Sunday, January 10, 2021

#avargal unmaigal

 "வாட்ஸ்அப்" கட்டாயப்படுத்தலும் மக்களின் திடீர் ஞானயோதமும்

கடந்த சில நாட்களாக கணக்கற்ற நபர்கள் வாட்ஸ் ஆப்பிலிருந்து அதற்கு இணையான "சிக்னல்" மற்றும் "டெலிகிராம்" போன்ற செயலிக்கு மாறி வாவருகிறார்கள். காரணம் வாட்ஸ்ப்பை திறந்ததுமே, இந்த வாரம், பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு பாப்-அப்  Whatsapp is updating its privacy policy என்ற எச்சரிக்கையை வழங்கத் தொடங்கியது, இது பயன்பாட்டைப் பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை போன்றது. முக்கியமாக, பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் மக்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்க வேண்டும் அல்லது அடுத்த மாதம் உங்கள் வாட்ஸ்அப்பிற்கான அணுகலை இழக்க நேரிடும் என்று அது கூறுகிறது.




இதை அறிந்த நம் மக்களுக்கு உடனடியாக ஞானயோதம் தோன்றி வாட்ஸ்ஆப்பில் நமக்குப் பாதுகாப்பு இல்லை, நம்முடைய தகவல்களை வேறு பல நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள் என நினைத்து மாறிக் கொண்டும் அதைப் பற்றிச் சமுக ஊடகங்களில் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். முன்பு உங்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் செய்ததைதான் இப்போது சட்டப் பிரச்சனைகள் வந்துவிடக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக நம் அனுமதி பெற்றுச் செய்ய முயல்கிறார்கள்  விஷயம் அவ்வளவுதான்


எப்போது நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறோமோ, கணணிமூலம் இணையங்களில் உலாவி வருகிறோமோ அப்போதே நம்மைப்பற்றிய தகவல்களை அவர்கள் சேகரித்து அதைத் தங்களது வியாபார வெற்றிகளுக்குப் பயன்படுத்தி விருகிறார்கள் அப்படி அவர்கள் செய்வதன் மூலமாகத்தான் அவர்கள் மில்லியனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் .அதன் பலனாக நமக்கு அவர்கள் தருவது இலவச சேவையைத்தான். ஆனால் இதை நல்லாத் தெரிந்து இருந்தும் நம்ம மக்கள் இப்போதுதான் தெரிந்த மாதிரி  ஆடுவதைப் பார்த்தால் எப்படிச் சிரிப்பது என்று தெரியவில்லை

 


 
#avargal unmaigal

அட கூமுட்டைகளே எப்போது  நீங்கள் உங்கள் மொபைலில்  அல்லது கணனியில் Gmail , Facebook, WhatsApp, ,FB messenger, YouTube &  Instagram  ,இவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறீர்களோ அப்போதில் இருந்து  உங்கள் மொபைலில் மற்றும் கணனியில் இருக்கும் எல்லாத் தகவலும் சுரண்டப்பட்டு ஏற்கனவே பல நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளது, இனிமேல் எதையும் நீங்கள் இங்கே புதிதாக இழப்பதற்கு ஏதுமில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எங்கே எப்போது எல்லாம் உங்கள் செல்போன் நம்பரையும் மின்னஞ்சல் அட் ரசையும் நீங்கள் கொடுக்கிறீர்களோ அப்போதே உங்களைப் பற்றிய எல்லாவிபரங்களும் பறிப் போய்விட்டது அவ்வளவுதான்


