Wednesday, February 24, 2021

 



தன் கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகத் தான்  அணிந்திருந்த அழகான ஆடையைக் களைந்துவிட்டு பெட் ரூமில் அவனுக்காகக் காத்திருந்தாள் மனைவி.. கணவன் கதவைத் திறந்ததும் என்ன ஒரு அழகு என்று அவள் தரையில் தூக்கிப்  போட்டு இருந்த ஆடையைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சென்றான்,

 

உங்கள் கஷ்டங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம் யாரும் உதவ முன்வரமாட்டார்கள் அது போல உங்கள் சந்தோஷத்தையும் சொல்ல வேண்டாம் அதில் அவர்கள் சந்தோசப்பட ஏதும் இருக்காது

 

சிலர் வெளிச்சம் தேவைப்படும் வரைதான் மெழுகுவர்த்தியை உபயோகிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான வெளிச்சம் கிடைத்த பின் அந்த மெழுகுவர்த்தியை பேஸ்புக்கில் அன்பிரண்ட் செய்வது போலச் செய்து தூக்கிப் போட்டுவிடுவார்கள். அதற்காக அந்த மெழுகுவர்த்தி கவலைப்பட்டு கொண்டிருப்பதில்லை. காரணம் வெளிச்சம் தேவைப்படும் போது அவர்கள் மீண்டும் அந்த மெழுகுவர்த்தியிடம் தன்னாலே வந்து சேருவார்கள்.

 

தமிழ் தமிழ் என்று பேசும் தமிழர்களும் தமிழ் சங்கங்களும் ஒரு சிறு முயற்சி செய்யலாம் அந்த முயற்சி இதுதான் மேலை நாடுகளுக்கு வந்து பல துறைகளில் மிகச் சிறந்த  இடத்தி; இருந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் துறையைச் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதி வெளியிடலாம் அல்லது மொழி பெயர்ப்பு செய்யலாம் தானே என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் அதை நம் தாய் மொழியில் படித்தால் மிகச் சிறப்பாக சிந்திக்க இயலுமே. இதைச் செயல்படுத்த முயற்சி செய்வீர்களா?

 

ஒரு பெண் அழகாக சேலை கட்டி தலையில் பூ வைத்து நெற்றியில் பொட்டோ சந்தணமோ வைத்து பின்புறம் இயற்கையோடு கூடிய அழகான கோயிலிருந்தால் மனம் அப்படியே மயங்கிப் போகிறது இந்த வயதிலும்.. மயங்கியது மட்டுமல்ல ஏக்கமாகவும் இருக்கிறது.. இப்படி எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா எல்லோருக்கும் தோன்றுமா?

 

எல்லா கிரகங்களுக்கும் அதிபதி நம் இறைவன் என்று எல்லா மத/வேத புத்தங்களில் இறைவனைப்பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் கடவுகள் பூமியில் மட்டும் மீண்டும் மீண்டும் அவதரித்து தனது அற்புதங்களை நிறைவேற்றுவதாக சொல்லப்படுவது ஏன்?மற்ற கிரகங்களிலும் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டு இருக்கலாம்தானே. ஆனால் அதைப் பற்றி எந்த வேத புத்தகங்களிலும் ஏன் சிறிது கூடச் சொல்லப்படவில்லை. ஒருவேளை மற்றைய கிரகங்களைப்பற்றி சரிவரத் தெரியாத வேத விற்பன்னர்கள் இந்த வேதப் புத்தங்களை எழுதி இருக்கிறார்களா என்ன? அதுக்குதான் சொல்லுகிறது எல்லா கிரகங்களுக்கும் ராக்கெட் விட்டு அங்கே வேறு எந்த ஜீவராசிகளும் வசிக்கிறதா அல்லது வசித்ததா என்று ஆராய்ச்சி செய்துவிட்டு அதன் பின் வேதங்களை வேத புத்தகங்களை எழுதி இருக்கலாம்தானே அதற்குள் ஏன் இவர்கள் இப்படி அவசர அவசரமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

24 Feb 2021

10 comments:

  1. கடைசி பாரா சிந்தனையை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies

    1. கருத்திற்கு நன்றி .அந்த சிந்தனை நீண்ட நாளாக என் மனதில் ஒடிக் கொண்டிருந்தது..

      Delete
  2. ஹா ஹா ஹா இப்போதெல்லாம்..இருந்தா இருந்தாப்போல ட்றுத்திற்கு மட்டும் இப்படி ஆகிவிடுகிறதே.. இல்லை மாத்தியும் சொல்லலாம், மைண்ட் வொயிஸை வெளியே கேட்கும்படி சொல்கிறார்.. எல்லாம் கொரோனாவின் எஃபெக்ட்தான்:))..

    அம்பேரிக்காவில இருந்துகொண்டு சேலையாம், பூமாலையாம், மஞ்சளாம் பொட்டாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஓவராசை உடம்புக்குக் கேடு ட்றுத்:))

    ReplyDelete
    Replies
    1. அது ஓவராசை இல்லை இங்குள்ள பாலாஜி கோயிலுக்கு சென்றால் பார்க்கலாம் ரசிக்கலாம் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.. இப்போதெல்லாம் சினிமா படங்களை பார்த்து ரசித்து பெரு மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றேன்

      Delete
  3. மெழுகுவர்த்தி ...unfriend கஷ்டங்கள் ...டோலர் ரொம்ப பீலிங்ஸ்ல இருக்காப்ல !!!!  என்னாச்சு ட்ரூத் :))

    ReplyDelete
  4. கோயில் ,பூமணம் ,புடவை ஹ்ம்ம் அப்படியே சைடால பாருங்க பூரிக்கட்டையும் தெரியும் :)))))))

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டை தெரிஞ்சதாலதானே புலம்பிக் கொண்டிருக்கிறார்:)) இல்லை எனில் இப்போ பாலாஜி கோயில் வீதியில நின்றிருப்பார் :)) ஹா ஹா ஹா.

      Delete

    2. பூரிக்கட்டை இப்படி எல்லாம் சேலை கட்டி பூ வைத்து பொட்டு வைத்து வந்தால் இப்படி எல்லாம் ஏக்கம் வருமா இல்லைன்னா பாலாஜி கோயில்லுக்கு போக ஆசைதான் வருமா?

      Delete
  5. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா ..என்னாச்சு ட்ரூத்துக்கு கிரகம் பதிலாம் யோசிக்கிறீங்க .இப்போ நானே குயம்பி போயிருக்கேன் :)

    ReplyDelete
    Replies

    1. இனிமே இது மாதிரி நிறைய எழுது உங்களை நல்லாவே குழப்பிவிடலாம் என நினைக்கின்றேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.