உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 27, 2011

ஆண்கள் எதிர்பார்க்கும் "அது" ...எது?.."இது" (பெண்களும் தைரியமாக படிக்கலாம்)


ஆண்கள் எதிர்பார்க்கும் "அது" ...எது?.."இது"  (பெண்களும் தைரியமாக படிக்கலாம்)

ஆண்களின் நெஞ்சம்  கல் அல்ல.
ஒரு இளகிய ஆண்மகனின் அழுகுரல்
ஆண்கள் எதிர்பார்க்கும் "பரிசு
 
ஒரு பதிவுக்கு இத்தனை தலைப்புகளா என்று கேட்காதீர்கள்.முதல் தலைப்பு பதிவாளர்களை "கவர்ந்து" இழுக்கவும். இரண்டாவது ஆண்களின் இதயமும் மென்மையானது என்று தெரிவிக்கவும். முன்றாவது ஆண்களும் அழுவதுண்டு என்பதையும் நான்காவது அவர்கள் எதிர்பார்க்கும் 'பரிசை" தெரிவிக்க மட்டுமே. சரி மேலே படியுங்க.....

இன்று காலைப் பொழுதில் வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்டு மழைத் தூரிக்  கொண்டிருந்தது அது போலத்தான் என் மனமும் இன்று காலைப் பொழுதில் சோகமுட்டத்துடன் தொடங்கியது. வழக்கம் போல குழந்தையை பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்து பஸ் ஸ்டாப்புக்கு சென்று குழந்ததையை வழி அனுப்பி வந்தேன்.  மனைவியோ  3 Way கான்பரென்ஸ் காலில் ஆஃப்சோர்ஸில் உள்ள இந்தியர்களுடனும் ஆன் சைட்டில் உள்ள வெள்ளைக்காரனுடனும் பேசிக் கொண்டிருந்தாள். இன்று எனக்கு விடுமுறை நாள் (வியாழன் எப்போதும் எனக்கு விடுமுறை)ஆனதால் நெட்டிடம் தஞ்சம் அடைந்தேன்.சரி மனசுதான் சரியில்லை அதனால  விகடன் வலைதளம் சென்று தமிழக அரசியல் பற்றி படிப்போம் அது மிகவும் காமெடியாக இருக்கும் என்று படிக்க ஆரம்பிதேன். எப்படியோ கடைசியில விகடனின் குட்ப்ளாக் பகுதிக்கு சென்றேன். அங்கே என்னடா என்றால் மறைந்த  ஸ்டீவ் ஜாப் பற்றி ஒரே புராணமாக இருந்தது. அதில் ஒரு பதிவாளரின் பதிவை படிக்கும் போது என் விரல் தவறி ஏதோ ஒரு லிங்கை கைதவறுதலாக அழுத்த அது சாரு நிவேதாவின் தளத்துக்கு சென்றது . அங்கே அவரின் வழக்கம் போல ஒப்பாரி வைத்து இருந்தார். ஒரு 300 பேர் வாழ்த்து  ஆன்லைனில் அனுப்பி இருந்தாகவும் (வாழ்த்து மட்டும் நோ கிப்ட்) தீபாவளி காலையில் பசி யோட இருப்பதாகவும் பதிவு போட்டிருந்தார். பின் அதை பார்த்து பரிதாபட்ட ஒரு வாசகி விருந்துக்கு அழைத்தாகவும் கடைசி நேரத்தில் அழைத்தால் என்னவோ கவரம் கருதி செல்லவில்லை என்று அழுது தீர்த்து இருந்தார். நம் தமிழ் மக்கள் மிக மோசம் இப்படி ஒரு இலக்கியவாதியை ஆன்லைனில் அழுக வைக்கிறார்கள்.சரி இந்த அழுகை போது மென்று வேறு ஒரு வலைத்தளம் சென்றால் அங்கு நம் சகோதர வலைப்பதிவாளர்  வெளிநாட்டில் வசிப்பவர் அவரும் "வலிகளோடு திபாவளி" என்று ஒரு சோக பதிவு போட்டிருந்தார் . அதிலிருந்த கடைசி சிலவரிகள் உங்கள் பார்வைக்காக