2020 ல் தினமலர் நாளிதழ் தன் இணையம் பதிப்பை இணையத்தில் படிக்க வேண்டும் என்றால் அதற்கு உங்களது செல்போன் அல்லது இமெய்யில் கணக்கு மூலம்தான் ரிஜிஸ்டர் செய்து படிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. அப்போது நான் எழுதிப் பதிந்தது இதுதான் "தினமலர் இணைய வாசகர்களுக்கோர் எச்சரிக்கை வாசகர்களின் தனிநபர் தகவல்களை திருடும் தினமலர்"  மக்களே உஷார் தினமலர்!  உங்களது பெர்ஷனல் தகவல்களைத் திருடச் அப்படிச் செய்கிறது என்று எழுதி எனது தளத்தில் பதிந்ததுமட்டுமல்லாமல் பல சமுகத் தளங்களிலும் ஷேர் செய்து வந்தேன், ஏன் பல ஊடக இணையதளங்களிலும் கருத்துகள் சொல்வது போல  தொடர்ந்து பல ஊடகங்களில் பகிர்ந்தேன்.. அதன் பின் தீபாவளிக்கு சில வாரங்கள் முன் தினமலர் சத்தமில்லாமல் லாக் இன் செய்துதான் படிக்க வேண்டும் என்ற நிலையை அது நீக்கிவிட்டது.. ஆனால் அதற்கு முன்னால் அங்கு ரிஜஸ்டர் செய்ததன் மூலம் பல தமிழ் மக்கள் தங்களது தகவலை அவர்களிடம் பறி கொடுத்து இருக்கிறார்கள்.. அப்படிப் பதிவு செயதவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள். வாட்சப் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பத்திரமாகப் பில்டர் செய்யப்பட்டு அவர்களது வியாபார வெற்றிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆனால் தினமலர் போன்ற நம்பிக்கையற்ற நிறுனவத்திடம் பறி கொடுத்த தகவல்கள் என்னவாகப் போகின்றன யாரிடம் போய்ச் சேரப் போகின்றன என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.


இப்படித் தினமலர் மட்டுமல்ல தங்களது நிறுவனம் சேவைகளைப் பயன்படுத்த ரிஜ்ஸ்டர் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் அதற்கு உங்கள் இமெயில் ஐடி அல்லது செல்போன் நம்பர் கேட்கும் நிறுவனங்கள் அனைத்தும் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டுதான் இருக்கும்.. வாட்சப்பிற்காகக் கூப்பாடு போடும் நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்??


அதுமட்டுமில்லை எப்போது நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்த ஆரம்பித்தீர்களோ அப்போதே கிரெடிட் கார்ட் நிறுவனங்களான விசா மாஸ்டர்கார்ட் ,டிஸ்கவர் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள் உங்கள் செயல்களை எல்லாம் அவர்கள் திரட்டி ,அவர்களும் அந்தத் தகவல்களைத் தங்களது சிஸ்டர் நிறுவனங்களுடன் ஷேர் செய்துதான் வருகிறார்கள். இப்ப என்ன செய்யப் போறீங்க உங்கள் கிரெடிட் கார்டுகளை எல்லாம் தூக்கி எறியப் போகிறீர்களா என்ன?

இன்று இணையத்தையும் அதன் மூலம் கூகுள் சர்ச் மற்றும் அதன் மற்ற சேவைகளையும் பயன்படுத்தாதவர்களைக் கைவிட்டு எண்ணிவிடலாம்.. அவர்களிடம் உங்களைப் பற்றி இல்லாத தகவல்களே இல்லை எனலாம் .ஏன் அமெரிக்க அரசாங்கத்தில் கூட மக்களைப் பற்றிய தகவல்கள் சரியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கூகுளிடம் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். ஏன் பல சமயங்களில் குற்றப் பின்னணி உள்ளவர்களைப் பற்றிய தகவல்களைக் கூகுள் நிறுவனத்திடம் இருந்துதான் அமெரிக்கத் துப்பறியும் துறைமற்றும்  உளவுத்துறை போன்றவைகளே சேகரிக்கிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. இப்ப என்ன செய்யப் போறீங்க

எப்போது இணையம் மூலம் உங்கள் வங்கி அக்கவுண்டை மெயிண்டைன் செய்ய ஆரம்பித்தீர்களோ அப்போதே உங்களின் குடும்ப நிதி பற்றிய தகவல்கள் அந்தப் வங்கி சம்பந்தப்பட்ட பிஸினஸ் சார்ந்த கம்பெணிகளுக்கு ஷேர் செய்யப்படும் அவர்களது பிஸினஸீற்காக... இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்.


