Friday, February 26, 2021

 வைரமுத்து சின்மயி விவகாரத்தில் பொங்கி எழுந்த பெண்ணுரிமை இயக்கங்கள் ஊடகங்கள் இப்போது ராஜேஷ்தாஸ் விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?


2018 ல் பின்னணிப் பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகப் பதிவிட்டார். , இந்தச் சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அதன் பின் நாடு ஊடகங்களும் பெண் உரிமை இயக்கங்களும் சுனாமி போல வைரமுத்து மேல் பாய்ந்தன. அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதுவும் ஆதாரம் ஏதும் இல்லாத நிகழ்விற்குப் பொங்கிய இவர்கள் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, ஒருவர், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல்துறை உயரதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது கொடுத்துள்ள புகார், காவல்துறை தாண்டியும் அரசியல் தளம் முதல், சமுக இணையதளம் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் இதைப் பற்றி எந்த ஊடகங்களும் விவாதிக்கவில்லை. அது ஏன்? வைரமுத்து தமிழர் என்பதலா அல்லது அவருக்குத் திராவிடக் கழகத்தில் இருப்பதன் காரணமாகவா?
 


புகார் கொடுக்கச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ்தாஸ் அழுத்தத்தின் காரணமாகக் காவல்துறை உயரதிகாரிகள் இருவரால் புகாரைத் தவிர்க்கும்படி அறிவுரை சொல்வது போல மிரட்டப்பட்டிருக்கிறார், அதுமட்டுமல்ல உடல் ரீதியான மல்லுக்கட்டும் அளவுக்கு மரியாதையின்றி நடத்தப்பட்டிருக்கிறார்.

ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரணப் பெண்களின் நிலை என்ன என்பதைத்தான் இந்த நிகழ்வு வெளி உலகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ஐ.பி.எஸ்ஸே ஆனாலும் பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்கள் ஆதரவற்ற நிலைக்கு ஆளாவார்கள் என்ற எச்சரிக்கையை அனுப்பும் விதமான காட்சிகள் அரங்கேறின. கொடுக்கப்பட்ட புகாரோ காவல்துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் அதிகாரத்தால் நகர்வின்றிக் கிடக்க, ஒரு சில மீடியா அதைக் கையில் எடுக்க, அடுத்து எதிர்க்கட்சி தலைவர்களும் குரல் கொடுக்க, அதன் பிறகே நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த நடவடிக்கைகளும் கண்துடைப்பு நடவடிக்கைகள் போலத்தான் இருக்கின்றது

இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள், விசாரணைகள் எல்லாம் தேர்தல் நேர அச்சம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஸ்டன்ட்கள் என்பதையும் மக்கள் அறியாமல் இல்லை. ஆனால் அறிந்தும் மக்கள் வாய்முடிக் கொண்டி இருப்பதுதான் ஆச்சிரியமாக இருக்கிறது



அன்புடன்
மதுரைத்தமிழன்


7 comments:

  1. எது நடந்தாலும் மக்கள் விவாதிக்க மட்டுமே இயலும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தங்கள் வீட்டு பெண்களுக்கு நிகழாதவரை அது விவாதப் பொருள்தான் நம் விட்டு பெண்களுக்கு நடந்த பின் அது ?????

      Delete
  2. ராஜேஷ்தாஸுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்...!

    ReplyDelete
    Replies

    1. ஒருவேளை ராஜேஸ்தாஸின் திறமையை பார்த்து பாஜக தேசிய தலைமை அவருக்கு மிகப் பெரிய கட்சி பொறுப்பை தரும் எனவும் எதிர்பார்க்கலாம்

      Delete
  3. பாவம்...  கள்ளமற்ற வைரமுத்து மேல் அநியாயமாக பழி சுமத்தினார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கபடமற்ற.. எதனால் விட்டுப் போச்சு

      Delete
    2. வைரமுத்துவை கள்ளமற்றவர் கபடமற்றவர் என்று சொல்லும் நீங்கள் அவரை போல குணமுடைய ராஜேஸ்தாஸ் பற்றி ஏதும் சொல்லாமல் அமைதிகாப்பதன் மூலம் தனித்து நிற்கிறீர்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.