பாகிஸ்தானின் 'சதி' செயல் காரணமாக ஜம்மு காஷ்மீரில் முடங்கிக்கிடந்த இணையச் சேவை மீண்டும் ஆரம்பம் (Modi Govt is finally restoring 4G services in Jammu and Kashmir)
என்ன மோடி ரொம்ப நல்லவராக மாறி இப்படிச் செய்து இருக்கிறார் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள், அவர் இப்படி ஜம்மு-காஷ்மீரில் 4 ஜி சேவைகளைக் கொடுக்க ஆரம்பித்தற்குப் காரணமே பாகிஸ்தான் தான்.
ஜம்மு-காஷ்மீரில் தனது மொபைல் கவரேஜை விரிவுபடுத்தும் திட்டத்தைப் பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கம் தயார் செய்துள்ளது, இது பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவி உதவ உதவுவதற்கு மட்டுமல்லாமல், அரசாங்கம் விதிக்கும் எதிர்காலத் தகவல் தொடர்பு முற்றுகையின் தாக்கத்தை நடுநிலையாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதற்கான முயற்சியைக் கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் படி இந்திய நேரப்படி காலை (பிப் 5) யில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நெட்வொர்க் சிக்னல் அங்குள்ள குடியிருப்பவர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தது என்று செய்தி பரவத் தொடங்கியது அரசு தரப்பில் ரெட் அலர்ட் கொடுத்துக் கண்காணிக்க ஆரம்பித்தது. அந்தத் தகவல் உறுதியானதும் மோடி தகவல் தெரிவிக்கப்பட்டு அதனால் ஏற்படும் பின் விளைவுகள் விவாதிக்கப்பட்டது அதன் முடிவில் இந்திய அரசும் தன் முடிவை மாற்றி 4 ஜி சேவைகளை மீண்டும் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
மேலும் "பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் சிக்னல்களைப் பயன்படுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்" அதுமட்டுமல்லாமல் " குடிமக்கள் பாகிஸ்தான் சிம் கார்டுகளையும் பயன்படுத்தலாம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட ஆரம்பித்து இருக்கின்றனர்..
இந்தத் தகவல்களைப் பிரபல ஆங்கில நாளிதழ்களின் இணையப் பதிப்புகளின் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்தச் செய்தியை அறிந்ததும் தமிழ் நாளிதழ்களில் இது பற்றி ஏதும் வந்திருக்கிறதா என்றால் ஒரு நாளிதழும் அது பற்றி எழுதவில்லை.. சரி தமிழக டிவி செய்திகளைப் பார்க்கலாம் என்று தொலைக்காட்சியை ஆரம்பித்தால் அங்கும் செய்திகள் இல்லை கடைசியாக ஒரு சிறு செய்தி போலப் புதிய தலைமுறையில் அது பற்றிச் செய்தி வந்தது
அதில் இந்தக் கொரோனா காலத்தில் மாணவர்கள் இணையச் சேவை இல்லாததால் சரி வரப் படிக்க முடியவில்லை என்று பலரும் வழக்குப் போட்டதன் காரணமாக அரசு மீண்டும் சேவையை வழங்க முடிவு செய்து சேவையை வழங்க ஆரம்பித்து இருக்கிறது என்று சொல்லிவிட்டு அடுத்த செய்திகளுக்குப் போய்விட்டார்கள்
முடங்கிய இணையச் சேவை கிடைத்தது என்பது மிகப் பெரிய செய்தி அதை மிகச் சாதாரணச் செய்தியாகவே இவர்களால் சொல்ல முடிகிறது என்றால் இவர்களின் ஊடக தன்மையை என்னவென்று சொல்லுவது
இணையைச் சேவையைப் போல அவர்கள் எப்போது உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார்கள் என்பதுதான் அடுத்தக் கேள்வி?
அன்புடன்
மதுரைத்தமிழன்
Pakistan readies plan to sabotage J&K telecom blackout with new mobile towers
Pakistan’s grand communications plan is designed to
help infiltrating terrorists, carry Islamabad’s message across the LoC
and neutralise communication lockdowns in Kashmir valley
Prime Minister Imran Khan’s government
has readied a plan to expand coverage of its mobile coverage in Jammu
and Kashmir that is not only designed to help Pakistan-trained
terrorists infiltrating into the valley but also neutralise the impact
of a future communication blockade imposed by the government, people
familiar with the matter said.
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.