Friday, February 12, 2021

 

avargal unmaigal

எவனோ லூசு ஒருத்தன் ஆண்கள் மாதிரி பெண்களால்???

அரசியல் வாதிகளைக் கலாய்த்தால் ஆட்டோ வரும் வாராமல் போகும் ஆனால் மனைவியைக் கலாய்த்தால் தலையைக் குறிபார்த்து பூரிக்கட்டை வரும் என்பது அனுபவப்பாடம்

எவனோ லூசு ஒருத்தன் ஆண்கள் மாதிரி பெண்களால் சாலையோரம் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க முடியுமா என யாரோ கேட்டுவிட்டாராம். ஒட்டுமொத்த பெண் போராளிகளும் போராட்டக் களத்தில் குதித்தித்து  ஆண்களைப் பார்த்து ‘உன்னால் பிள்ளை பெற்றுக் காட்ட முடியுமா?’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். உடனே அதைக் கேட்ட ஆல்பர்ப்பஸ் அங்கிள்கள் தோழி ‘நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் என்னை செருப்பால அடித்த மாதிரி இருக்கிறது எனப் பதிலீட்டு கொண்டு இருக்கிறார்கள்.
 
இதை பார்த்துட்டு நாம கருத்துச் சொல்லாமல் போனால் சமுகம் நம்மை ஒதுக்கிடும் என்பதால் பெண்களே ஆண்களைப் போல உங்களால் காதலர் தினத்திற்குப் பரிசு வாங்கி கொடுத்து கேண்டிலைட் டின்னருக்கு அழைத்துப் போய் ரொமான்ஸ் பண்ண முடியுமா என்று கேட்டுவிட்டு ஒடி வந்துட்டேன்.. ஹீஹீ

தேர்தல் நேரத்தில் பண்பட்டுவாடவை தேர்தல் ஆணையம் கண்கொத்தி பாம்பாகக் கவனிப்பது போலக் காதலர் தினம் வரும் போது பெண்கள் தங்களின் கணவரின் கிரெடிட் கார்ட்  இணையம் பரிமாற்றத்தைக்  கண்கொத்தி பாம்பாகக் கண்காணிக்க வேண்டும்/ அப்போதுதான் எத்தனை தோழிகளுக்கு அவர்கள் பரிசுப் பொருட்கள் ஆர்டர் பண்ணி இருக்கிறார்கள் என்பது தெரிய வரும் .  நமது கருத்து சரிதானா என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வோம்


 
@avargal unmaigal

நான் :கோவிலுக்குப் போய் சாமியைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று ஹும்

நண்பர்: வீட்டிலேயே சாமியைக் கும்பிடலாம்தானே.( நமது வீட்டில் இருப்பது பேய்ன்னு அவனுக்குத் தெரியலை)

நான் : அடேய் நான் பார்க்கும் சாமி வேறடா. உனக்கு அதெல்லாம் புரியாதுடா. ஹும்ம் இப்படி எல்லாம் நமக்கு நண்பர்கள் வாய்த்து இருக்கிறார்களே

அந்த காலத்தில்  பெண்கள் தினமும் வீட்டைச் சுத்தம் செய்வது என்ற பழக்கம் ஆனால் இந்த காலத்தில் ஆண்களோ அல்லது பெண்களோ வீட்டைச் சுத்தம் செய்கிறார்களோ இல்லையோ  ஆனால் தினமும் தங்களின்(Browser History ) ப்ரெளசர் ஹிஸ்டரியை  சுத்தம் செய்துவிடுகிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. சுத்தம் செய்தாலும் கண்டுபிடித்து விடலாம்...!

    ReplyDelete
  2. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூறியதைப் போல சுத்தம் செய்தாலும் கண்டுபிடித்துவிடலாம் என்று மற்றொரு நண்பர் கூறிய நினைவு.
    அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.