கொண்டாட்டமில்லாத இந்த ஊரில் அவன் விஷேசம் எனக்கில்லை
என் விஷேசம் அவனுக்கில்லை,
ஆக மொத்தத்தில்
மனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது
எங்களுக்கும் தீபாவளி!இங்கும் சோகமா என்று மன கனத்துடன் பல பதிவுகள் படித்தேன் எல்லாம் சோகமயமாக உள்ளது. இப்போது என் மனைவியும் போன் காலை முடித்து 'பை" என்று சொல்லி ஆபிஸ் போய்விட்டாள்.இன்னும் என் மனம் மிக கனத்துடன்  இருந்தது. சோபாவில் இருந்தவாறே சன்னல் வழியாக வெளியை பார்த்தேன் இன்னும் வானம் அழுது கொண்டு இருந்தது. என் மனமும் சேர்ந்து அழுதது.தீடிரென்று என் கண்களில் இருந்தும் கண்ணீர் தவழ ஆரம்பித்தது. இப்போது நான் அடக்க முடியாமல் தேம்பி அழுகிறேன். இனம் புரியாத சோகத்தில் நான் அழுதேன். ஆனால் வானம் யாருக்காக அழுகிறது என்பது எனக்கு தெரியவில்லை.

ஆட்டம் போட ஆள் கிடைக்கும் இந்த வெளிநாட்டில் அணைக்கவோ ஆறுதல் சொல்லவோ மட்டும் யாரும் கிடைக்க மாட்டார்கள். பெண்களாக இருந்தால் நண்பர்களிடமோ அல்லது தாய்நாட்டில் வசிக்கும் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடமோ போன் செய்து அழுகளாம் ஆனால் ஆண்களாக பிறந்தவர்களுக்கு உள்ள ஒரே வழி யாரும் இல்லாத போது தனிமையில் அழுவதுதான்.

அம்மா இருந்தால் அம்மாவுக்கு போன் செய்து அழுகலாம் அதுவும் இல்லாத நான் தனிமையில் அழுது விட்டு கடவுளிடம்  எனக்கு இந்த பரிசை தருவாயா என்று ஏக்கத்துடன்  கிழ்கண்டவற்றை கேட்டேன்.தலை சாய்த்து படுக்க ஒரு தாயின் மடி போன்றும்
தலைமுடியை கோதிவிட குழந்தையின் பட்டு விரல்கள்  போன்றும்

சாய்ந்து கொள்ள ஒரு காதலியின் தோள் போன்றும்
பொறுமையுடன் பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தைகளின் செவிகள் போன்றும்
கைகளை பொதித்துக்கொள்ளும் காதலர்களின் கைகள் போன்றும்
முகம் புதைக்க ஒரு காதலனின் நெஞ்சு போன்றும்
கண்ணீர் துடைக்கும் தோழியின் விரல்கள் போன்றும்
அனணத்து முதுகு தட்டும் நண்பர்களின் தோழமை போன்றும்
ஆதரவான அன்னை தெரசாவின் வாய் மொழிகள் போன்றும்
கேலி கிண்டல் செய்யா பிறந்த குழந்தைகளின் மனம் போன்றும்
பலரிடம் 'காசிப்" பரப்பாத ஊமைகளின் இதழ்கள் போன்றும்
 உள்ள பெண்  வேண்டுமென  ஆண்டவனிடம் கேட்டேன்.

இவ்வளவையும் கேட்ட பின் நான் யோசித்து பார்த்த போது  (அட அந்த அளவுக்கு அறிவு எல்லாம் இருக்கானு கேட்காதீங்க) நான் ஓரு பேராசைகாரன் என்று மட்டும் தெரிந்தது. கடவுளோ நான் கேட்பதற்கு  உடனே பதில் சொல்ல  மாட்டார் என்பதால் அதனை கடவுளிடம் இருந்து வாபஸ் வாங்கிவிட்டு உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் சொல்லுங்கள்.  நான் பேராசைக்காரனா? நான் கேட்டால் கிடைக்குமா?டிஸ்கி :  நமது கவலைகளை சந்தோசங்களை,படித்தவைகளை, ரசித்தவைகளை எல்லாம் அம்மாவிடமும் கடவுளிடமும் சொல்வது போல இந்த வலைத்தளத்தில் கொட்ட முடிவதால் கூகுல்காரனுக்கு மிகவும் நன்றி சொல்லனும்.

2 comments :

  1. மனைவி இருக்காங்களே !!!

    ReplyDelete
  2. தனிமை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கொல்லும் என்பதை இன்று தான் உணர்ந்தேன்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog