Monday, February 15, 2021

#avargal unmaigal

மோடி பிறவியிலேயே ஒரு கிறிஸ்து பேரைச் சொல்லி ஏமாற்றும் கிறிஸ்துவர்


மோடி பிறவியிலேயே ஒரு கிறிஸ்து பேரை சொல்லி ஏமாற்றும் கிறிஸ்துவராக இருக்க வாய்ப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன & கிடைக்கின்றன,

நம்பாதவர்கள் கிறிஸ்து பேரைச் சொல்லி நோய்களை ,பிரச்சனைகளை தீர்ப்பதாக சொல்லி தங்களது பணப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும்  சகோதரன் பால் தினகரனை போன்றே ,மோடியும் நாட்டு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதாக சொல்லி பேசிவருகிறார். கிறிஸ்துவ கூட்டங்களில் பேசப்படும் ஆவேசப் பேச்சுக்களைப் போலவே மோடியின் பேச்சும் இருக்கிறது என்ன ஒரே ஒரு வித்தியாசம் மட்டும்தான் இருக்கிறது... அல்லேலுயாவிற்கு பதில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லுகிறார்
 
மத்தியமர் குழுவில் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசவன் என்பவர் கிழ்கண்டவாறு எழுதி பதிந்து இருந்தார்.. அதற்கு நான் இட்ட கலாய்ப்பு பின்னுட்டமே .மேலே நீங்கள் படித்தவை


மாதா, பிதா, குரு தெய்வம்.

தங்களின் மகன் ஏதோ ஒரு வகையில் விவேகானந்தர் போல இந்த பாரத் திருநாட்டிற்கு பெரும் சேவை ஆற்றப்போகிறவன் என்று தீர்க்க தரிசனத்துடன் அவனுக்கு நரேந்திரன் என்ற திருநாமத்தைச் சூட்டினர் பெற்றோர்.. இளைஞன் நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஆன்மீக சேவையோடு கூடிய சமூக சேவை செய்யும் எண்ணத்துடன் ராமகிருஷ்ண மடத்தின் குருமார்களின் ஒருவரான சுவாமி ஆத்மானந்தஜி மஹாராஜிடம் போய் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். குருஜி உன் வேட்கையை இந்த மேடம் பூரணமாகத் திருப்தி செய்யாது; உனக்கு இந்தப் பாரதப் பெருநாட்டில் பெரும் பணிகள் காத்திருக்கிறது என்று தீர்க்க தரிசனத்துடன் அவரை திருப்பி அனுப்பிவிட்ட்டார். அவரை RSS அவரை அரவணைத்துக்கொண்டது. இந்த சமூகத்தை வழி நடத்த நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். அந்த இளைஞனுக்கு வேண்டிய தலைமைப் பண்புகளுக்கான பயிற்சிகளை அளித்து பிஜேபி க்கு அனுப்பி வைத்தது RSS . அனைவரின் நம்பிக்கையும் மெய்ப்பிக்கும் வண்ணம் மோடி இன்று உலகத் தலைவனாக உயர்ந்து நிற்கிறார். பாரதம் விஷ்வ குரு என்னும் உயர் நிலைக்கு தேசத்தை வழி நடத்திச் செல்லும் தலைவனை தமிழகம் அன்போடு வரவேற்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.