நான் மோடியை வெறுக்கவில்லை.......
நான் மோடியைப் பற்றி அதிகம் எழுதுவதால் பலர் நான் மோடியை வெறுக்கிறேன் என்று கருதிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் வேண்டுமானால் மோடிமீது வெறுப்புக் கொண்டு எழுதலாம். நான் அப்படி எல்லாம் வெறுக்கவில்லை. நான் மோடி சொல்வதையும் செய்வதையும் மட்டும் என் பாணியில் சொல்லுகின்றேன் அவ்வளவுதான்
மோடி கூட ஒரு நாள் முழுவதும் செலவிட்ட ஒரு சங்கி... அன்று அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது மோடி கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்து வந்தார்.
அவர் சிறுநீர் கழித்து வந்ததைப் பார்த்த அந்த சங்கி தனது டீவிட்டரிலில் இன்று மோடி நாட்டு மக்களுக்காகப் பல முறை சிறுநீர் கழித்தார் என்று பதிவிட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு நடிகை(குஷ்பு) நடித்தால் அவள் நாட்டுக்காகப் போராடுகிறாராம்..
ஆனால்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற (ஜோதிமணி)உறுப்பினர் போராடினால்
அவர் நடிக்கிறாராம்.
நல்லாவே சிந்தித்துப் பேசுகிறார்கள் சங்கிகள்
பேசாமல் எடப்பாடி சசிகலாவிற்கும் ஒரு கலைமாமணி விருது கொடுத்திருக்கலாம் அப்பத்தா ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்.
இப்படி எல்லாம் பேச பாஜக காரர்களால்தான் இயலும். அவர்கள் வீட்டுப் பெண்ணை கெடுத்தாலும் முடிஞ்ச்சு போன கதை என்று பேசாமல் இருப்பார்கள் போல
இப்படியே பெட்ரோல் விலை உயர்ந்தால் பைக்கை தூக்கி பெட் ரூமிலும் பொண்டாட்டியைத் தூக்கி வீட்டு வாசலிலும்தான் வைக்க வேண்டி இருக்கும் போல
ATM எந்திரத்தை உடைத்துக் கொள்ளையடித்த காலம் போய் பெட்ரோல் பங்க் எந்திரத்தை உடைத்து பெட்ரோல் திருடும் காலம் வந்துடுச்சு, மாற்றம் முன்னேற்றம் மோடிஜி
மோடிஜி மைண்ட் வாய்ஸ் : பெட்ரோல் விலையை ஏற்றினால் ஒரு வாரம் மீம்ஸ் போட்டுக் கலாய்த்துக் கொண்டு இருப்பார்கள் அதற்கு மேல் ஒன்றும் செய்யமாட்டார்கள் நம் மக்கள். இப்படி மீம்ஸ் போடுவதைத்தான் அன்றே வள்ளுவன் துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லிவிட்டுச் சென்று இருக்கிறான் போல
காந்தி மட்டும் இன்று உயிரோட இருந்திருந்தால் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருப்பார்.
காந்திமட்டும் தமிழகத்திலிருந்து இணையக் கணக்கு வைத்திருந்தால் திருஷ்யம் 2 படத்திற்கு விமர்சனம் எழுதி இருப்பார்
காந்தி மட்டும் திமுக உறுப்பினராக இருந்தால் உதயநிதி வேனில் தொங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருப்பார்
என்ன எடப்பாடி சார் உங்கள் சம்பந்தி புதுசா ரியல் எஸ்டேட் வியாபாரமும் பில்டிங்க் காண்டராக்டர் வியாபாரமும் ஆரம்பித்திருக்கிறாரா என்ன?
தூத்துகுடி மக்கள் பிரச்சனையின் போது ஒடோடி வந்த மகான் நீங்கள் தானே எடப்பாடி?
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆம் தமிழக வாக்காளர்களால் மீம்ஸ் மட்டுமே போடமுடியும்.
ReplyDeleteமறுவாரம் மறு பிரச்சனை இது மறந்து போகும்...
உண்மைதான் நண்பரே
Delete