Thursday, January 28, 2021

 தனக்கு இணையாக யாரும் வந்துவிடக் கூடாது வளர்ந்துவிடக் கூடாது என்பதன் ஆணவமே மோடியின் இந்தச் செயல்

அதுமட்டுமல்ல பெரும்பாலும் சுதந்திரத் தின் விழாவில் பிரதமரும் குடியரசு தினவிழாவில் ஜனாதிபதியும்தான் முதன்மையாகக் கருதப்பட்டு அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். ஆனால் மோடி ஆட்சியில் அமர்ந்த பின் அந்த மரபை ,மோடி உடைத்துக் கொண்டு இருப்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும். இதை எப்படி நமது protocol அனுமதி அளிக்கிறது


  



மோடியால் அனைத்து நெறிமுறைகளும் மீறப்படுகின்றன மாற்றப்படுகின்றன. இதைத்தான் மோடியிஸம் என்கிறோம். இந்திய நிலத்தில் எந்த நெறிமுறையும் இல்லை.
 
தன் மானம் மிக்கவர் என்றால் ராஜ்நாத்சிங் இந்நேரம் பதவியைத் தூக்கி எறிந்திருப்பார்.. ஆனால் பாஜகவில் உள்ள தலைவர்கள் மட்டுமல்ல கட்சி உறுப்பினர்களுக்குத் தன் மானம் என்பது ரத்தத்தில் ஒரு துளிகூட இல்லை என்பதை உலகமே அறியும்


ராஜ்நாத் சிங்கிற்க்காக நாம் வருத்தப்படலாம் என்றால் ,வருத்தப்படலாம் வேண்டாம் அதற்கு அவர் தகுதியானவர்தான் என்று மனம் சொல்லுகிறது. காரணம் பதவிக்காக தன்மானத்தை இழந்து தகாத தலைவருடன் சேர்த்து இருந்தால், இதை விட வேறு என்ன பெரிதாக எதிர்பார்க்க முடியும். இப்படித்தான் ஜெயலலிதாவும் செய்தார் ஆனால் அவர் கடைசிக் காலம் எப்படி இருந்தது என்பதை உலகமே அறியும்..



பொது வெளியில் சக அமைச்சரை அதுமட்டுமல்ல சக கட்சிக்காரரை இப்படி நடத்தும் மோடி டெல்லி செல்லும் எடப்பாடியை உட்கார வைத்தா பேசி இருப்பார். போட்டோவிற்காக ஒரு சில நொடிகள் உட்கார வைத்துப் போட்டோ எடுத்துவிட்டு, அதன் பின் எடப்பாடியாரைத் தரையில் மண்டியிடச் செய்து அல்லவா பேசி அனுப்பி இருப்பார்.


இப்படித் தினமும் பலர் அவமானப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் என்ன இது காணொலியாக இணையத்தில் வெளியாகும் போதுதான் அது வெளிச்சத்திற்கு வந்து பலராலும் பேசப்படுகிறது


மோடிக்கும் கேமிராவிற்கு இடையில் எது வந்தாலும் அது மோடிக்கு வில்லனாகத்தான் தெரியும் என்ன நான் சொல்வது சரிதானே


அன்புடன்
மதுரைத்தமிழன்


2 comments:

  1. Replies

    1. அவரை மூடன் என்பதற்கு பதிலாக மக்களை எல்லாம் மூடனாக்குபவர் என்று சொல்லாம் தனபாலன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.