Friday, October 7, 2011

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்

தமிழக மக்களுக்காக வலைப் பதிவாளர் அமைத்த அரசியல் கொலு...(நவராத்திரி ஸ்பெஷல் 2011)



தமிழ் பதிவாளர்களே உங்களுக்காக நான் அமைத்த அரசியல் கொலு. இந்த கொலுவில் தமிழகத்து  எட்டு அரசியல் சாமிகளை நான் இங்கு உங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளேன். இந்த சாமிகளை கும்பிட்டால் நமக்கு கிடைக்கும் பலன் கள் என்னவென்பதை விளக்கியுள்ளேன்.

இவர்களை வணங்கி ஆசிர்வாதகங்களை அள்ளி செல்லுங்கள்..இந்த கடவுள்கள்தான் தமிழகத்தை காக்கும் கடவுள்கள்.



1. ஆணவ சாமி : இந்த சாமியின் ஆசிர்வாதம் கிடைக்க இந்த சாமியின் காலடியில் விழுந்து வணங்க தெரிந்து இருக்க வேண்டும்.  எந்தளவுக்கு இந்த சாமியின் காலடியில் விழுந்து கிடக்கிறீர்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.



2. கமிஷன் சாமி : இந்த சாமியின் ஆசிர்வாதம் கிடைக்க  கமிஷன் கொடுக்க வேண்டும். நீங்கள் எப்படி வேண்டுமானலும் சம்பாதிக்கலாம். ஆனால் உங்கள் வருமானம் அதிகரிக்க நீங்கள் எந்த அளவு கமிஷன் கொடுக்கிறிர்களோ அதற்கு ஏற்றமாதிரி நீங்கள் சம்பாதிக்கலாம். இந்த சாமிக்கு ஏதிரான சாமி ஆணவ சாமி. இந்த சாமியை கும்பிடுபவர்களை ஆணவஸ் சாமிக்கு சுத்தமாக பிடிக்காது. சில சாமர்த்தியவாதிகள் இந்த இரண்டு சாமிகளை  மறைமுகமாக வணங்கி எல்லா ஆசிர்வதங்களையும் பெற்று செல்வார்கள்.



3.ஆறுதல் சாமி :  உங்கள் குடும்பத்தில் யாராவது இறந்து அந்த துக்கத்தில் இருந்தால் இந்த சாமியிடம் சென்றால் உணர்ச்சிவசப்பட்டு உங்களுடன் சேர்ந்து கண்ணிர்விட்டு ஆறுதல் தரும்.



4. மகராச சாமி : இந்த சாமியின் கையால குட்டுபட்டால் நீங்கள் மகராசனாக வாழலாம். இந்த சாமியிடம் எல்லா நேரத்திலும் குட்டு வாங்க முடியாது. அதனால் இந்த சாமி எப்போது "தீர்த்தம்" அதிகமாக அருந்தியிருக்கிறது என்று பார்த்து அந்த நேரத்தில் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.



5. காமெடி சாமி :  மனம் நொந்து போனவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் இந்த சாமி சொற்பொழிவு ஆற்றும் போது சென்று கேட்டு வந்தால் வாய்விட்டு சிரித்து மனப்பாரம் எல்லாம் குறைந்து வருவார்கள்.



6.காவடி சாமி :   தமிழகத்தில் நல்ல பதவி வேண்டுமென்றால் இந்த சாமியின்  வழியை பின்பற்றி டில்லிக்கு அடிக்கடி காவடி எடுத்து டில்லி அம்மாவை வணங்கிவந்தாள் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.



7. உண்டி சாமி :  ஏழை மக்களை உழைக்காமல் காக்க உண்டி வழங்கி உண்டி குலுக்கி வாழ்க்கையை நடத்தி கொடுக்கும் சாமி.