அடுத்தாக இணையம் மூலம் அமேசான் மற்றும் பல அது போன்ற இணையதளங்களில் நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்கள் செல்போன் இமெயில் மற்றும் உங்கள் பெயர் மற்றும் விலாசம் மற்றும் க்ரெடிட் கார்ட் பற்றிய தகவல் தரும் போது அதை ஏற்றும் செயல்படும் நிறுவனங்கள் அந்தத் தகவல்களை மட்டுமல்ல அதோடு உங்கள் போன் மற்றும் கணணியில் நீங்கள் சேகரித்து வைத்து இருக்கும் பல தகவல்களை அவர்கள் திரட்டிவிடுகிறார்கள். ஏன் உங்கள் கணனியில் நீங்கள் பதிந்து வைத்து இருக்கும் உங்களது வங்கி தகவல்கள் வருமானவரி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எல்லாவற்றிலும் உள்ள தகவல்களை அவர்கள் அப்படியே வாரிவிடுகிறார்கள்.

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன? ஒருவேளை அது தெரிந்தாலும் உங்களால் செய்ய முடிவது என்ன? கொஞ்சமாவது யோசியுங்கள் மக்களே அது தெரியாமல் வாட்ஸ்ப் நம்ம தகவல்களைத் திரட்டுகின்றான் அதனால் அதனை விட்டுவிட்டு வேறு ஒரு ஆப்பிற்குப் போவோம் என்றால் இன்னும் ஒரு கம்பெனிக்கு உங்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் தானாகவே முன்வந்து  கொடுப்பது போலத்தான்.

நான் இதற்கு முன் வேலை பார்த்த அமெரிக்கக் நிறுவனத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்கின்றேன் நான் அந்த நிறுவனத்தில் சேல்ஸ்மேன் வேலையைச் செய்து வந்தேன் ஒரு நாள் ஒரு இந்தியர் 10,000 டாலர் மதிப்பிற்கான பொருட்களை வாங்கினர் அந்த ஆர்டரை எடுக்கும் போது சிஸ்டத்தில் அவரைப் பற்றிய விபரங்களைப் பதியும் போது பெயர் மற்றும் விலாசம் பதியும் போது அதோடு அவரின் போன் நம்பர் மட்டும் இமெயில் விலாசத்தையும் பதியத் தகவல்கள் கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் இந்தத் தகவல்களை நீங்கள்(கம்பெனி) சேகரித்து மற்றவர்களுக்கு ஷேர் செய்வீர்கள் என்று சொல்லித் தர மறுத்தார். அப்போது அவரிடம் சொன்னேன் நீங்கள் அதைக் கொடுத்தால்தான் நீங்கள் ஆர்டர் செய்தபொருடகள் வந்த போது உங்களிடம் தகவல் கொடுக்க முடியும் மேலும் பொருட்கள் வரத் தாமதம் ஆனால் உங்களுக்குத் தகவல் தர முடியும் மேலும் முக்கியமாக நீங்கள் பொருட்களைப் பெற வரும் போது ஆர்டர் செய்த பில்லை எடுத்து வர வேண்டும் ஒரு வேளை நீங்கள் அதைத் தொலைத்துவிட்டால் உங்கள் போன் நம்பர் மூலம்தான் திரும்பப் பெற முடியும் என்று சொன்னேன் நான் பில்லை பத்திரமாக வைத்துக்கொள்வேன் அதனால் என் நம்பரைத் தரமாட்டேன் என்று சொன்னார் அப்பச் சரி நான் போன் நம்பர் இடத்தில் ஏதாவது நிரப்ப வேண்டும் டம்மி நம்பரை டைப்ப செய்துகொள்கின்றேன் என்று சொல்லி அவர் "உஷார்" தன்மையைப் பாராட்டி அந்த ஆர்டருக்கான பணத்தைப் பெற முயன்ற போது ஒரு "பெரும் குண்டைத்" தூக்கிப் போட்டார். அந்தக் குண்டு ஒன்றுமில்லைங்க அவர் எங்கள் நிறுவனத்தின் போனஸ் பாயிண்ட் சிஸ்டத்தில் பதிந்து இருப்பதாகச் சொல்லி அதற்கான கார்டை தந்தார். அவ்வளவுதானுங்க அது வரை அவர் மிக ஸ்மார்டான ஆள் என நினைத்து இருந்த எனக்கும் என் அருகில் நின்ற ஊழியர்களுக்கும் வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் அவர் கொடுத்த போனஸ் கார்டையும் அவர் தந்த கிரெடிட் கார்டையும் தேய்த்துவிட்டு அவரை அனுப்பி வைத்தோம்

