Thursday, February 25, 2021


@avargal unmaigal

 எதுக்கு வம்பு?

இன்று வேலைக்குப் போகும் போது வழக்கமாக வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் காபியை எடுத்துச் செல்ல  மறந்துவிட்டேன்.  அதனால் காலை  10 மணியளவில் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள ட்ங்கின் டோனட் கடைக்குச் சென்று காபி வாங்க நுழைந்தேன். எனக்குப் பின்னால் நுழைந்த பெண் வெகு வேகமாகக் காபி ஆர்டர் செய்யும் இடத்திற்கு  வந்தாள். அவள் வந்த வேகத்தைப் பார்த்த நான், நீங்க முன்னால் போங்க என்று சொன்னேன்.

உடனே அவள் எனக்கு நன்றி சொன்னாள்.  பதிலுக்கு  நான் அது எல்லாம் தேவை இல்லை. எனக்கும் சேர்த்து  ஒரு காபியும் ஒரு டோனட்டும்  ஆர்டர் பண்ணி அதற்குப் பணம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன்.
 
அதைக் கேட்ட அவள் களுக்கென்று சிரித்தாள்.. அதைப் பார்த்த நான் உடனே டோனட் வேண்டாம் காபி மட்டும் போதும் என்றேன்.. உடனே அவள் ஏன் இப்ப டோனட் வேண்டாம் என்கிறீர்கள் என்றாள்.. நான் உடனே உங்களின்  சிரிப்பே மிகவும் ஸ்வீட்டாக இருக்கிறது அதனால் டோனட் வேண்டாம் என்றேன்

அதற்கு அவள் களுக் களுக் என்று மேலும் சிரித்தாள் உடனே காபியும் வேண்டாம் என்றேன்

அதற்கு ஏன் காபி வேண்டாம் எங்கீறீர்கள் என்றாள்.

நான் அதற்கு இவ்வளவு ஸ்வீட்டாக சிரிக்கும் உங்களைப் பார்த்தவுடன் காபியும் வேண்டாம் என்று தோன்றியது

உடனே அவள் மேலும் சிரித்தவாறு அப்படினால் ஒகே என்றாள்.

நாம் அதோடு விட்டுவிடுவோமா என்ன... நான் காபிதான் வேண்டாம் என்றேன் ஆனால் அதற்குப் பதிலாக இரவு டின்னருக்கு கூப்பிட்டு போங்கள் என்றேன்


அவள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டு  யூ ஆர் வெரி ஸ்மார்ட் என்று சொல்லியவாறு,  உங்களுக்கு கேர்ள் பிரென்ட் உண்டா என்றாள். நான் எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை என்றதும்.

வாவ் என்று சொல்லி  உங்கள் போன் நம்பர் என்ன என்று கேட்டாள். அதற்கு நான் எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஹேய் பொய் சொல்லாதே உனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் உன் கையில் மோதிரம் இல்லை என்றாள்.

நான் உடனே எங்க ஊர் வழக்கப்படி நாங்கள் மோதிரம் எல்லாம் அணியமாட்டோம் என்று சொல்லி ஹேவ் எ நைஸ் டே என்று சொல்லி ஆளைவிட்டாள் போதும் என்று ஒடி வந்துட்டேன்.

இதை மாமியிடம் சொல்லிச் சிரிக்கலாம் என்றால் அது வம்பில் போய் முடிந்துவிடும் என்பதால் எதற்கு வம்பு என்று அமைதியாக இங்கு பதிவு எழுதிப் பகிர்ந்து கொள்கிறேன்.

மக்களே இதை மாமியிடம் சொல்லி பூரிக்கட்டைடை பறக்கவிட்டுவிடாதீர்கள்

டிஸ்கி : இப்ப இங்கு இரவு நேரம் அந்த பெண்ணிடம் போன் நம்பர் கொடுத்திருக்கலாமோ என்ற நப்பாசை மனதில் எழுகிறது.. ஹும்ம்ம்ம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. Replies

    1. அடுத்தவங்களை சிரிக்க வைக்க இது தேவை ஆனால் நம்மை பார்த்து மற்றவர்கள் சிரிக்க மட்டும் செய்ய வைத்துவிடக் கூடாது அதில் நாம் ஜாகிரைதையாக இருக்க வேண்டும் தன்பாலன்

      Delete
  2. பெண் என்று சொல்கிறீர்கள். இவ்வளவு கிழவியாக இருக்கிறாரே... அம்மாயி

    ReplyDelete
    Replies
    1. ஹலோ என்ன இப்படி பொசுக்கென்று கிழவி என்று சொல்லீட்டீங்க.. இவங்கதான் ஹாலிவுட் நயன்தாரா இவங்க பேர் ஜூலியா ராபர்ட் இவங்க படங்களை பாருங்க அவங்க சிரிப்பில் நடிப்பில் மயங்கி போவீங்க

      Delete
  3. அடடே.. இப்படியும் கடலை போடலாமா?

    ReplyDelete
    Replies
    1. இங்கே பெண்ணை அணுகும் முறையைத்தான் உங்கள் ஊரில் கடலை போடுவது என்று சொல்லுறீங்களா? இங்கே இது மாதிரி எந்த பெண்களையும் அணுகலாம் அவர்களுக்கு பிடித்தால் பொன் நம்பர் கிடைக்கும் அப்படி இல்லையென்றால் எனக்கு பாய் பிரெண்ட் இருக்கிறார் என்று சொல்லி நழுவி போய்விடுவார்கள். அவ்வளவுதான் ஆனால் நம் ஊரைப் போல ஊரைக் கூட்டி தர்ம அடி வாங்கித்தரமாட்டார்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.