Sunday, January 10, 2021

US Capitol Hill siege The doors of the American Capitol Gill are not broken The doors of democracy are broken



அமெரிக்கக் கேப்பிடல் கில்லின் கதவுகள் உடைக்கப்படவில்லை ஜனநாயகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன 

அமெரிக்காவில் கடந்த புதன் கிழமை கேப்டலில் (Capitol Hill)குடியரசு கட்சியினரால் தாக்கப்பட்ட சம்பவத்தால் அமெரிக்க உலக நாடுகளின் மத்தியில் கேலிக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்வு அமெரிக்க மக்களிடையே ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க இயலாது


இந்தத் தாக்குதலால் மக்கள் மனதில் மட்டுமல்ல குடியரசு கட்சியினர் இடையும் ஒரு அதிர்வை ஏற்படுத்து இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தாக்குதலை அந்தக் கட்சியின் மற்ற தலைவர்களும் எதிரப்பர்க்கவில்லை .இந்தத் தாக்குதல் மிகவும் தவறானது என்று அவர்களும் கருதுகிறார்கள் என்பதும் உண்மை, ட்ரம்ப் பதவியிலிருந்து விலகிய பின்னர் மற்ற குடியரசுக் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைவராக அவரைப் பார்க்கும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. வன்முறை வெடிப்பிற்கு . ட்ரம்ப்பே தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டதை அவர்கள் யாரும் ரசிக்கவில்லை குடியரசுக் கட்சியினர் சட்டம் ஒழுங்கின் கட்சியாகப் பார்க்க விரும்புகிறார்கள், அது இப்போது அவர் முன்வைக்கும் பிம்பம் அல்ல.

Governor Schwarzenegger's Message Following this Week's Attack on the Capitol

 


https://youtu.be/x_P-0I6sAck

 




 

 

 தேசத்தை நேசிப்பவர்கள் என்று சொல்லப்படுபவர்களாலே தேசமும் சட்டங்களும் கேலிகுரியவைகளாக ஆக்கப்பட்டுள்ளன.இந்த தாக்குதலால் நாட்டின் சம்பிரதாயங்கள் உடைக்க முயலப்பட்டுள்ளன.


ஆனால் துணைத் தலைவர் மைக் பென்ஸின் செயல் காரணமாக அது காப்பாற்றப்பட்டு இருக்கிறது. மைக் பென்ஸ் ட்ரெம்பிற்கு மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரம் ஆனவர். அவர் தனது செயலுக்கு எல்லாம் ஆதரவாக இருப்பார் என ட்ரம்ப் நம்பினார் . ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை

ட்ரம்ப் மதிய வேளையில், அவர் தனது குழு வெள்ளை மாளிகை மைதானத்திற்கு அப்பால் ஏற்பாடு செய்திருந்த ஒரு வெளிப்புற பேரணியில் தோன்றினார் மற்றும் தேர்தல் செயல்முறை மீது மட்டுமல்ல, தனது சொந்த கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீதும் முழு அளவிலான வாய்மொழி தாக்குதலை நடத்தினார்.

வாக்களிப்பு முறைகேடுகள் மற்றும் மோசடி எனக் கூறப்படும் புகார்களின் நீண்ட பட்டியலை அவர் மீண்டும் மீண்டும் கூறினார், மேலும் அறிவித்தார்: “நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். ” தனக்கு ஆதரவளிக்காத "பலவீனமான குடியரசுக் கட்சியினர், பரிதாபகரமான குடியரசுக் கட்சியினர்" என்று அவர் உற்சாகப்படுத்தினார், சிலரைப் பெயரால் விமர்சித்தார். மேலும் அவர் கூட்டத்தைப் பென்சில்வேனியா வளாகத்திலிருந்து கேபிட்டலுக்கு அணிவகுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்.


