Saturday, February 6, 2021

 எங்க வீட்டம்மா ரஜினிகாந்த் மாதிரியாக்கும்
 

@avargal unmaigal


இந்த வாரம் சனிக்கிழமை எனக்கு லீவு இந்த விடுமுறை நாளில் பொழுது போகாமல் சில நட்புகளைக் கலாய்த்துவிட்டு எனது பேஸ்புக் தளத்தில் நான் கிறுக்கியவைகள்தான் இந்தப் பதிவுகள்


எங்க வீட்டம்மா ரஜினிகாந்த் மாதிரி வீட்டுக்கு வெளியே தலைகாட்டாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க...அதுமட்டுமல்ல வெளியே வேலைக்குத் தினமும் சென்று வரும் என்னைக் கொரோனாவை பார்ப்பது மாதிரி பார்த்துத் தள்ளியே வாழுறாங்க... இதைவிட ஒரு சந்தோஷம் கணவனுக்குக் கிடைக்கவே கிடைக்காது ஹீஹீ

 அரசியல் வாதிகளை கலாய்த்தால் ஆட்டோ வரும் வாராமல் போகும் ஆனால் மனைவியை கலாய்த்தால் தலையை குறிபார்த்து பூரிக்கட்டை வரும் என்பது அனுபவப்பாடம்

சிரித்து மாளலை


 



 

பெயர் ஏதும் போடாமல் என் நண்பர் என் முதுக்குப் பின்னால் இப்படிச் செய்துவிட்டார் என்ற ஒரு பதிவைப் போடுங்கள். அதன் பின் அதைப் படித்த உங்கள் நண்பர்களில் பல பேர் நம்மைப் பற்றித்தான் உள்குத்து பதிவாகப் போட்டு இருக்கிறானோ என்று நினைத்து மண்டை காய்ந்து போவார்கள்..



பேஸ்புக்கில் பெண்கள் தைரியமாக அரசியல் சமுகக் கருத்துக்களை அரசிற்கு எதிராகத் தைரியமாகச் சொல்லலாம். ஒரு வேளை உங்களைத் தேடி அரசியல் ரவுடிகளோ அல்லது காவல்துறையோ தேடிவரும் போது அவர்களால் உங்களைக் கண்டுபிடிக்கவே முடியாது, காரணம் பேஸ்புக்கில் நீங்கள் எடிட்டிங்க் செய்து போட்ட போட்டோ படத்தை வைத்துத்தான் உங்களை அவர்கள் அடையாளம் காணமுடியும்.. ஆனால் அப்படி ஒரு அழகான பெண்ணை அவர்களால் பார்க்கவே முடியாது அல்லவா? ஹீஹீ அப்ப நான் வரட்டா


வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர்


பாவம்டா தலைமைக்கான இடம் காலி காலி என்று சொல்லி ஆசை காட்டி அடுத்த முதல்வர் நீங்கதான் கட்சி ஆரம்பிங்க என்று சொல்லி ஆசை வார்த்தை காட்டி கடைசியிலே இப்படி ஊமையாக ஆக்கிவிட்டுடிங்களேடா


ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் வீடு தேடி வரும் - தமிழக அரசு..

இனி அடுத்தக் கட்டமாக ஆன்லைனில் பணம் கொடுத்து ரிக்வெஸ்ட் கொடுத்தா பழனி சாமி சிலையே உங்கள் வீடு தேடி வந்து ஆசிர்வதித்துச் செல்லும் என்று அறிவித்தாலும் அறிவிக்கலாம்


முகத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களைப் பார்க்கும் போது பேண்ட் அணிந்து zip போட மறந்து போனவர்கள் மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது
 

3 comments:

  1. அனைத்தும் அருமை காணொளி ஸூப்பர்

    ReplyDelete
  2. காணொளி இரண்டு மூன்று நாட்களாக சுற்றிக்கொண்டிருக்கிறது... மீண்டும் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
  3. காணொளி நிஜமோ, செட்டப்போ...   ரசிக்க முடிந்தது!  கலாய்த்தல்களையும் ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.