இப்ப சொல்லுகிறேன் எதற்கு நாங்கள் சிரித்தோம் என்று.. எங்கள் நிறுவனத்தில் பொருட்களை வாங்குபவர்களுக்கு அவர்கள் செலவிடும் தொகைக்குத் தகுந்தபடி அவருக்குப் போனஸ் பாயிண்டுகள் கிடைக்கும் .அதாவது அவர் செலவிடும் ஒவ்வொரு டாலருக்கும் இத்தனை சதவிகித ரிவார்ட் பாயிண்டுகள் .அதுமட்டுமல்ல குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவிட்டால் எக்ஸ்ட்ரா போன்ஸ் பாயிண்டும் அது போலக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பொருளை வாங்கினால் மேலும் கூடுதல் பாயிண்டும் கிடைக்கும் .இப்படிக் கிடைக்கும் புள்ளிகள் டாலர் மதிப்பிற்கு இணையானவை அந்தப் புள்ளியை வைத்து அதன் பின் வாங்கும் பொருட்களுக்குப் பணத்திற்குப் பதிலாக அந்தப் பாயிண்டை பயன்படுத்தி இலவசமாகப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான்.. எப்படி விமான டிக்கெட் வாங்கும் போது கிரெடிட் கார்ட் உபயோகித்தால் அந்தக் கிரெடிட் நிறுவனம் போனஸ் பாயிண்ட் தருமோ அது போலத்தான் எங்கள் கம்பெனி பாயிண்ட் சிஸ்டமும் .ஆனால் அதற்கு உங்கள் அலைப்பேசி நம்பர் இமெய்யில் கணக்கை கொடுத்துத்தான் அந்தத் திட்டத்தில் சேர முடியும் இந்தப் புத்திசாலி அப்படியான திட்டத்தில் சேர்ந்து இருக்கிறார் அதில் என்ன தப்பு என்கிறீர்களா?

எங்கள் நிறுவனம் ஒன்றும் பாயிண்ட்ஸ் பெயரில் டாலரை இழக்க முட்டாள்கள் அல்ல. அவர்கள் அதற்குப் பதிலாகத் தங்களைப்பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் .ஆனால் அதை நாங்கள் வெளிப்படையாக சொல்லுவதில்லை .சொல்லவும் அனுமதி இல்லை.. அப்படி எங்கள் நிறுவனம் திரட்டும் தகவல்களை அவர்களோடு பிஸின்ஸ் செய்யும் மற்ற நிறுவனங்களோடு ஷேர் செய்து கொள்வார்கள்.. எப்படி அமேசான் நிறுவனம் பல நிறுவனங்களோடு இணைந்து வியாபாரம் செய்து வருகிறதோ  அது போலத்தான் எங்கள் நிறுவனமும் செய்து வந்தது. ஆரம்பக் காலத்தில் ஒப்பந்த பிரைவைஸி பற்றிச் சொல்லாமல் ஆட்களைச் சேர்த்து வந்த எங்கள் நிறுவனம் ஒரு பிரச்சனை காரணமாக அந்த ஒப்பந்தை கொடுத்துச் சேர்க்க ஆரம்பித்தது .அந்த ஒப்பந்தம் இரண்டு பெரிய தாள்களில் மிகப் பொடிப்பொடியாக அச்சடித்து யாரவது கேட்டால் அவர்களுக்கு மட்டும் கொடுக்கும்படி கட்டளை இட்டு இருந்தது .அந்த ஒப்பந்தம் மிகத் திறமையான வழக்கறிஞர்களால் எழுதப்பட்டு இருந்தது அதை அவ்வளவு எளிதில் யாரும் படித்துப் புரிந்து கொள்ள முடியாதபடித்தான் இருக்கும்

