இங்கே நான் சொல்லி இருக்கும் யோசனைகள் மூலம் ,மத்திய அரசின் வருமானத்தைப் பெருக்கி நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்யலாம்.. அதன் பின் மக்கள் மனதில் நீங்காஆஆஆஆஅ இடம் பெறலாம்.
1. பெட்ரோல் அட்டை திட்டம் Petrol card scheme
இந்தத் திட்டத்தின் படி ஒவ்வொரு வண்டிக்கும் உரிமம் வைத்திருப்பது மாதிரி ஒவ்வொரு வண்டிக்கும் ஒரு பெட்ரோல் அட்டை திட்டம் அறிமுகப்படுத்துங்கள். இந்த அட்டை வைத்திருக்கும் வண்டிக்கு மட்டும் பெட்ரோல் விற்க்கப்படனும்.. இந்த அட்டையை அரசிடம் விண்ணபித்து வாங்க 1000 ரூ கட்டணத் தொகை செலுத்த வேண்டும். இதனால் மத்திய அரசுக்கு எவ்வளவு கோடி வருமானம் கிடைக்கும்
அடுத்தாக ஒரு நாளுக்கு ,ஒரு வண்டிக்கு 2 லிட்டர் மட்டும்தான் குறிப்பிட்ட நியாய விலையில் விற்க வேண்டும். அதற்கு மேல் போட விரும்புவார்களுக்குக் குறிப்பாக 2 லிட்டரிலிருந்து 5 லிட்டர் வரை இன்னும் கொஞ்சம் அதிகவிலையில் விற்கலாம். மேலும் 5 லிட்டரிலிருந்து 10 லிட்டர் வரை போடுபவர்களுக்கு இன்னும் சற்று அதிகவிலைக்கு விற்கலாம். எப்படி மின்சாரம் கட்டணம் குறிப்பிட்ட யூனிட் வரை ஒரு விலையோ மேலும் அதற்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது யூனிட்டிற்கு விலை ஏறுவது போலப் பெட்ரோலுக்கும் விலையை நிர்ணயிக்கலாம்.
மேலே சொன்னது வருமானத்தை பெருக்க ஆலோசனை ,இது விலையை உயர்த்தும் போது மக்கள் எதிர்ப்பை திசை திறப்ப ஆலோசனை
பெட்ரோல் விலையை ஏற்றும் போது சில நாட்களுக்குப் பெட்ரோல் மக்களுக்கு எளிதில் கிடைக்காதவாறு செயற்கை தட்டுப்பாடுகளை உருவாக்குங்கள்.. அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது பெட்ரோல் கிடைத்தால் பரவாயில்லை என்று சொல்லி விலையைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அதற்குப் பிறகு எவனாவது பெட்ரோல் விலை உயர்ந்துடுச்சு என்று கூப்பாடு போடுவானா என்ன?
2.செல்போன் உரிமம் கட்டணம் ' Cellphone license fee
செல்போன் வைத்து இருப்பவர்கள் .செல்போன் உரிமம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்து சாதாரண நோக்கியவிற்கு ஆண்டுக்கு 100 ரூயும், ஐபோன் போன்ற ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 1000 ரூவும் கட்ட வேண்டும் என்று அறிவித்துவிடுங்கள்
3. போராட்ட கட்டணம். protest fee
இந்தத் திட்டத்தின் படி யாரு வேண்டுமானாலும் போராடலாம் ஆனால் ஒரு மணிநேரப் போராட்டத்திற்கு ஒரு தொகையும் மேலும் கூடுதல் ஒவ்வொரு மணிக்கும் ஒரு தொகையும் மேலும் ஒரு போராட்டத்திற்கு 100 பேர் வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையும் கூடுதல் ஒவ்வொரு நூறு ஆட்களுக்கும் சற்று அதிகத் தொகையும் கட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வாருங்கள் அதன் பின் போராட்டமும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையும் குறைந்தே விடும்
4. உலக வங்கி கடனை அடைக்கும் திட்டம் World Bank loan repayment plan
தனிப்பட்டவரின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ,அவர்கள் இந்தியா உலக வங்கியிடம் வாங்கிய கடனை அடைக்க ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களின் வருமானத்திற்குத் தகுந்து வசூலிக்கலாம்.
5. மத்திய வாகன பதிவு சட்டம் : Federal Vehicle Registration Act
ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொன்னால் மட்டும் போதுமா என்ன? அதனால் வாகனப்பதிவு உரிமையை மாநிலத்தில் இருந்து மத்திய அரசு எடுத்து அதற்கான பதிவு கட்டணத்தை வசூல் பண்ணலாம். இதனால் மத்திய அரசிற்கு வருமானம் அதிகரிக்கும்.
இப்படி மத்திய அரசின் வருமானத்தைப் பெருக்க மேலும் பல திட்டங்கள் என்னிடம் இருக்கிறது.. முடிந்தால் நிர்மலா சீதாராமனை நீக்கிவிட்டு எனக்கு அந்தப் பதவியைக் கொடுத்தால் மேலும் பல சிறப்புத் திட்டங்களைத் தங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றேன்
எனது திட்டங்களால் மத்திய அரசு அதிக வருமானத்தைப் பெறமுடியும் அதனை வைத்து நாட்டிற்கு நல்லது பல செய்ய முடியும் அப்படி நீங்கள் செய்தீர்களானால் ராமர் கோயிலுக்குப் பதிலாக அங்கே மோடிக்குக்குக் கோயில் எழுப்பிவிடலாம்
மோடி பிறவியிலேயே ஒரு கிறிஸ்து பேரைச் சொல்லி ஏமாற்றும் கிறிஸ்துவர்
அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மத்திய அரசின் நிதி ஆலோசனை தலைவர்
டிஸ்கி : இதை நான் எழுதியது நகைச்சுவைக்காக என்றாலும் வருங்காலத்தில் இந்திய அரசு என் ஆலோசனையை ஏற்று செயல்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
மேலே சொன்ன கட்டணங்கள் அனைத்தும் ஒரு App. முலம் மட்டுமே செலுத்தும்படி வைத்து அந்த App ஐ தரவிறக்கம் செய்யவும் தரவிறக்கத்துக்கான கட்டணம் செலுத்தவும் உத்தரவிட்டு அந்த வருமானம் மதுரைத்தமிழனுக்கு கிடைக்கும்படி செய்து இப்படி நல்ல யோசனைகளை அடிக்கடி தரும்படி அவரை உற்சாகப்படுத்தலாம்!!!!
ReplyDeleteஎனக்கு பத்மபூஷன் அவார்ட்தான் வேணும் வருமானம் வேண்டாம்
Deleteஎல்லாத்தையும்விட மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் வருமானத்தை பெருக்கிவிடலாம்.
ReplyDeleteபணமதிப்பை மீண்டும் கொண்டு வரமாட்டோம் அப்படி கொண்டு வந்தால் 50 நாளில் தீக்குளிப்பிங்களா என்று மீண்டும் ஞாபகம் வைச்சு கேட்பீங்க
Deleteஅதுவும் உண்மை தான்.
Deleteதுன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று வள்ளுவன் சொன்னதை செய்கிறீர்களோ தனபாலன்
ReplyDelete