Saturday, January 30, 2021

சாணக்கியர் குருமூர்த்தியை  கதறவிடும்  ரஜினி ரசிகர்கள்

 

avargal unmaigal




ரஜினியையும் அவர் ரசிகர்களையும் துக்ளக்கின் வாசகர்களாகக் கருதிப் பாராட்டி வந்த சாணக்கிய குருமூர்த்தி. இப்போது மனம் எரிந்து கொண்டு இருக்கிறார். இதற்குக் காரணம் ரஜினி அரசியலிலிருந்து பின் வாங்கியதுமட்டுமல்ல அவரது ரசிகர்களை அவரவர் விரும்பும் கட்சிகளில் இணைய எந்தத் தடையுமில்லை என்று அறிவித்துவிட்டார்.

அவர்களும் உடனே திமுக அதிமுகக் கட்சியை நோக்கிப் போய்ச் சேர்ந்து விட்டார்கள் யாரும் பாஜக பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை. இதை அறிந்ததும் ரஜினி ரசிகர்கள் கேவலமானவர்கள் என்பது போலத் துக்ளக் பத்திரிகையில் எப்படி எழுதி இருக்கிறார் பாருங்கள்.
 


குருமூர்த்தித் துக்ளக் தூர்வாசர் மூலம் ரஜினி ரசிகர்களை மிகக் கடுமையாகச் சாடி இருக்கிறார்

ரஜினியை வைத்துத் தான் சாணக்கியனாக வலம் வரலாம் என்று நினைத்தவர் இப்போது இப்படி '' ரஜினியை வைத்துச் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போட்ட அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் ஊழலில் திளைக்கும் திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்குப் பணம் சம்பாதிக்க ஓடுகிறார்கள்.. என்று எழுதுகிறார்

ரஜினி வேண்டுமானால் அரசுக்கு ஒழுங்காக வரிக் கட்டும் நேர்மையாளராக(என்னது அவர் நேர்மையாக வரி கட்டுபவரா என்று கேட்கக் கூடாது ஆடிட்டர் அப்படித்தான் சொல்லுவார்) இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள் கக்கன் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்ல என்று எழுதுகிறார். ஆமாம் இந்தக் குருமூர்த்தி என்னவோ கக்கன் வீட்டுப் பக்கத்திலிருந்து வளர்ந்தவர் போலப் பேசுகிறார்


.ஊர் உலகத்தை வாழ வைக்க உலகத்திற்கு நல்லது செய்ய எவனாவது போயும் போய் அதிமுகத் திமுக வை தேர்ந்தெடுப்பானா என்று கேட்கிறார் துக்ளக்கில்

இப்படி எழுதியவர் பாஜக தலைவர் நட்டாவில் இருந்து அமித்ஷா வரை அதிமுகவை நோக்கிச் செல்வதன் காரணத்தையும் சேர்த்து எழுதி இருக்கலாம்தானே அல்லது ஊர் உலகத்தை வாழ வைக்க உலகத்திற்கு நல்லது செய்ய எவனாவது போயும் போய் அதிமுகவைத் தேர்ந்தெடுப்பான என்று நட்டாவையும் அமித்ஷாவையும் சேர்த்துத்தான் கேட்கிறாரா என்ன?

குருமூர்த்தில மட்டுமல்ல அது போல உள்ள பாஜகவினருக்கு தன் சொல் பேச்சு கேட்டு அடிமையாக நடக்க முன் வராவிட்டால், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் கடித்துக் குதறி விடுவார்கள், இந்த மாதிரியான சங்கிகள் சைக்கோக்களைவிட மோசமானவர்கள்


ஒருவேளை BJP யில் இணைந்திருந்தால் குருமூர்த்தியின் வாய் வரவேற்றிருக்குமோ என்னவோ


பீஃப் அல்லது பீன்ஸ் எது நல்லது ஏன்? மற்றும் பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

 

மோடி வேஷம் போட்டா இனிக்குது ஸ்டாலின் போட்டா கசக்கிறதா என்ன? 


உங்காத்துப் புள்ளையாண்டான் போட்டி இடுறான் அவனை ஜெயிக்க வையுங்கோ 

 

அரசியல் களம் : தமிழக தேர்தல் கலாட்டா 

 

தமிழகத்து கோவிலில்களில் இருப்பது கடவுளா அல்லது கல்லா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. அவனவன் சொந்த புத்தியில் கட்சியில் சேரவில்லை என்பது புரிகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.