இப்ப சொல்லுங்க யார் புத்திசாலி எங்கள் நிறுவனத்தில் பொருட்களை வாங்கிய அந்த இந்தியரா அல்லது நான் வேலை பார்த்த அமெரிக்க நிறுவனமா? இப்படிதான்  இங்குள்ள பல நிறுவனங்கள் போன்ஸ் பாயிண்ட் என்பதன் மூலம் ஆட்களின் விபரங்களை திரட்டி வருகிறார்கள்.. அமெரிக்கர் ஒவ்வொருத்வரின் கார் கீ ஜெயினோட பல நிறுவன போன்ஸ் பாயிண்ட் அட்டைகள் கண்டிப்பாக இருக்கும் அப்படி இல்லாத கார் கீ கொத்தை பார்ப்பது மிக அறிது.. தமிழகத்தில் இப்படி பலர் போத்தீஸ் சென்னை சில்க் இது போன்ற கடைகளின் அக்கவுண்ட் கார்ட்டையும் வைத்திருப்பதை நாம் அறியலாம்


இன்னொரு விஷயத்தையும் நான் உங்களோடு இந்தச் சமயத்தில் பகிர விரும்புகின்றேன் நான் எனது பழைய நிறுவனத்தில் வேலை செய்யும் போது ஒருவர் கிரெடி கார்ட் அப்பளை செய்ய வேண்டுமென்றால் எங்கள் சிஸ்டத்தில் அவரின் சோசியல் நம்பரைப் பதிய வேண்டும் (அதாவது இந்தச் சோசியல் நம்பர் என்பது இந்தியாவின் ஆதார் அட்டை நம்பரைப் போன்றது..) அதைப் பதிந்த பின்னால் எங்களின் கம்பெனியின் சிஸ்டம் அந்த நபரைப் பற்றிய முழுவிபரங்களையும் எடுத்துக் கொண்டு வந்துவிடும் அதில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமானால் செய்து சப்மிட் பண்ணிய பிறகு அவரின் கிரெடிட் ஹிஸ்டரியை சோதித்துவிட்டு அதன் பின் புதிய கார்டிற்கான அப்ருல் உடனே வரும்...


அப்படி அவர்கள் சோசியல் நம்பரைத் தரும் போது திறமையான சேல்ஸ்மேன்கள் அந்த நம்பரை மெம்மரைஸ் பண்ணிவிடுவதும் உண்டு காரணம் சில சமயங்களில் அந்த மாதத்திற்காகக் கிரெடிட் கோட்டா எங்களால் அச்சிவ் பண்ண முடியாத போது எங்களுக்கு மேலிடத்தில் உள்ள மேனேஜ்மென்ட் ஆட்களால் பிரஷர் வரும் போது அந்த ஷோசியல் நம்பரைப் பயன்படுத்தி எங்கள் நிறுவனத்தின் மற்றொருகாரட்டை அப்பளை செய்து அவர்களுக்கு அனுப்பிவிடுவோம். ஒரு சில வாடிக்கையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது விபரம் புரியாது அவர்களுக்கு இன்னொரு கிரெடிட் கார்ட் கிடைத்திருக்கிறது என்று கருதிக்ன் கொள்வார்கள் சிலர் கஸ்டமர்கேருக்கு போன் செய்து கேட்டால் உங்களது செயல்பாடுகளைப் பார்த்து கமெப்னி ஆட்டோமெட்டிக்காக அனுப்பியதாகச் சொல்லுவார்கள் .ஒருவேளை உங்களுக்கு வேண்டாம் என்றால் நாங்கள் கேன்சல் செய்துவிடுகிறோம் என்பார்கள். அவர்களும் ஒகே என்று விட்டுவிடுவார்கள்.. இந்தத் தகவல்கள் மோசமான சேல்ஸ்மேன் கைகளிலும் கிடைக்க வாய்ப்புண்டு அவர்கள் விலாசத்தை மாற்றிவிட்டால் என்னவாகும் என்று யோசியுங்கள்?


