Sunday, February 14, 2021

 எந்தப் பெண்ணை மனதில் நினைத்து அதைத் தருவார்கள்
 
 






அமெரிக்கா வந்த 70,80 & 90 தமிழ் கிட்ஸ்க்கள் தங்கள் வாலிப வயதில் வீட்டு அருகில் உள்ள பெண்களைப் பார்த்துக் காதலித்து அதைச் சொல்ல முடியாமல் தவித்து அல்லது சொல்லி இருந்தாலும் நிராகரிக்கப்பட்டு இறுதியில் வீட்டில் பார்த்தப் பொண்ணை மணமுடித்து இப்போது அமெரிக்காவில்  வசிக்கும் அவர்கள் காதலர் தினத்தின் போது மனைவிக்கு ரோஸ் & கிப்ட் வாங்கி கொடுக்கும் போது எந்தப் பெண்ணை மனதில் நினைத்து அதைத் தருவார்கள்


வாலிப வயதில் தமிழ் பசங்கள் பெண்களை ஆசையாகப் பார்க்கும் போது மூஞ்சை பாரு முகரையைப் பாரு இந்த மூஞ்சி எல்லாம் நம்மைப் பார்த்து லுக் விடுதுன்னு சொல்லி வாலிபர்களின் மனதைச் சிதைத்தவர்கள் தமிழ் பெண்கள்.. அப்படிப்பட்ட ஆண்களை மணந்துவிட்டு அதுவும் காதலர் தினம் அன்று  அவன் ரொம்ண்டிக்காக  மாறனும் என்று எதிர்பார்த்தால் எப்படி.
 
மனைவி "காதலர் தினம் அதுவுமா எனக்கு ஆசையாக ஏதாவது வாங்கி தரக் கூடாதா ?


கணவன் : உனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வாங்கி தர நினைச்சேன் ஆனால் சரியான தோழி இன்னும் சிக்கலை... இப்படி சொல்லிவிட்டு கட்டிலுக்கு அடியில் படுத்து கிட்டு மனைவி கையில் சிக்காமலிருந்து கொண்டு காதலர் தின பதிவுகளைப் போட்டுக் கொண்டு இருக்கின்றேன். அதனால் இப்போது யாரும் வீட்டுக் கதவைத் தட்டி நான் திறக்காமலிருந்தால் காதலர் தினத்தைக் கொண்டாடிக்கிட்டு இருக்கிறேன் அதனால் கதவை திறக்கமாட்டேங்கிறான் என்று நினைக்க வேண்டாம்


கலாச்சார காவலர்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களாம் முடிஞ்சா காதல் கவிதை எழுதுறவங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிங்கப்பா

 

சுட்ட கருத்து டிங்கரிங்க செய்யப்பட்டது




இந்த கொடுமையை நான் எங்கே சொல்வது எப்படி சொல்வது என தெரியவில்லை.. இப்போது மணி மாலை  6.30 ஆகிறது நாய்க்குட்டியை வெளியே கூட்டி சென்றுவிட்டு ஹாலில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தேன் அப்போது மகள் அவளுக்கு வேண்டிய காபியை போட கிழே வந்தாள். அப்போது அவளுடன் உரையாடி சிரித்த போது அதைக் கேட்ட என் மனைவி அவள் ரூமில் இருந்து கிழே இறங்கி வந்தவளுக்கு ( அப்போதுதான் கோமாவில் இருந்து எழுந்து வந்தவள் போல) இன்று காதலர் தினம் என்பது ஞாபகம் வந்து என் மகளுக்கு வாழ்த்து சொல்லி அவளை அணைக்க சென்ற போது அவள் ஒடிவிட்டாள் உடனே என் பக்கம் வந்து எனக்கு வாழ்த்து சொல்லி அணைத்து கொண்டாள் . இப்படி தீடிரென்று அவள் செய்வாள் என்பதை நான் எதிர்பார்க்காததால் நான் சோபாவில் இருந்து எழுந்து ஒட முடியவில்லை.. அடக் கடவுளே எனக்கு ஏன் இந்த கொடுமை.....


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. காதலையே நான் ஒரு தலையாகத்தான் காதலிக்கிறேன்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.