Sunday, August 18, 2019

அமெரிக்க போலீசிடம் இருந்து மதுரைத்தமிழனை காப்பாற்றும் ஒரு சிறு கார்ட்


நேற்று  மாலை  என் அண்ணன் மகளை பார்த்து விட்டு இரவு 11 மணியளவில்
குடும்பத்தினருடன் வீடு திரும்பி கொண்டிருந்தேன்  அப்பொழுது  ஒரு சிக்கனலில்  yellow கலர் சிக்கனல் விழுந்ததும் ரெட் சிக்கனல் வருவதற்குள் அதை கடக்க முயற்சி செய்தேன். நான் மட்டுமல்ல எல்லோரும் அப்படித்தான் பொதுவாக செய்வார்கள். அது மாதிரி நேற்று இரவு நானும் செய்த போது சிக்னலை கடக்கு முன்  பாதிக்கும் மேற்பட்ட ரோட்டை கடக்கும் போது உடனே ரெட் விழுந்துவிட்டது. நானும் அதை கடந்து சென்றுவிட்டேன் ,அதன் பின்  2 சிக்கனல் தாண்டி 2 மைல் தூரம் கடந்து இருப்பேன், தீடீரென்று போலீஸ்கார் தனது கலர் லைட்டை போட்டு என் பின்பக்கம் வந்தது .ஒரு கார் அல்ல இரண்டு கார் நானும் ஏதோ எமர்ஜன்சி போல என்று நினைத்து ரோட் ஒரமாக   அவர்கள் கார் கடந்து போவதற்காக நிறுத்தினேன்... ஆனால் அவர்களோ என்னை கடந்து போகாமல் என் பின்னே வந்து நின்று விட்டார்கள்

அதன் பின் ஒரு காரில் இருந்து ஒரு போலீஸ் இறங்கி வந்து சார், உங்கள் டிரைவர் லைசன்ஸ், கார் ரிஜிஸ்ரேஷன் இன்சூரன்ஸ் கார்ட் எல்லாவற்றையும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் ரெட் சிக்னலில்  நிற்காமல் சென்றீர்கள் என்று சொல்லினார், நான்  சார் எல்லோ சிக்கனல் இரூக்கும் போதுதான் சென்றேன் என்று சமாளிக்க பார்த்தேன் .அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். நானும் சரி இவரிடம் மாட்டிகிட்டோம் குறைந்தது 300 ல் இருந்து 400 டாலர் அபராதம் வரும் அதுமட்டுல்ல 2 அல்லது மூன்று பாயிண்ட் வரும் ,கோர்ட்டுக்கு வேற போகனும் என்று நினைத்தவாரே டிரைவிங்க் லைசன்ஸ் ,கார் ரிஜிஸ்ரேஷன், இன்சூரன்ஸ் கார்ட் முன்றையும் கொடுக்கும் போது அதோடு என்னிடம் இருந்த ஒரு சிறுகார்ட்டையும் அதோடு  சேர்த்து அதற்கு இடையில் வைத்து கொடுத்தேன்.. அந்த போலீஸ் எல்லாவற்றையும் சோதனை செய்த போது அந்த கார்ட்டை பார்த்துவிட்டு ஒகே சார் நீங்க போகலாம் உங்களுக்கு அபராதம் ஏதும் இல்லை இனிமேல் இப்படி ரெட் சிக்கனில் கடக்க வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார்.


