பொதுமக்கள் கோபத்தை உருவாக்குவதா புத்திசாலித்தனம்?
அன்பான இந்திய மக்களே,
எந்தவொரு அரசியல் கட்சிக்கும்
கண்மூடித்தனமான ஆதரவாளராக இருப்பதற்கு முன்பு, ஒரு விஷயத்தை நினைவில்
கொள்ளுங்கள், நீங்கள் இன்று இறந்துவிட்டால், ஒரு அரசியல் தலைவர் கூட உங்கள்
உயிர் இழப்பை உணர மாட்டார்.
அவர்கள் கவலைப்படுவதெல்லாம் வாக்குகள், அதிகாரம் மற்றும் மிக முக்கியமாகப் பணம் பற்றி மட்டும்தான் என்பதி நினைவில் கொள்க.
நான்
மீண்டும் சொல்கிறேன், அவர்களுக்கு உங்களைப் பற்றியும், உங்கள்
குடும்பத்தைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் சிறிது கூட அக்கறை
கிடையாது.
தயவுசெய்து அவர்களுக்காக உங்களையோ அல்லது உங்கள் சந்ததிகளையோ கஷ்டங்களுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள் உங்கள் உயிரையும் விட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்
தலைவர்கள் தங்கள் சுயநல நோக்கத்திற்காக மட்டும்தான் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்கள் உங்களின் நலனுக்காக அல்ல என்பதை மட்டும் புரிந்துக் கொள்ளுங்கள்
தலைவர்களே அரசியல் வெற்றிகளுக்குப் பொதுமக்கள் கோபத்தை உருவாக்குவதா புத்திசாலித்தனம்? ஒரு நாள் அது மிகப் பெரிதாக வெடிக்கும்.
அது சமாதானத்தை அமைதியை நேசிக்கும் தேசத்துக்கோ அல்லது அதன் மக்களின் நல்வாழ்வுக்கோ நல்லது அல்ல.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இன்னும் விலை உயரட்டும் இந்த களிமண் மா'க்களுக்கு இனியாவது சிந்திக்கும் சொரணை வரட்டும்.
ReplyDelete