Wednesday, February 3, 2021

மோடியிடம் பேச்சு நடத்த விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இது ஒன்றும் இந்தியா பாகிஸ்தான் அல்லது சீனா எல்லை அல்ல அமைதியாகப் போராடும் விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட தடுப்புக்கள்தான்..

அந்த காலத்தில் பாட்டி கதை சொல்லும் போது ராஜகுமாரன் ராஜகுமாரியை மணம் முடிக்க வேண்டும் என்றால் ஏழு நதி கடந்து ஏழு கடல் கடந்து ஏழு மலை ஏறி ஏழு பாலைவனம் கடந்து சென்றால் அங்கு ஒரு பாம்பு இருக்கும் ஒரு பொந்து இருக்கும் அதற்குள் கைவிட்டால் ஒரு வைரம் இருக்கும் அதை எடுத்துவந்தால்தான் ராஜகுமாரியை காண முடியும் என்று சொல்வது போல மோடியிடம் பேச்சு நடத்த இவ்வளவு தடைகளையும் மீறி விவசாயிகள் வந்தால்தான் இனிமேல் பேச்சு வார்த்தை நடக்கும் போல

 

avargal unmaigal
 
avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal



அமெரிக்க பாப்பாடகி Rihanna வைச்சு டீவிட் போட வைத்தவன் உண்மையிலே மிகவும் திறமைசாலி மட்டுமல்ல மோடியையும் சங்கி கூட்டத்தையும் நல்லா புரிஞ்சு வைத்தவனாகத்தான் இருக்கவேண்டும்... ஒரு டீவிட் அதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டு இருந்தால் யாருக்கும் தெரிந்து இருக்காது ஆனால் மோடியைச் சுற்றி உள்ள சங்கிகளுக்கு அது புரியாமல் கிரிக்கெட் வீரர்களைவிட்டு பதில் கொடுக்க வைத்ததால் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் பொருளாக ஆகிவிட்டது சங்கி சங்கிதான்
 
@Rihanna ரிஹானா மட்டும் டீவிட் போட்டு இருக்கலைன்னா விவசாயிகள் பற்றி பேசி இருக்கலைன்னா  இந்திய செலிபரீட்டீஸ்க்கு இந்தியர்கள் என்ற உணர்வே வந்து இருக்காது.. அதற்காகவாது ரிஹானாவிற்கு பத்ம பூஷண் அல்லது பாரத ரத்னா விருதவது மோடி அரசு கண்டிப்பாக கொடுக்கணும்


இந்திய எல்லையைத் தாண்டி உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றிப் பேசினால் அது தப்பு ஆனால் இந்திய எல்லையைத் தாண்டியவர்கள் இந்தியாவிற்குள் வந்து வூடுகட்டு இருந்தால் அது தப்பு இல்லை ஹீஹீ சங்கின்னா சங்கிதான்

ரிஹானா பணம் வாங்கிட்டு ட்வீட் போடறாங்கன்னு சொல்லுறவங்க  2 ரூபாய்க்கு ட்வீட் போடும் சங்கிகள்தான். அந்த பெண் சம்பாதிப்பதை தங்கள் கனவில் கூட பார்த்து இருக்கமாட்டார்கள்



இந்திய பிரபலங்கள் எல்லாம் தேசப்பற்று காரணமாக உணர்ச்சி வசப்பட்டு டீவிட்டரில் தங்கள் சொந்தக் கருத்துக்களை தெரிவிக்கவில்லை.. அவர்களின் கருத்தாக மோடியின் கருத்துக்கள்தான் அங்கே டெம்ளேட் டிவிட்டுகளாக பதிவிடப்படுகின்றன. எல்லாம் சொல்லி வச்சால் போல ஒரே மாதிரியான டெம்ளேட் கருத்துக்கள்தான். இந்த பிரபலங்கள் டெம்லேட் டிவிட்டுக்களை போட மிரட்டப்பட்டு இருக்கலாம்.


