Sunday, January 24, 2021

 

avargal unmaigal


மோடி வேஷம் போட்டா இனிக்குது ஸ்டாலின் போட்டா கசக்கிறதா என்ன?

வேல்-யை கையில் தூக்கியதற்கே பக்தால்ஸ் இப்படிக் கதறுகிறார்களே இனிமே ஸ்டாலின் என்னென்ன வேஷம் எல்லாம் போட்டு பக்தால்ஸை கதற வைக்கப் போகிறாரோ இதோ அதற்கு ஒரு சாம்பிள்
 
உங்காத்துப் புள்ளையாண்டான் போட்டி இடுறான் அவனை ஜெயிக்க வையுங்கோ


தமிழகத்து அம்பிகளே மாமாக்களே மாமிகளே

உங்காத்து புள்ளையாகிய நான் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வராகப் போட்டியிடுகின்றேன்

காலையில் எழுந்து காயத்திரி மந்திரம் சொல்லி சூரியபகவானை வணங்கும் போதே எனக்குத் தெரியும் உங்களுக்கு உதய சூரியன் மீது அதிகப் பற்று உள்ளவர்கள் என்று அதனால் உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன் இந்தச் சூரியன் தொடர்ந்து உதிக்க உங்களின் பொன்னான வாக்குகளை எப்படி உங்களாத்து பெரியவா உங்களுக்கு வாக்கு தந்து ஆசிர்வதிப்பார்களோ அப்படி எனக்கும் தந்து ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அதுமட்டுமல்ல நேக்கு வாக்கு போட்டு ஜெயிக்க வைத்தால் எல்லாக் கோயில்களிலிருந்தும் பிரசாதம் உங்கள் வீட்டிற்கே கிடைக்குமாறு செய்கின்றேன் மேலும் உங்காத்து குழந்தையாகிய துர்க்காம்மா உங்களைக் காசி முதல் ராமேஸ்வரம் வரை மிகக் குறைந்த கட்டணத்தில் யாத்திரை அழைத்துச் செல்வார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்


தீபாவளிக்குக் கங்கா ஸ்நானம் பண்ணக் கங்கையிலிருந்து உங்களுக்கு நீர் வரவழைத்துத் தருகின்றேன் அல்லது நீங்கள் விரும்பினால் பெரிய நீச்சல் குளம் ஒன்றைக் கட்டி அதில் கங்கா நீரைக் கொண்டு நிரப்பி விடுகின்றேன்


ஆனால் இதெல்லாம் நடக்க உங்காத்து புள்ளையான ஸ்டாங்கராச்சாரி என்ற ஸ்டாலினுக்கு நீங்கள் வோட்டுப் போடனுமாக்கும்


 




அன்புடன்
மதுரைத்தமிழன்




கங்கையில் இருந்து நீரைக் கொண்டு வந்து சென்னையில் ஒரு குளம் கட்டி அதில் தேக்கி வைத்து மதப் பூஜைகளுக்கு பயன்படுத்த இலவசமாக தரலாம்தானே,, இதை எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் கொண்டு வரலாம்தானே எனக்கென்னவோ ஒது நல்ல ஐடியாவாக தோணுது


கொசுறு : இனிமேல் அரசியல் தலைவர்கள் இந்து மத ஸ்தலங்களுக்குச் செல்லும் போது கையில் வேலோ தலையில் குங்குமமோ தருவதற்குப் பதில் வாயில் வேல் குத்தியோ அல்லது அது போல சர்ச்க்கு போகையில் கையில் சிலுவையையோ பைபிளையோ தருவதிற்குப் பதிலாக அவர்களைச் சிலுவையில் அடித்தோ அது போல மசூதிக்குப் போகும் போது குல்லா போடுவதற்குப் பதிலாக சுன்னத் செய்தோ விடனும் அப்பத்தான் அவர்கள் மத ஸ்தலங்கள் இருக்கும் பக்கம் தலை வைத்து படுக்கமாட்டார்கள்


தமிழகத்து கோவிலில்களில் இருப்பது கடவுளா அல்லது கல்லா?

4 comments:

  1. அட நல்லாத்தான் இருக்குது...

    ReplyDelete
    Replies
    1. ஆட்சியை பிடிக்க எல்லா தலைவர்களும் எந்த வேஷமும் போட தயார்தான்

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விக்கும் நன்றி தனபாலன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.