Tuesday, February 2, 2021

 அட வாங்கோன்னா கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே


 

 

என் கனவில்
தமிழக தெருக்களில் '
மோடிநடந்து வந்தார்
வீதி தோறும்
பெண்கள் விளக்கமாரை
கையில் எடுத்தனர்


தப்ப நினைக்காதீங்க
அவர் வரும் வழியைச்
சுத்தம் செய்யத்தான்
எடுத்தார்கள்



 


தமிழகத்தில் பிஜேபி தலைமையில் கூட்டணி ஆட்சி வந்தால் அப்போது நீதி அமைச்சராக மதுவந்தியை நியமிக்கும்படி மோடிஜி அவர்களிடம் இப்போதே நான் கோரிக்கை வைக்கிறேன். அவரைவிடத் தகுதியானவர்  யாரும் இருக்க முடியாது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை # மக்கலே நான் சொல்வது சரிதானே

மதுரையில் எய்ம்ஸ் மட்டும் அடிக்கல் நாட்டின நேரத்தில் கட்டி முடிச்சு இருந்தால் இந்த பட்ஜெட்டிலே அதை தனியாருக்கு வித்து இருக்கலாம் மிஸ் பண்னிடாங்க

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் என்ன சொல்லி இருக்கிறது என்பது பற்றி அவருக்கே அதிகம் தெரிந்திருக்காது நாலு பைனான்சியர் ஆலோசகர் சொன்னதை ஏதோ குத்துமதிப்பா  எடுத்து ஒரு பட்ஜெட் போட்டு இருப்பாங்க.. அப்படி அவங்க போட்ட பட்ஜெட்டை படித்துப் புரிவதற்கே அவங்ககளுக்கு பல் நாட்கள் ஆகும்.. ஆனால் அந்த பட்ஜெட் வெளியான உடனே இந்த சங்கிகள் அதைப் பற்றி சொல்லுவாங்க பாருங்க அப்பப்பா இந்த பட்ஜெட் மிகச் சிறப்பானது இதனால்  இந்தியா இப்படி வளர்ச்சி அடையும் பொருளாதார முன்னேற்றம் இத்தனை சதவிகிதம் வளர்ச்சி அடையும் இதனால் இத்தனை பேர் பலனடைவார்கள் என்று எல்லாம் பேசி எழுதிக் கொண்டதைப் பார்த்துப் படித்ததும் தான் நிர்மலா சீதாராமனுக்கே புரியும் நாம் குத்து மதிப்பா போட்ட பட்ஜெட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா என்று


அதன் பின்தான் மாமி ஊடங்களில் பட்ஜெட் பற்றி வாய்கிழிய பேசுவாங்க


உங்க பொண்டாட்டி நீங்கள் வாங்கிய சம்பளத்தில் குடும்ப நடத்த முடியாமல் உங்களை மேலும் கடன் வாங்க வைத்தால்   எப்படி மோடி நஷ்டத்தில் ஓடும் அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றுவிடுகிறாரோ அது போல நீங்களும் உங்கள் மனைவியை விற்றுவிட்டு மோடி போல நிம்மதியா வாழலாம் என்ன நான் சொல்லுறது சரிதானே



 மோடி மட்டும் கவிதை கதை எழுதுபவர்களுக்கும் அப்படி எழுதியவர்களுக்கு ,விருது கொடுப்பவர்களுக்கும்   வரி விதித்தால் என் ஆதரவை ஏன்  என்  உயிரைக் கொடுக்கக் கூட தயாராக இருக்கிறேன்.


மோடி அரசுத்துறை எல்லாம் தனியார்த் துறைக்கு விற்ற பின் அந்தந்த துறைக்கு அமைச்சர்கள் ஏன் அவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஒரே நாடு ஒரே தலைவர் ஒரே சட்டம் என்று கொண்டு வந்திடலாமே




February 14 மோடி தமிழ் நாட்டுக்கு வருகிறாராம் நான் #காதலர்_தினவாழ்த்துக்கள் தோழிகளுக்கு சொல்வேனா அல்லது #GoBackModi என்று சொல்வேனா? அதனால இன்பாக்ஸ் தோழிகளுக்கு இப்பவே காதலர் தின வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

02 Feb 2021

2 comments:

  1. வழியில் தடைகள் ஏற்படுத்துவதெல்லாம் கொடூரம்...

    ReplyDelete
  2. எப்படியோ நாம் மீண்டும் அடிமைகள் ஆவது உறுதி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.