 


மோடி & அவர் கூட்டத்தை கதறவிட்ட அமெரிக்க பாப் பாடகி 


அட வாங்கோன்னா கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே



ஸ்ரீதர் சுப்பிரமணியம்  எழுதிய பதிவு இது  பதிவில் இருந்து இது

பாடகி ரிஹான்னா, சுற்றுச் சூழல் போராளி கிரேடா தன்பர்க், பாலியல் நடிகை மியா கலீஃபா, அமெரிக்க துணை ஜனாதிபதியின் உறவினர் மீனா ஹாரிஸ் போன்றோர் வேளாண் போராட்டங்கள் குறித்து பேசி இருப்பது பிரச்சினை ஆகி இருக்கிறது. இந்த ட்வீட்கள் மற்றும் கமெண்ட்கள் தீயாய்ப் பரவி விடவே யாரோ கற்பனைத் திறன் மிகுந்த ஒருவர் 'விவசாய இனப்படுகொலை' (Farmer Genocide) எனும் ஹேஷ்டேக்கைத் துவக்கி விட்டிருக்கிறார். அது டிரெண்ட் ஆகத் துவங்கி விட்டது. இது பொய்யான ஹேஷ்டேக் என்று மத்திய அரசு புலம்பி, டிவிட்டரிடம் இந்த ஹேஷ்டேக் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குமாறு முறையிட்டிருக்கிறது. பொய்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை உருவாக்கும் என்று பாஜகவினருக்கு நன்றாகத் தெரியும்தானே? பொய் செய்திகள் மற்றும் பொய் ஹேஷ்டேக்குகள் மூலமாகவே வளர்ந்த கட்சியாயிற்றே.

டிவிட்டரும் ஆரம்பத்தில் அவற்றை மறைத்து வைத்தாலும் சில மணிகளில் திரும்பக் கொண்டு வந்து விட்டது. மத்திய அரசு கவலையுறுகிறது. டிவிட்டர் மேல் வழக்குப் பதிவு செய்வார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் அப்படி ஏதாவது வழக்கு வந்தாலும் கூட அதுவும் சர்வதேச அளவில் மத்திய அரசுக்கு எதிராகவே மாறும் வாய்ப்புகள் அதிகம். இது போதாதென்று இடையில் நிலைமையை மோசமாக்கும் வகையில் இணையத்தை தொடர் துண்டிப்பில் வைத்திருப்பது, கூர் கம்பிகளை போராட்ட களங்களில் சாலைகளில் விதைத்து பயமுறுத்துவது என்று நிலைமையை இன்னமும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. போராட்ட களத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் தன்னார்வலர்கள் தங்கள் ஒருங்கிணைப்புகளுக்கு வாட்சப் குழுக்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது இணைய துண்டிப்பு காரணமாக அது முடியாமல் உணவு விநியோகம் மற்றும் இதர உதவிகள் அங்கே பெருமளவு தடைப்பட்டு இருக்கிறது.

இதுதான் மோடி அரசின் உண்மையான நிறம். இவர்களுக்கு மக்களை ஒடுக்க, அவர்கள் உரிமைகளைப் பறிக்க, அவர்களை தனிமைப்படுத்தி, பயமுறுத்தி, அசௌகரியங்களை அதிகரிக்க மட்டும்தான் தெரியும். இடையில் பேச்சு வார்த்தை, டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுத்தது எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு செய்திருப்பார்கள் போல. இவர்களுக்குத் தேவை எல்லாம் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் ஆராயாமல், கேள்வியே கேட்காமல் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கூவும் அறிவிழந்த அடிமைகள்தான். கொஞ்சமேனும் கேள்வி கேட்கும், கொஞ்சமேனும் எதிர் விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரே அணுகுமுறைதான். அது ஜெஎன்யூ, ஜாமியா, ஷாகீன் பாக், பீமா கொரேகான், தூத்துக்குடி என்று யாராக இருந்தாலும் கவலை இல்லை. பாஜகவை ஆதரித்து நிற்பவர்கள் மட்டும்தான் தேவை; மீதி இந்தியர்கள் எல்லாரும் நாசமாகப் போகட்டும் என்ற ஒரு எண்ணம் கொண்ட அரசு மத்தியில் இருக்கிறது. இந்த அணுகுமுறையின் மூலம் எந்த சமூகப் பொருளாதார முன்னேற்றமும் மூலம் இங்கே வரப்போவதில்லை.





அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.