Friday, January 15, 2021

@avargal unmaigal

 தமிழக அறிவுஜீவிகள் கேள்வி  நடிகர் விஜய்க்குச் சமுகப் பொறுப்பு இருக்கிறதா?


தமிழக மக்களும் அவர்களின் சமுக உணர்வும்


நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. உடனே மக்கள் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக உடனே விஜய்க்குச் சமுக உணர்வு இருக்கிறதா? சமுகத்தின் மீது அக்கறை இருக்கிறதா? அப்படி அவருக்கு உண்மையாக இருந்திருந்திருந்தால் அவர் இந்தக் கொரோனா காலத்தில் படத்தை ரீலீஸ் பண்ணி இருப்பாரா என்பது மாதிரியான கேள்விக் கணைகளை வாரி இறைக்கிறார்கள்.


இப்படிக் கேட்பவர்கள் யார் என்று பார்த்தால் தங்களை அறிவி ஜீவிகளாகவும் சமுகத்தின் மீது அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்.
 
இவர்களிடம் நான் கேட்கின்றேன் நடிகர் விஜய் என்றைக்காவது சமுக உணர்வு இருக்கிறது அக்கறை இருக்கிறது என்று ரஜினி மாதிரி வாய்ஸ் கொடுத்து இருக்கிறாரா என்ன? விஜய் மட்டுமல்ல சினிமா துறையில் இருப்பவர்களுக்கு உண்மையிலே அக்கறை இருக்கிறதா என்ன?. உண்மையிலே அவர்களுக்கு அக்கறை இருந்தால் சினிமா துறையினர் மிக நல்ல படங்களை அல்லவா எடுத்து வெளியிட்டு இருப்பார்கள் .அப்படி இல்லாமல் கலாச்சாரத்தைப் பண்பாட்டைக் கெடுக்கும் அளவிற்காகப் படத்தை எடுத்து வெளியிடுவார்கள்,திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்குக்கான தலைசிறந்த ஊடகம் ஆகும். அவற்றின் மூலம் மக்களிடம் நல்லெண்ணங்களையும் விதைக்கலாம்; நஞ்சையும் விதைக்கலாம். ஆனால் இன்று அவர்கள் நல்லதையா விதைக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.


அவர்கள் படம் எடுப்பது எல்லாம் சமுகத்தின் மீது உள்ள அக்கறையால் அல்ல எப்படி எடுத்தால் எப்ப வெளியிட்டால் தங்கள் பெட்டிகளில் பணம் வந்து கொட்டும் என்று எண்ணித்தான் எடுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களிடம் சமுதாய உணர்வு இருக்கிறதா அக்கறை இருக்கிறதா என்று கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது


தனி மனிதரான விஜய்யை நோக்கி அக்கறை இருக்கிறதா என்று கேட்கும் அறிவுஜீவிகள் தமிழகத்தை ஆளும் முதல்வரிடம் அந்தக் கேள்வியை வீசி இருக்கலாம்தானே முதல்வரே உங்களுக்குச் சமுக அக்கறை உண்டா உணர்வு உண்டா என்று? நாட்டை ஆளும் முதல்வருக்கு அந்த உணர்வு இருந்தால் இந்தப் படத்தைக் கொரோனா சமயத்தில் திரையரங்குகளில் வராதவாறு தடை
 போட்டு இருக்கலாம் தானே

உண்மையில் தமிழகத்தை ஆளும் முதல்வருக்குச் சமுக உணர்வும் அக்கறையும் இருந்தால் கொரோனாகாலத்தில் டாஸ்மாக்கை திறந்து இருப்பாரா என்ன? அடேய் அறிவு ஜவிகளா ஆளும் முதல்வருக்கு இல்லாத அக்கறையை ஒரு கூத்தாடியிடம் நீங்கள் எதிர்பார்க்கலாமா என்ன?


கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துவிட்டது என்று சொல்லி தியோட்டரை திறந்து விட்ட முதல்வர் பொங்கலுக்குப் பீச்சையும் பூங்காக்களையும் மூடி வைத்தது ஏன்? மூடிய தியோட்டரில் மக்கள் கூடினால் கொரோனா பரவாது என்றால் திறந்த பீச்சில் மட்டும் எப்படிக் கொரோனா பரவும்.

இதையெல்லாம் முதல்வரை நோக்கிக் கேட்காமல் வாய் மூடி மௌனமாக இருப்பது ஏன்? மௌனமாக இருப்பது மட்டுமல்லாமல் அவர் சிறந்த ஆட்சியைத் தருகிறார் என்று உங்களால் எப்படிச் சொல்ல முடிகிறது

அட வெட்கங்கெட்ட அறிவுஜீவிகளே உங்களின் சமுக உணர்வைக் கண்டு என் உடம்பு எல்லாம் புல்லரிக்கிறது...
 
 
"வாட்ஸ்அப்" கட்டாயப்படுத்தலும் மக்களின் திடீர் ஞானயோதமும்



அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : விஜய்க்கு சமுக உணர்வு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பவர்கள் எல்லோரும் மோடியை ஆதரிக்கும் சங்கிகளாகவே இருக்கிறார்கள் அது எப்படி?

2 comments:

  1. பொய்யனுக்கு புகழ்மாலை... அதிலும் படி(டு)த்தவர்களே அதிகம்...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்து பகிற்விற்கும் நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.