8. கலக சாமி :  பிடிக்காத மாமியார் மருமகள் இருந்தால் இந்த சாமியிடம் முறையிட்டால் உங்கள் சார்பாக பெரிய கலகம் ஊட்டி உதவும் சாமி. இது எந்த நேரத்தில் எந்த பக்கம் சார்ந்து இருக்கும் என்று தெரியாத சாமி. இந்த சாமியும் கும்பிடும் ஒரு பெரிய சாமி உண்டு. அதன் பெயர் அமெரிக்காசாமி. அமெரிக்கா சாமியின் மறைமுக அருள் பெற்றசாமி இது.





எல்லா சாமிகளின் ஆசிர்வாதத்தை பெறுவது எப்படி என்பதை தெளிவாக விளக்கியுள்ளேன். இந்த சாமிகளிடம் ஏற்கனவே ஆசிர்வாதம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் உங்கள் அனுபவத்தை பின்னுட்டமாக இடலாம்.


6 comments:

  1. எல்லாம் அன்னிய சதிதான். அமெரிக்காவில் இருந்தால் தமிழ்நாட்டு சாமிகளை பற்றி எழுதுவீர்களா?

    ReplyDelete
  2. பலே ஆ(சாமிகள்) படம் கலக்கல்..

    ReplyDelete
  3. நீங்க அமைச்ச கொலு எனக்கு உண்மையிலேயே பிடிச்சு போச்சுங்க, ஹி ஹி ஹி!!!!!

    ReplyDelete
  4. ஹூஹும் சிரிக்க கூடாது...

    ம்ம்ம்ம் சொல்றேன்ல?

    சிரிப்பை கட்டுப்படுத்தமுடியலை... கொலுவை பார்த்து சிரிக்கலைப்பா.. ஆனா நீங்க எழுதின ஒவ்வொரு படி சாமிக்குமான கருத்து சிரிக்க வெச்சுட்டுது...

    பத்திரம்பா.... எல்லாரும் பயங்கரமான ஆளுங்க.. ஒன்னு கூட சாஃப்ட் நேச்சர் இல்லாதவங்க..

    என்ன ஒரு தைரியம் :) இவங்களையே கொலுப்படில நிறுத்தி வெச்சதும் இல்லாம சுண்டல் விநியோகம்போல செம்ம கருத்து :)

    ரசிக்கவைத்த சுவாரஸ்ய பகிர்வுப்பா...

    ReplyDelete
  5. @சாகாம்பரி
    @சூர்யஜீவா
    @ரெவெரி
    @ரா.செழியன்

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. @மஞ்சுபாஷினி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    ///ஹூ.. எல்லாரும் பயங்கரமான ஆளுங்க.. ஒன்னு கூட சாஃப்ட் நேச்சர் இல்லாதவங்க.. என்ன ஒரு தைரியம் :) இவங்களையே கொலுப்படில நிறுத்தி வெச்சதும் இல்லாம சுண்டல் விநியோகம்போல செம்ம கருத்து :)ரசிக்கவைத்த சுவாரஸ்ய பகிர்வுப்பா...//

    நான் போட்டது நகைச்சுவை பதிவு. இங்கு நான் யாரையும் தரக் குறைவாக எழுதவில்லை. நான் வசிக்கும் நாட்டில் பேச்சுரிமை எழுத்து உரிமைக்கு எந்தவித தடையும் இல்லை. நான் மிக அமைதியானவன் . மேலும் நான் எதிலும் அதிக பற்று இல்லாதவன் ஆசை அதிகம் கிடையாது.அதே நேரத்தில் யாருக்கும் பயந்தவன் அல்ல.

    இங்கு எனக்கு பிடித்த தலைவர்களையும் கிண்டல் செய்து உள்ளேன். எனக்கு பிடித்த தலைவர் யார் என்று இங்கே சொன்னால் எனக்கு என்று தனிமுத்திரை குத்திவிடுவார்கள் அதனால் அவர்களையும் இங்கே கிண்டல் செய்து இருக்கிறேன்.

    இந்த பதிவை பட்டிப்பவர்கள் யாராக இருந்தாலும் சிறிது யோசித்து சொல்லுங்கள் இதில் தரக் குறைவு என்று ஏதும் உள்ளதா என்று?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.