இங்கே உள்ள பெரிய நிறுவனங்களின் நிலையே இப்படி என்றால் சிறு நிறுவனங்கள், சிறு கடைகள் பெட்ரோல் பங்க் போன்ற இடத்தில் நாம் தேய்க்கும் கிரெடிட்கார்ட் நிலையை யோசித்துப் பாருங்கள்  இந்த சமயத்தில் ஒன்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.. இலங்கையில் போராட்டம் நடந்த போது மேலைநாடுகளில் பெட் ரோல் பங்குகளில்  சிறு இந்தியக் கடைகளில் வேலை பார்த்தவர்கள் நடத்தியவர்கள் அங்குத் தேய்க்கும் கார்ட் விபரங்களை தங்கள் நாட்டிற்கு அனுப்பி அங்குள்ளவர்கள் கிரெடிட் தேய்க்கும் இயந்திரத்தில் அந்த விபரங்களைச் செலுத்தி மிகச் சிறிய அளவில் பணத்தை எடுக்க ஆரம்பித்தார்கள் ஒரு டாலர் இரண்டு டாலர் அளவிற்குத் திருட ஆரம்பித்தனர் இதனைப் பலர் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை அதன் பின் அவர்கள் தொகையை அதிகரித்த பின்னர் பலரின் கவனத்திற்கு வந்து கிரெடிட் நிறுவனத்தில் ரிப்போர்ட் செய்தபின் நடந்த விசாரணையில் இந்த திருட்டுத் தனம் வெளியே வந்த பலர் கைது செய்யப்பட்டனர். இது போல வட நாட்டினரும் செய்து மாட்டினார்கள்

எப்படி எல்லாம் நம்மைப் பற்றிய தகவல்களை மற்றவர்கள் அறிய முடியும் என்பதைபற்றிய இன்னொரு விஷயத்தையும் சொல்லுகின்றேன் .

என் வீட்டில் நாய்க்குட்டி இருப்பதால் அதை அழைத்துத் தினமும் வாக்க்கிந் செய்வது என் வழக்கம். அப்படி எங்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வரும் போது யாரையாவது அடிக்கடி பார்க்க நேர்ந்தால் அவர் ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் அவரைப் பற்றிய தகவல்கள் வேண்டுமென்றால் அப்படி வாக்கிங்க போகும் போது அவர் எந்த வீட்டுக்குரியவர் என்பதைப் பார்த்த பின் அந்த வீட்டு நம்பர் மட்டும் தெருவின் பெயரை வைத்து டவுன் சிப் வெப் தளத்தில் பார்க்கும் போது அந்த வீட்டிற்குரிய தகவல்களைச் சேகரிக்க முடியும் அவர் வீட்டை என்ன விலைக்கு வாங்கினார் என்ன வரி செலுத்துகிறார் வாங்கியவர்களின் பெயர்கள் போன்ற விபரங்களை மிக எளிதாக யாரும் பெற முடியும் அந்த விபரங்களை வைத்து பேஸ்புக் லிங்கடன் போன்ற தளங்களில் அவர்களைப் பற்றி விபரங்கள் சேகரிக்கும் போது மிக எளிதாக அவர்கள் எங்குப் படித்தார்கள் என்ன வேலை செய்கிறார்கள் எங்கெல்லாம் வேலை செய்கிறார்கள் அவர்களின் நண்பர்கள் யார் என்பது பற்றிய விபரங்களும் கிடைக்கின்றன..

