Thursday, January 7, 2021

 

women rights humour

எப்போது இப்படி எல்லாம் நடக்கிறதோ அப்போதுதான் ஆணும் பெண்ணும் சம உரிமைப் பெற்றவகளாக இருக்க முடியும்

இப்படி நடந்தால்தான் ஆணும் பெண்ணும் சம உரிமை இருக்க முடியும்

எப்போது ஆண்கள் தங்கள் அணியும் சட்டையின் பின்புறத்தில் ஜன்னல் வைத்து சட்டையை அணிகிறார்களோ?

எப்போது ஆண்கள் பஸ்ஸில் பயணம் செய்யும் போது அவர்களின் இடுப்பில் பெண்களை கை வைத்து தடவுவார்களோ

எப்போது ஆண்கள் பெண்களை பார்த்து நீங்கள் எல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்காலையா என்று கேட்கும் போது

 

எப்போது ஆண்கள் தங்கள் தலையில் பெண்களைப் போலப் பூக்களை அணிந்து கொள்கிறார்களோ


எப்போது ஆண்கள் தொப்புள் தெரிய பேண்ட்டை  அல்லது வேஷ்டியைக் கீழ் இறக்கிப் போட்டுக் கொள்கிறார்களோ


எப்போது ஆண்கள் ஸ்லீவ்லெஸ் சட்டை அணிகிறார்களோ

எப்போது ஆண்கள் மீ டூ என்று வழக்கு தொடர்கிறார்களோ


எப்போது ஆண்கள் சமையலறையில் இருந்து பக்கோடா செய்து ஹாலில் மனைவி மற்றும் அவரின் தோழிகள் சேர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது கொடுத்துக் கொண்டு இருக்கிறாரோ


எப்போது ஆண்கள் காதலர் தினத்தின் போது பெண்களிடம் இருந்து  கிப்ட்  வாங்கிக் கொள்ளும் நிலைக்கு வருகிறார்களோ


எப்போது ஆண்கள் பண்டிகை தின நாட்களில் விலை உயர்ந்த துணிகளையோ அல்லது நகைகளையோ மனைவியிடம் கேட்டு வாங்கி போடுகிறார்களோ அந்த நேரத்தில் மனைவி ஒரு சாதாரண காட்டன் புடவை மட்டும் வாங்கி அணிகிறார்களோ

எப்போது பிரச்சனை என்றால் ஆண்கள் உடனே கண்ணைக் கசக்கி அழுக ஆரம்பிக்கிறார்களோ


எப்போது ஆண்கள் தங்கள் கால்களில் உள்ள முடிகளை அடிக்கடி வேக்ஸ் செய்து அகற்றுகிறார்களோ


எப்போது அந்த மூன்று நாட்களில் ஆண்களை வாசலில் உட்கார வைத்துவிட்டு பெண்கள் அடுப்படியில் சமைக்கிறார்களோ

எப்போது ஆண்கள் இரவில்  தனியாக எந்த வித பயமும் இல்லாமல்  சென்று வர முடிகிறதோ அன்றுதான் புதிய இந்தியா உண்மையான சுதந்திரம் அடைந்துள்ளது என்று  மோடிஜி சொல்கிறாரோ


இப்படி எல்லாம் என்று நடக்கிறதோ அன்றுதான் ஆணும் பெண்ணும் சம உரிமை பெற்ற நாளாக இருக்கும்  அதைவிட்டு விட்டு ஆண்களைப் போல சிகரெட்டு குடிப்பதாலோ சரக்கு அடிப்பதாலோ பைக்கில் ஊர் சுற்றுவதாலோ நாலு கெட்டவார்த்தைகளைப் பேசுவதாலோ பெண்ணுரிமை பெற்றுவிட்டதாகக் கருத்தினால் அது முட்டாள் தனம்



ஆணுக்கு இணையாக வருவது அல்ல உரிமை பெண்ணிற்கு இணையாக ஆணை மாற்ற வேண்டும்


கொசுறு : எந்த மத வழிபாட்டு தளங்களில் மத குருமார்களாக பெண்கள்  இல்லை...அங்கும் சம உரிமை வேண்டும் என்று எந்த பெண்ணியக்கமும் ஏன்  போராடவில்லை....



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஆண்களைப் போல இருக்க வேண்டும் பேச வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தங்கள் மீசைகளை மட்டும் மழித்துக் கொள்வது ஏன்?
# இந்த ஆண்டின் முதல் வம்புபை துவங்கி வைப்போம் ஹீஹீ\\\


2 comments:

  1. உள்ளம் ரெண்டும் ஒன்று - நம்
    உருவம் தானே ரெண்டு...!

    புதுமைப்பித்தன் (திரைப்படம்)

    ReplyDelete
  2. வம்பை துவங்கி வைப்போம் - ஹாஹா... கேள்விகளுக்கு பதில் யார் சொல்லப் போகிறார்கள்! காத்திருப்போம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.