புத்தாண்டு பிறப்பதால் அல்லது பிறந்ததால் நம் வாழ்க்கையில் மாற்றும் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. புத்தாண்டு நமக்கு ஞாபகப்படுத்துவதெல்லாம் அடேய் முட்டாள்களே ஒரு வருடம் போய்விட்டது இன்னொரு வருஷம் ஆரம்பித்து இருக்கிறது அதை உனக்கு ஞாபகப்படுத்தவே நான் பிறந்து இருக்கிறேன் என்று சொல்வது போலத்தான் எனக்கு தோன்றுகிறது
இந்த ஆண்டு நான் யாருக்கும் புத்தாண்டு தின வாழ்த்துக்களைத் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை சொல்லும் மனநிலையிலும் இல்லை அதுமட்டுமல்லாமல் என் வாழக்கையில் முதன் முறையாகப் புத்தாண்டு அன்று வேலைக்குச் சென்றது இந்த ஆண்டில்தான்
நான் படித்து முடித்து சென்னைக்கு வந்ததிலிருந்து புத்தாண்டிற்கு முன் இரவு கொண்டாட்டங்களிலும் புத்தாண்டு அன்று குளித்துவிட்டு வடபழனி முருகன் கோவில் அல்லது திருப்பளிகேன் பார்த்தசாரதி கோவில் அல்லது சர்ச்சுக்கு நண்பர்களுடன் செல்வது வழக்கம் அதன் பின் அமேரிக்கா வந்தவுடன் அது போலக் காலையில் தேவாலயத்துக்குப் போய்விட்டு மதியம் நீயூஜெர்ஸியில் உள்ள ப்ரிஜ்வாட்டார் என்று ஊரில் உள்ள பாலாஜி கோவிலுக்கும் செல்வது வழக்கம்
ஆனால் கொரோனா எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டுவிட்டது தேவாலயமும் கோவிலும் திறந்து இருந்தாலும் இந்த முறை கூட்டம் கருதிச் செல்லவில்லை அதுமட்டுமல்ல இந்த வரும் வீட்டிலும் வழக்கமாக நண்பர்களின் குடும்பங்களை அழைத்துக் கொண்டாடும் நாங்கள் அப்படியும் செய்யவில்லை ஜஸ்ட் ஒரு கேக் வாங்கி கட் செய்து கொண்டாடிவிட்டு அடுத்த நாள் வேலைக்குச் சென்றுவிட்டேன்
ஓரு ஆண்டைக் கடந்து வருவது என்பது அத்தனை சுலபமானதல்ல. ஆனால் 2020 ஆண்டை மட்டும் மிகவும் எளிதாக கடந்து வந்துவிட்டோம் வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம், உறவில் மகிழ்ச்சி, பிரிதல் துயரம் எனப் பலதும் கலந்து வருவது ஓரு ஆண்டு. மனித மனதுக்குக் கணந்தோறும் கணந்தோறும் புதுப்புது மகிழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால், கிடைத்தாலும் அவற்றை மனம் உடனே கடந்துவிடுகிறது. ஆனால் துயரத்தையோ நீண்ட காலம் மனதுக்குள்ளேயே போட்டு புழுங்கிக் கிடக்கிறது. அத்தகைய துயரங்களிலிருந்து மீட்டெடுக்க உதவுபவை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள். மனதைப் புத்துணர்ச்சி பெறச்செய்து வாழ்வை நம்பிக்கையோடு முன்னெடுக்கச் செய்பவை அவை.
இந்த பதிவு எதற்கு என்றால் என்னடா மதுரைத்தமிழன் நமக்குப் புத்தாண்டு வாழ்த்துகளை நமக்குச் சொல்லவே இல்லை என்று யாராவது வருத்தப்பட்டு இருந்தால் அவர்களுக்கு சொல்லமட்டுமே அவ்வளவுதான்
இந்த ஆண்டு எல்லோருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை, பிரார்த்தனை செய்வது மட்டுமே என்னால் முடியும் மற்றது எல்லாம் அந்த கடவுளின் செயல்
மீண்டும் நாளை முதல் நேரம் கிடைக்கும் போது எல்லாம என் கிண்டல் பதிவுகள் இங்கே தொடரும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மையான வார்த்தைகள் நண்பரே...
ReplyDelete
Deleteமனதில் இருப்பதை சொல்லும் போது அது உண்மையாகவே இருக்கின்றன கில்லர்ஜி
அவ்வாறே - நல்லதே - நடக்கட்டும்...
ReplyDeleteநடப்பதை எல்லாம் நல்லதற்கு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் தன்பாலன் அதை தவிர நமக்கு வேறு வழியில்லை
Deleteபுத்தாண்டு அன்று நான் பணிக்குச் செல்லாமல் இருந்ததில்லை. இந்த ஆண்டும் அப்படியே... கோவிலுக்குச் செல்வதெல்லாம் பாஸ்தான்! அவராலும் இந்த வருடம் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை! புத்தாண்டு எதையும் புதிதாக சாதிக்கப்போவதில்லை என்கிற எண்ணமே என் மனத்திலும்!
ReplyDeleteபுத்தாண்டு பிறந்தாலும் கொரோனா இருக்கும் வரை அது பழைய ஆண்டாகவே இருக்கிறது மாற்றம் ஏதுமில்லை ஸ்ரீராம்
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteதொடருங்கள்
தொடருகிறேன்
நன்றி
Delete