Friday, February 12, 2021

 அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்
 

avargal unmaigal


ஒரு சங்கி என்னிடம் வந்து மோடி செய்யும் நல்லது எல்லாம் உங்கள் கண்ணில் படாதா அதைப் பற்றி ஒன்றுமே எழுதமாட்டீர்களா என்று கேட்டார். பதிலுக்கு நான் மோடி செய்யும் கெட்டது  எல்லாம் உங்கள் கண்ணில் படாதா அதைப் பற்றி ஒன்றுமே தைரியமாக எழுதமாட்டீர்களா? அதை நீங்கள் முதலில் எழுதுங்கள் அதன் பின் நான் அவர் செய்யும் நல்லதை எழுதுகிறேன் என்றேன் அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று தெரியவில்லை. உடனே என்னை ப்ளாக் செய்துவிட்டுப் போய்விட்டார்

இதைப் படித்த ஒருவர் பேஸ்புக்கில் மோடி  நல்லது செய்த ஒன்றையாவது  எழுதுங்களேன் என்று கேட்டார் அதற்கு  நான்


அவர் செஞ்ச நல்லதிலிருந்து ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்லுகின்றேன் வேறு யாருக்கும் சொல்லிடாதீங்க ஒகேவா
 
அவரால்தான் நம் நாட்டில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்கள் என்பது வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது அதுமட்டுமல்ல நமது நண்பர்களிலும் யாரெல்லாம் மூட்டாளாக இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இப்ப சொல்லுங்கள் அவர்  நல்லதும் செய்து இருக்கிறார்தானே




மோடி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் "நம் நண்பர்களில் பலர் முட்டாள்களாக இருப்பது நமக்குத் தெரியாமலே போயிருக்கும்'. அதனால் மோடிக்கு இதற்காகவாவது நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்




ஒவ்வொருவத்தரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடிக்ட் ஆகி இருக்காங்க உதாரணமாகச் சரக்கு,சிகரெட், சாப்பாடு, பெண், பேஸ்புக்,திரைப்படம், சீரியல் இப்படி ஏதாவது ஒன்றுக்கு அடிக்ட் ஆகி இருக்காங்க அது போல நானும் மோடியை நல்லா கலாய்த்து ஏதாவது  எழுதி போஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்க அடிக்ட் ஆகி இருக்கிறேன். இதுல இருந்து எப்படி மீள்வது என்பது எனக்கு உண்மையாகவே தெரியவில்லை.. மோடி என்ற வார்த்தை நான் பயன்படுத்தாவிட்டால் செத்துடுவேன் போல தோனுது. மோடிக்கு பொண்னு இருந்தாலாவது அதைக் கட்டிக்கிட்டு சொந்த மாமவாச்சேன்னு அமைதியா இருக்கலாம் ஆனால் அந்த கொடுப்பினையும் இல்லாமல் போச்சு ..இப்ப நான் என்ன செய்ய? நல்ல ஆலோசனையா தாங்க மக்களே


மோடி அரசைப் பல பிரபலங்களும்  தொடர்ந்து ஆதரிக்கக் காரணம் அப்படி ஆதரித்தால் எந்த இடையூறும்  தங்களுக்கு இருக்காது என்பதே மோடியோ உலக பிரபலம் என்றால் காலில் விழதா குறைதான்

இப்படி பிரபலங்களும் மோடியும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர் இல்லை நிரூபிப்பார்களே தவிர அவர்களால் நாட்டுக்கு ஒரு மயிற்றுகு பயன் இல்லை


யாராவது அழுதால் அவர்களுடன் இருப்பவர்கள் மனவருத்தம் அடைவார்கள் ஆனால் மோடி அழுதால் உலகமே அதைப் பார்த்துச் சிரிக்கிறது.. ஆகையால் உலக மக்கள் சிரித்து மகிழ மோடி அடிக்கடி அழுது கண்ணைத் துடைக்க வேண்டும்

 
avargal unmaigal


சமஸ்கிருதம் படித்தால் சர்க்கரை வியாதி அண்டாது .. இப்படின்னு வேதத்தில் எழுதி இருக்குன்னு மதுரையானந்தா தனது உபதேசத்தில் சொல்லி இருக்கிறார்

avargal unmaigal

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

12 Feb 2021

2 comments:

  1. இப்பவே எங்க அப்பத்தாவை சமஸ்கிருதம் படிக்கச் சொல்கிறேன் நண்பரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.