Saturday, January 23, 2021

 

avargal unmaigal

தமிழகத்து கோவிலில்களில் இருப்பது கடவுளா அல்லது கல்லா?

தமிழகத்துக் கோவில்களில் உள்ள சிலைகள் திருட்டு பற்றிச் செய்திகள் படிக்கும் போது ஏன் இந்து மதத்தினர் அதைக் கேட்டுக் கொதித்து எழுந்து போராட மாட்டேங்கிறார்கள் என்று மனதில் கேள்வி எழுகிறது.. ஒருவேளை கோவிலில் உள்ளது கடவுள்தான் என்ற முழு நம்பிக்கைகள் அவர்களுக்குள் வாராமல் அவை சிலைகள்தானே அது திருட்டுப் போனால் நமக்கு என்ன என்று இருக்கிறார்களோ என்னவோ? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது ஒரு நடிகன் அரசியலுக்கு வரமாட்டேன் என்கிற போது அவன் வீட்டின் முன்னால் நின்று போராடுவதும் அல்லது அவன் அரசியலுக்கு வரவேண்டும் என்று போராடுவதும் ,அது மாதிரி ஒரு முதல்வர் ஹாஸ்பிடலில் இருந்தால் அந்தத் தலைவர் குணமாகி வரும் வரை ஹாஸ்பிடல் வாசலிலே தவமாகக் கிடக்கும் மக்கள் கோவிலில் உள்ள கடவுள்கள் மன்னிக்கவும் சிலைகள் காணாமல் போனால் அது திரும்பக் கிடைக்கும் வரை இது வரை யாரும் போராடாதது ஏன்
 
கோவிலில் உள்ள கடவுளை விட ஒரு நடிகனும் தலைவர்களும் அவ்வளவு முக்கியமா என்ன?


 
ஒரு வேளை சிலைகள் திருடப்படும் போது அவற்றில்  கடவுள் தன்மை நீங்கிவிடும் என்று ஆகம விதிகளில் இருக்கிறதோ என்னவோ? அதனால் அந்த நிமிடத்திலிருந்தே அச்சிலையானது வெறும் கல்லாக அல்லது உலோகமாக ஆகிவிடுகிறது. அது கடவுள் கிடையாது என்று மக்கள் நினைப்பதால் அதற்காகப் போராடமல் இருக்கிறார்களா என்ன?
 
 
கடவுளைக் கண்டதும் கைத் தூக்கி கும்பிடுக் கைகள் எல்லாம் இப்போது செல்போன் தூக்கிப் படம் எடுத்துக் கொண்டு இருக்கின்றன. காலம் மாறிப் போச்சு




அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. இது சமீபத்தில் கமல் சொன்ன மாதிரி...

    ReplyDelete
    Replies
    1. கமல் என்ன சொன்னார்?

      Delete
  2. நியாயமான கேள்வி தமிழரே எனது மனதிலும் குடைந்து கொண்டே இருந்த கேள்விகள்.

    ReplyDelete
    Replies
    1. என்னைக் கேட்டால் சிலை திருட்டிற்கு எதிராக பெரும் போராட்டமே நடந்திருக்கனும் ஆனால் அப்படி ஏன் செய்யாமல் இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.