கேபிட்டலில்,  ட்ரம்ப்பின் சொந்த துணைத் தலைவர் மைக் பென்ஸ், நாட்டின் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணிக்குத் தலைமை தாங்கினார். திரு. பென்ஸ் , ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை ஒருதலைபட்சமாக முறியடிக்க எப்படியாவது முயல வேண்டும் என்ற ஜனாதிபதி ட்ரெம்பின் விருப்பத்தை மீறுவதாக அறிவித்திருந்தார் . செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல், துணை ஜனாதிபதியுடனான தனது சொந்த இடைவேளையில், அவர் உறுதியாகக் காத்துக்கொண்டார், தேர்தல் முறைகேடுகள் எதுவும் நடந்தாலும், அவை நடந்தாலும் கூட, முடிவை மாற்றுவதற்குப் போதுமானதாக இல்லை என்று கூறினார். முடிவுகளை முறியடிக்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க அவர் மறுத்துவிட்டார்.

அதன் பின்னர்க் கும்பல் வந்தது. பென்ஸ் தனது சொந்த கட்சியில் உள்ள ட்ரம்ப் ஆதரவாளர்களிடமிருந்து அவரைப் பாதுகாக்கப் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட வேண்டியிருந்தது. பென்ஸை தூக்கிலிட வேண்டும் என்று அவரது கட்சியினரே கோசமிட்டும் கேப்பிட்டல் ஹாலில் நுழைந்தனர். தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி - நாட்டின் தலைவர்கள் முன்னர் நல்ல காலத்திலும், மோசமான காலத்திலும், போரிலும் சமாதானத்திலும் மேற்கொண்ட ஒர் செயல்முறை - நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் பூட்டப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது மோசம்தான்.

ஆனால் இரவு நேரத்தில் நாட்டின் தலைநகரம் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்தது, சட்டமியற்றுபவர்கள் பாதுகாப்பிலிருந்தனர். ஆனால் அந்த ஒர் நிகழ்ச்சியில், காங்கிரஸ் அசைந்து சேதமடைந்தாலும், உடைக்கப்படவில்லை, சட்டமியற்றுபவர்கள் பின்னர் அரசியலமைப்பு அவர்களுக்கு ஒதுக்கிய வேலையை முடிக்க மறுசீரமைத்தனர், ஒருவருக்கொருவர் தாங்கள் தாங்கிக் கொண்ட அதிர்ச்சிக்கு அவர்கள் பலமடையக்கூடும் என்று ஒருவருக்கொருவர் சொன்னார்கள். இறுதியாக ஜோ பைடனை தேர்ந்தெடுத்து அறிவித்தனர்



இந்தச் சம்பவங்களுக்கு அப்புறம் ட்ரெம்பும் மைக் பென்ஸும் இதுவரை பேசிக் கொள்ளவில்லை.. ட்ரெம்பின் இணையத் தளக் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கின்றன.. காரணம் அவரின் செயல்கள் நாட்டை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற காரணத்தினால்

'Hang Mike Pence' trends on Twitter after platform suspends Trump for risk of 'incitement of violence'
The tweets appeared to circulate a video of Capitol protestors chanting the phrase

Twitter saw a surprising item trending on Friday night when "Hang Mike Pence" hit around 14,000 tweets, according to reports.

The social media platform announced Friday night that it was permanently suspending President Donald Trump’s Twitter account.

The decision was made "due to the risk of further incitement of violence," according to a statement on the company’s blog.  

TWITTER SUSPENDS @REALDONALDTRUMP ACCOUNT PERMANENTLY

Many users were confused, then, to see such a violent item in the trending section.

CONSERVATIVES FLEE TO PARLER FOLLOWING TWITTER'S PERMANENT SUSPENSION OF TRUMP

Twitter appeared to notice the trend at some point: on the Twitter Trending USA site, which tracks the past 12 hours of the top 10 trending, the item does not appear.

"We blocked the phrase and other variations of it from trending," a Twitter spokesperson told Fox News on Saturday. "We want trends to promote healthy discussions on Twitter."

PENCE TO OPPOSE 25TH AMENDMENT POWERS TO REMOVE TRUMP FROM OFFICE

"This means that at times, we may prevent certain content from trending. As per our Help Center, there are Rules for trends -- if we identify accounts that violate these rules, we’ll take enforcement action."

Some users were quick to point out that the trending item was not due to fresh threats, but rather that users were circulating a video from the Wednesday riot at the U.S. Capitol.

