Sunday, January 31, 2021

 

avargal unmaigal

பேஸ்புக் ட்ரெண்டும் புத்திசாலி மக்களும் (இப்ப சொல்லுங்க யார் புத்திசாலி?)

பேஸ்புக் நம்மைப் பற்றிய பெர்ஷனல் விஷயங்களைத் தொடர்ந்து பலவகைகளில் சேகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பல நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பெர்ஷனல் பாலிஸியில் பல வித மாற்றங்களைக் கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.. அதை நாம் அவர்களின் செட்டிங்கஸ் பகுதியில் போய் நாம் அப்டேட் செய்து கொள்ளலாம்.. பலர் தங்களை ரொமப் ஸ்மார்ட் என்று கருதி அதில் எல்லாவித மாற்றங்களையும் செய்து கொள்வார்கள்... அப்படி இருந்த போதிலும் பேஸ்புக் பலவிதமாகப் பெர்ஷனல் தகவல்களைக் கசக்கிப் பிழிந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது..


பலர் பேஸ்புக்கில் தங்கள் போட்டோ ,குடும்பப் போட்டோ ,நண்பர்களின் போட்டோ, கதை, கவிதை, கட்டுரை ,விமர்சனம் என்று பலவற்றை எழுதிக் குவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை வைத்து அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை ஒரளவிற்குதான் அறியமுடியும்.. ஆனால் அதுமட்டும் அவர்களுக்குத் தேவையில்லை உங்களைப் பற்றிய சகலவிஷயங்களையும் அஃது அக்கு வேற அணி வேற பிரித்து அறிந்து கொள்ள முயல்கிறது
 

அந்த ஒரு முயற்சிதான் பேஸ்புக்கில் தோன்றும் ட்ரெண்டுக்கள் உதாரணத்திற்கு இப்ப பேஸ்புக்கில் படிக்குக் கொண்டிருக்கும் ட்ரெண்ட் "நான் இங்க யாரையாவது ஸ்பெஷலா ஃபீல் பண்ண (உணர) வச்சிருக்கேனா? என்பது மாதிரி

இந்த ட்ரெண்டை அறிந்த மக்கள் உடனே தங்கள் கணக்கில் இதைப் போட்டு நண்பர்களிடம் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். உடனே நண்பர்களில் சிலர் கிண்டலாகவும் சிலர் உண்மையாகவும் பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.. இதை அவர்கள் திரட்டி அவர்கள் உங்களைப் பற்றி ஏற்கனவே திரட்டி வைத்த தரவுகளோடு ஒப்பிட்டு அனலைஸ் செய்து உங்களைப் பற்றி யாருமே அறியாத பல தகவல்களை அறிந்து அதைத் தங்களின் பிஸினஸ் வேலைகளைக்க்கு அதாவது மார்க்கெட்டிங்க் வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள் அதாவது அவர்கள் உங்களைப் பற்றி மிகத் துல்லியமாகக் கணித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் வேண்டுமானால் நண்பர்களிடம் ஒரு முகம், குடுமபததிற்கு ஒரு முகம் ,அலுவலகத்தில் ஒரு முகம் இப்படிப் பல இடங்களுக்குத் தகுந்தபடி காட்டிக் கொண்டிருக்கலாம்...

ஆனால் பேஸ்புக் போன்ற நிறுவனத்திற்கு மட்டும் உங்களின் உண்மையான முகம் தெரியும். அவர்கள் இப்படி ட்ரெண்டு மூலம் மட்டுமல்ல பலவிதமான ஆப் களை சிறு நிறுவனம் மூலம் வெளியிட்டு உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டே இருக்கிறார்கள் உதாரணமாக உங்களின் புகைப்படத்துக்களை ஒரு ஆப்பில் பயன்படுத்தினால் உங்களின் முகம் எந்தப் பிரபலமான ஆட்களின் முகச்சாயலைக் கொண்டிருக்கிறது தலைவரைக் கொண்டிருக்கிறது அல்லது உங்கள் முகம் யாரைப் போல இருக்கிறது என்ற தகவலை அது தரும் உடனே அதைப் பார்த்த நீங்கள் உங்கள் நண்பர்கள் பாலோவர்களும் அதைப் பற்றிய தங்கள் கருத்தைக் கூற நீங்களும் பதில் கூற உடனே பேஸ்புக்கும் அந்தத் தகவலைச் சேகரித்து உங்களை டவுசரை கழட்டி அக்கு வேற ஆணி வேற் என்று அனலைஸ் செய்யும்

அவர்களுக்கு இப்படிப்பட்ட உங்களைப் பற்றிய உண்மையான தகவல்தான் தேவையே ஒழிய நீங்கள் எழுதும் மொக்கைக் கவிதை கதை கட்டுரைகள் விமர்சனம் அல்ல

இதெல்லாம் புரியாமல் பேஸ்புக் மக்கள் ட்ரெண்டுக்களில் கலந்து, மிக மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதுமட்டுமல்ல தங்களை மிகப் புத்திசாலியாகக் கருதிக் கொண்டு வாட்ஸப் புதிய ப்ரைவேசி பாலிசி அப்டேட்களை அறிந்ததும் ஆஹா அவன் நம்ம தகவல்களைத் திருட முயல்கிறான். நாம என்ன முட்டாளா என்ன என்று நினைத்து அதற்கு எதிராகப் பேசி பதிவிட்டுவிட்டு ,உடனே அதற்கு இணையான வேறு ஆ பை தேடிப் போய்ச் சேருகிறார்கள்... அந்த புதிய ஆப் கம்பெனிகாரர்கள் ஆஹா நாம் பண்ணப் போகும் பிரியாணிக்கு இவ்வளவு ஆடுகள் தானாகவே வந்து மட்டுகிறதே என்று சந்தோஷமாக அவர்களை அரவணைத்துக் கொள்வார்கள்

முன்பு இப்படிப் பட்ட புத்திசாலிகளின் தனிப்பட்ட விஷயங்கள் பேஸ்புக் என்ற கம்பெனியிடம் மட்டும் இருந்தன, ஆனால் இப்போது இந்தப் புத்திசாலிகளின் பெர்ஷனல் விஷயங்கள் துக்கடா கம்பெனிகளிடமும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது

இங்கு நான் சொல்லி இருப்பது ஒருவகையான ட்ரெண்ட் இது பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விஷயங்களைத் திரட்ட ஏற்படுத்தப்படும் ட்ரெண்ட்... மேலும் பலவகையான பிஸின்ஸ் ட்ரெண்ட் பொலிடிக்கல் ட்ரெண்ட் என்று பல வகையான ட்ரெண்ட்டுக்களும் உள்ளன். அது பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்

இப்ப சொல்லுங்க யார் புத்திசாலி
 



31 Jan 2021

2 comments:

  1. இணையம் என்று வந்தபின் இவற்றிலிருந்து ரொம்பத் தப்பிக்க முடியாது!  ஆனாலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.  பெரிதளவு உபயோகம் இல்லாவிடினும் ஓரளவுக்கு செட்டிங்ஸ் சென்று ஆஃப் லைன் மேனேஜ்மேன்டில் சிலவற்றை நாம் அணைத்து வைக்க முடியும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.