ளே வந்தேன். தங்கள் எழுத்துக்களையும் படித்தேன்.

    எல்லாம் OK நடுவில் என்னையும் வம்புக்கு இழுத்துள்ளீர்களே. நான் குறும்புக்கார இளைஞனா? நீங்கள் குறும்புக்காரரா?

    //அது போல நம் தமிழில் வலைத்தளம் நடத்தும் முதியவர் என்னால் "குறும்புகாரஇளைஞர்" என்று அழைக்கபடும் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் சுறுசுறுப்பும் எனக்கு பிடித்தவை)//

    என் ஒரிஜினல் குறும்புகளை வெளியிட விரும்பாமல் மனதிலேயே அடக்கி ஒடுக்கி பெட்டிப்பாம்பாக உள்ளேனாக்கும்.

    ஏதோ JUST 1% or 2% அவ்வப்போது அதுவும் ஒரு நகைச்சுவைக்காக இலைமறை காய்மறையாகச் சொல்லியிருப்பேன். அவ்வளவு தான்.

    முழுவதும் நான் வெளியிட ஆரம்பித்தால் போச்சு. மற்றவர்களெல்லாம் துண்டைக்காணும் துணியைக் காணும்னு ஓட வேண்டியதாகிவிடுமாக்கும்.

    எனினும் என்னை இன்னும் நினைவில் வைத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  2. ///ஜெயலலிதா படித்தவர் திறமையானவர்///

    பத்திரிக்கை காரர்கள் சொல்வதை திரும்பி திரும்பி சொல்லி உண்மையாக்குகிரீர்கள்! நீங்களுமா???

    கருணாநிதி படித்து 8-வது வரை; விஜயகாந்த படித்தது 9-வரை; ஜெயலலிதா படித்தது 10-வது வரை! Up to matriculation; equivalent to SSLC. 16-வயதில் நடிக்க வந்து விட்டார்கள்!

    இது தான் உண்மை!

    ReplyDelete
  3. @ கோபலகிருஷணன் சார்

    உங்களின் வருகைக்கும் உங்களின் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.


    //என் ஒரிஜினல் குறும்புகளை வெளியிட விரும்பாமல் மனதிலேயே அடக்கி ஒடுக்கி பெட்டிப்பாம்பாக உள்ளேனாக்கும்.///

    மனதில் தோன்றும் நல்ல கருத்துக்களையும் எண்ணங்களையும் குறும்புத்தனங்களையும் யார் மனதையும் பாதிக்காமல் எழுதவே இந்த வலைத்தளங்கள் உள்ளன. அதிலும் முக்கியமாக நீங்கள் உங்களைப் பற்றிய உண்மையான விபரங்கள் இல்லாமல் வேறு ஒரு கற்பனை பெயரில் எழுதலாம்.


    உங்களுக்கு தெரியுமா நம் எல்லோருக்கும் அறிமுகமான ஒரு ஆண் எழுத்தாளர் இப்பொழுது ஒரு பெண்ணின் பெயரில் எழுதி புகழ் பெற்று வருகிறார் என்பது.

    அது போல இன்னொரு வலைதள பதிவாளார் பல புனைப்பெயரில் எழுதிவருகிறார்.

    /////நான் குறும்புக்கார இளைஞனா? நீங்கள் குறும்புக்காரரா?/////
    குறும்புக்கார இளைஞனாக நீங்கள் இருக்கும் போது வலைத்தளத்தில் நான் உங்களின் குறும்புகார பிள்ளையாக இருக்கலாம் அல்லவா?

    ///எனினும் என்னை இன்னும் நினைவில் வைத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.//

    நான் யாரையும் மறப்பதில்லை.....

    நன்றி ...வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. @ நம்பள்கி

    உங்களின் வருகைக்கும் உங்களின் மன எண்ணங்களை இங்கு கருத்தாக பகிர்ந்தற்கு நன்றி.

    ///ஜெயலலிதா படித்தவர் திறமையானவர் தமிழகத்தை வளமான எதிர்காலத்திற்கு அழைத்து செல்வார் என்று நினைத்திருந்தனர்//
    நான் தமிழக மக்கள்தான் அப்படி நினைத்திருந்தனர் என்று சொல்ல வந்தேன் நான் நினைதேன் என்று சொல்லவரவில்லை.

    ///ஜெயலலிதா படித்தவர் திறமையானவர்/// பத்திரிக்கை காரர்கள் சொல்வதை திரும்பி திரும்பி சொல்லி உண்மையாக்குகிரீர்கள்! நீங்களுமா??? கருணாநிதி படித்து 8-வது வரை; விஜயகாந்த படித்தது 9-வரை; ஜெயலலிதா படித்தது 10-வது வரை! Up to matriculation; equivalent to SSLC. 16-வயதில் நடிக்க வந்து விட்டார்கள்! இது தான் உண்மை!


    ///ஜெயலலிதா படித்தது 10-வது வரை! Up to matriculation; equivalent to SSLC///

    ஓ ஜெயலலிதா அந்த காலத்து SSLC/ அப்ப ரொம்ப படிச்சவங்கதான்

    //கருணாநிதி படித்து 8-வது வரை; விஜயகாந்த படித்தது 9-வரை//

    பாத்தீங்களா மற்ற தலைவர்களைவிட அதிகம் படித்தவர்தானே?

    ReplyDelete
  5. கருணாநதி அந்த...............க் காலத்து 8-வது...அம்மையார் படித்து இந்தக் காலத்தில் matriculation (SSLC, 10-வது!),ஆகவே, கருணாநதி அதிகம் படித்தவர்!

    ReplyDelete
  6. //உங்களுக்கு தெரியுமா நம் எல்லோருக்கும் அறிமுகமான ஒரு ஆண் எழுத்தாளர் இப்பொழுது ஒரு பெண்ணின் பெயரில் எழுதி புகழ் பெற்று வருகிறார் என்பது.//
    யார் அது? ஒரு க்ளு குடுங்களேன்.

    ReplyDelete
  7. @T.N.MURALIDHARAN
    களுவாக மட்டும் மல்ல வேறு எந்த வழியாகவும் வராது . கோடி கோடியாக கொடுத்தாலும் அது மட்டும் என் வாயில் இருந்து வராது. அவர் அப்படி மாறி எழுதுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் அதை வெளிப்படுத்துவது மிக அநாகரிகம் அதை என்றும் நான் செய்ய மாட்டேன்

    முடிந்தால் நீங்கள் கண்டுபிடியுங்கள்..... இன்னொரு பதிவாளர் வருடம் ஒரு முறை புதிய புதிய ஐடியில் வந்து எழுதுகிறார். அவரையும் முடிந்தால் கண்டுபிடியுங்கள்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.