In the video, protesters could be heard chanting the phrase repeatedly.


No matter the reason, some users believed that allowing the item to trend at all was hypocritical after Twitter explicitly cited "violence" as the reason Trump was suspended.



கேபிட்டல் ஹாலில் நடந்த சம்பவம் நாட்டினரை மிவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போதிலும் அந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியிலும் ஏன் இங்குள்ள சிறுவர் சிறுமியர் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது

காரணம் இதைப் போல ஒர் வன்முறையைக் கறுப்பு , ஸ்பாணிஸ் இனத்தினரோ அல்லது இஸ்லாமிய இனத்தினரோ செய்து இருந்தால் நூற்றுகணக்கான் மக்கள் ஸ்நைப்பர் சூட் வீரர்கள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பார்கள் ஆனால் அது போலச் சம்பவங்கள் இந்த நிகழ்வில் நடை பெற வில்லை என்பதை இங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் கூட ஆச்சரியப்பட்டு வேதனைப் படுகிறார்கள். இதன் மூலம் இனப்பாகுபாடும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது

இதுமட்டுமல்ல காவல்துறையைச் சார்ந்தவர்களின் ஆதரவும் இந்த வன்முறைக்குக் காரணமாக இருந்துள்ளது, அது பற்றிய விசாரணையும் இப்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.


இந்த நிகழ்வு ஏதோ உணர்ச்சிவசப்பட்ட காரணமாக நடந்துவிடவில்லை முன் திட்டமிடுதல் காரணமாகவே நடந்துள்ளது இதில் பலரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் இது அறியாமல் பல குடியரசு கட்சியினரும் இதில் கலந்து கொண்டு தங்கள் எதிரப்பை தெரிவித்து இருக்கிறார்கள்


இந்த நிகழ்விற்குக் காரணமான ட்ரெம்பை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் இறங்கி உள்ளனர் குடியரசு கட்சியைச் சார்ந்த சிலரும் அமெரிக்க ஜனநாயகத்தைக் காக்க இது அவசியம் என்று சொல்லி வந்தாலும் அந்தக் கட்சியைச் சார்ந்த மற்றவர்கள் அது தேவையில்லை என்ற கருத்தையும் கூறி வருகிறார்கள் . நாட்கள் மிகக் கொஞ்சமாக இருப்பதால் என்ன நடக்கும் என்பது பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

 

The doors of the American Capitol Gill are not broken The doors of democracy are broken



இந்தப் போராட்டத்தில் கலந்து அத்துமீறியவர்களை அமெரிக்க FBI இனம் கண்டு அவர்களைக் கைது செய்து வருகின்றது..இவர்கள் பல ஆண்டுக்காலம் சிறையில் தங்கள் காலத்தைச் செலவழிக்க வேண்டிய நிலைதான் உள்ளது.. அவர்கள் இந்தியாவில் வெளிவருவது போல மீண்டுக் குடியரசு ஆட்சி வந்தால் வெளிவந்து விட முடியாது

 https://www.youtube.com/watch?v=LXpkXl2VxZE



 

 

இந்த நிகழ்வில் ட்ரம்ப் மற்றும் அவர்கள் கட்சியினர் நேரடியாகக் களம் இறங்கினாலும் ரஷ்யா மற்றும் சீனாவின்  உளவுத்துறையும் இதில் ட்ரம்ப் மற்றும் அவர்கள் கட்சியினர் அறியாமலே களம் இறங்கி இருக்கிறது என்ற செய்திகளும் வருகின்றது.. உலகனின் மற்ற நாடுகளில் பிரச்சனைகளை மூக்கை நுழைத்து அங்குக் குழப்பம் விளைவிக்கும் அமெரிக்க அரசை சந்தர்ப்பம் கிடைக்கும் போது ரஷ்யாவும் சீனாவும் பார்த்து கொண்டு சும்மாவா இருக்கும்?



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்து பற்றி இன்னும் ஆழமாக நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தாலும் வேலையின் பிஸி காரணமாக எழுத முடியவில்லை.. சிலர் இது பற்றி நான் ஏதும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதை வெளியிடுகிறேன்



0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.