இப்ப சொல்லுங்க நீங்க எந்த டேட்டாவை யாரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளப்போகிறீர்கள் சாதாரண மனிதனான என்னாலே இப்படிப் பலவைபரங்களைச் சேகரிக்கும் போது டெக்னாஜியில் கிங்காக இருக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவது அவ்வளவு கடினமான காரியமா என்ன?

அதனால் சொல்லுகிறேன். நீங்கள் அந்தக் காலப்படி உங்களால் வாழ் முடிந்தால் மட்டும் இணையம் இல்லாமல் ஸ்மார்ட் போன் இல்லாமல்க்ரெடிட் கார்ட் டெபிட் கார்ட் இல்லாமல் குழந்தையை வீட்டிலே பெற்று வளர்த்தது பணப் பரிமாற்றம் செய்து ஆதார்கார்ட் மற்றும் இது போலச் சேவைகள் இல்லாமல் வாழமுடிய்மானால்தான் உங்களைப் பற்றிய தகவல்களை யாரும் சேகரிக்க முடியாது அப்படி முடியாவிட்டால் உங்களைப் பற்றிய தகவல்களை யாரும் எளிதில் சேகரிக்க முடியும்

உங்களால் செய்யக் கூடிய எல்லாம் இந்த மாதிரி பெரிய நிறுவனங்களின் ஆப்புகளைத் தவிர்த்து வேறு எந்த நிறுவனங்களின் ஆப்புகளை பதிவிறக்கம் செய்யது பயன்படுத்தாமல் இருப்பதே உங்களுக்குப் பாதுக்கப்பானது


அதுமட்டுமல்ல சைனிஸ் தயாரிப்பது செல்போங்களை வாங்கி உபயோகிக்காமல் இருப்பது மிக நலம் அந்தப் போங்களில் ஆப்களை நாம் பதிவிறக்கச் செய்யாவிட்டாலும் அந்தப் போன் கம்பெனீயே உங்களது தகவல்களைத் திருடிக் கொள்ளும் டெக்னாலிஜியுடன் கூடியது அதனால்தாம் அமெரிக்கப் போன்ற மேலை நாடுகள் சைனிஸ் தயாரிப்பான Huwai போன்ற போண்களைத் தடை செய்துள்ளது

அதனால் சொல்லுகிறேன் இதைப் படித்தவர்கள் வழக்கம் போல வாட்ஸப் மூலம் தகவல்களைத் தொடர்ந்து அனுப்பலாம் அல்லது என் நிறுவனத்தில் என்னிடம் பொருட்கள் வாங்கிய இந்தியரைப் போல ஸ்மார்ட்டாக இருக்கலாம் விஷயம் அம்ப்புட்டுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்



3 comments:

  1. ஒவ்வொரு விளக்கமும் "அதானே...! அவ்வளவு தான்...!" என்றே தோன்றியது...!

    ReplyDelete
  2. உண்மை.  உண்மை.  உண்மை.   இணையத்தினுள் எப்போது நுழைந்தோமோ அப்போதே நாம் வேவு பார்க்கப்படுகிறோம்,  உபயோகப்படுத்தப்படுகிறோம். சில வருடங்களுக்கு முன்னால் பேஸ்புக்கின் கண்டிஷன்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்தேன், அதைப் பதிவிட.  அப்புறம் அப்படியே மறந்து போனது.  இப்போது வாட்ஸாப் செய்வதாகச் சொல்லும் விஷயங்களை பேஸ்புக் தனது அக்ரீமெண்ட் கண்டிஷனில் ஏற்கெனவே சொல்லி இருந்தது.  அந்த ஸ்க்ரீன் ஷாட்களைத் தேடுகிறேன்.  காணோம்!

    ReplyDelete
  3. சரியான சமயத்தில் சரியான பதிவு பாராட்டுக்கள். இணையத்தில் உலா வர ஆரம்பித்ததிலிருந்தே நமது தகவல்கள் எல்லாம் சேகரிக்கப்படுகின்றன என்பது உண்மை. அதனை பயன்படுத்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.