இது போலத்தான் கடந்த மாதம் இரவு 9 மணியளவில் என் குழந்தையை நீச்சல் பயிற்சிக்கு அழைத்து செல்லும் போது நல்ல மழை  உடம்பு வேற  ரொம்ப டயர்டாக இருந்தது ...அப்போது நான் சென்ற ரோட்டின் ஸ்பிட் லிமிட் 35 ஆனால் நான் கார் ஒட்டி சென்றதோ 60 மைல் ஸ்பிட் அப்படி செல்லும் போது ரோட் ஒரமாக இருந்த போர்டில் நான் ஒட்டி செல்லும் காரின் ஸ்பீட் லீமிட் 60 என்று காண்பித்தது. அதை கவனித்த நான் ஸ்பிடை குறைத்து ஒட்ட ஆரம்பித்தேன் .அப்போது  அரை நிமிடம் கழித்து என் பின்னால் போலீஸ் கார் ஒன்று தொடர்ந்து வந்து என்னை நிறுத்த சொல்லி அவரின் சிக்னலை போட்டார். அப்போது அந்த போலீஸ் ஆபீஸர் சார் இந்த ரோட்டின் ஸ்பீட் லீமிட் என்ன வென்று தெரியுமா என்று கேட்டார் ,நானும் 35 என்று சொன்னேன் உடனே அவர் நீங்க காரை என்ன ஸ்பீடில் ஒட்டினீர்க
ள் தெரியுமா என்று கேட்டார். நான் உடனே 40 அல்லது 45 இருக்கும் என்றேன். உடனே சாரி சார், நீங்கள்  53 மைல் ஸ்பீடில் ஒட்டினீர்கள் என்றார் ,அது மட்டுமல்ல உங்கள் காரின் பின் பக்கம் உள்ள பிரேக் லைட்டு வேலை செய்யவில்லை என்று சொல்லி வழக்கமாக கேட்கும் லைசன்ஸ் மற்றும் மற்ற விபரங்களை கேட்டார் .அப்போது நான் என்னிடம் இருந்த ஒரு சிறிய கார்ட்டை அதனுடன் வைத்து கொடுத்தேன் அதை பார்த்த பின் அவர் நீங்கள் ஸ்பீடாக ஒட்டியதற்கு நான் அபராதம் விதிக்கவில்லை அதை மன்னித்து விடுகிறேன் ,ஆனால் உங்கள் வண்டியில் பிரேக் லைட் எரியாதற்கு மட்டும் ஒரு சிறிய  அபராதம் விதிக்கிறேன் என்று சொல்லி 50 டாலர் அபராதம் மட்டும் விதித்தார்... உண்மையில் அன்றும் எனக்கு 300 டாலருக்கு மேல் அபராதமும் 2 அல்லது மூன்று பாயிண்ட் டிக்கெட்டும் கிடைத்து இருக்க வேண்டும் நல்லவேளை என்னிடம் இருந்து ஒரு சிறிய கார்ட் மூலம் அதில் இருந்து தப்பித்தேன்

மேலே சொன்ன டிக்கெட் பாயிண்ட் மட்டும் கிடைத்து இருந்தால் அபராத தொகை மட்டுமல்ல இன்சுரண்ஸ் பீரிமியமும் ஏறி இருக்கும். அது மட்டுமல்ல  பாயிண்ட் 6 க்கும் மேல் வந்
துவிட்டால் டிரைவர் லைசன்ஸை ரத்து செய்துவிடுவார்கள் நல்ல வேளை அப்படி ஏதும் இல்லாமல் அந்த சிறிய விசிட்டிங்க் சைஸ் கார்ட் என்னை காப்பாற்றியது..


அந்த கார்ட் எனக்கு அமெரிக்க ஆர்மியில்  15 ஆண்டுக்களுக்கு மேல்வேலை செய்து  பதவி விலகி என்னுடன் வேலை பார்க்கும் அமெரிக்க நண்பரால் தரப்பட்டது அந்த கார்ட் செய்யும் மேஜிக்தான் பெரிய பெரிய பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றியது இது போல ஒருகார்டை அவர் என் மனைவிக்கும் தந்து இருக்கிறார்,



கூட வேலை பார்ப்பவரிடம் இனிமையாகவும் அதே நேரத்தில் எப்போதும் என்னால் முடிந்த உதவிகள் செய்வதால்  இம்பரஸ் ஆன அந்த அமெரிக்கர் இந்த கார்ட்டை எனக்கு தந்து உள்ளார்


அன்புடன்
மதுரைத்தமிழன்

19 comments:

  1. Super. இராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய நண்பர்களுக்கும் கிடைக்கும் மரியாதை கிடைக்கிறது! Good.

    ReplyDelete
    Replies

    1. இராணுவவீரர்களுக்கு நிறைய இடங்களில் மரியாதை உண்டு.... நான் இப்போது வேலை பார்க்கும் இடத்தில் முன்னாள் இராணுவீரர்கள் என்ன வாங்கினாலும் அவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடி உண்டு இது போல பல இடங்களில் அவர்களுக்கு சலுகைகள் உண்டு

      Delete
  2. இந்த மாதிரி விஷயங்களில் அமெரிக்கா ரொம்ப மெச்சூர்டா இருக்கு. அந்த சொசையட்டியும்தான். நம்ம ஊர்லனா, இதுக்குள்ள, ராணுவ வீரர்களை பிளாக்கில் விற்க வச்சிருப்பாங்க, போலி கார்டுகளை அடிச்சிருப்பாங்க.

    இந்த மாதிரி இண்டெரெஸ்டிங் விஷயங்களை இன்னும் நிறைய எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது மிக சரி நெல்லைத்தமிழன்.. கடந்த வாரத்தில் சில புது தமிழ் நண்பர்களை வீட்டிற்கு விருந்திற்கு கூப்பிட்டு இருந்தேன். அப்போது போலீஸ் பற்றியும் அவரவர்கள் டிக்கெட் வாங்கியதை பற்றி பேச்சு வந்த போது இங்கே சொல்லி இருந்ததை அவ்ர்களிடம் சொன்னேன் அவர்களும் அப்படியா என்று சொல்லி அந்த கார்ட்டை வாங்கி பார்த்துவிட்டு நீங்க பர்மிஷன் கொடுத்தால் இந்த கார்ட்டை இந்தியாவீர்கு அனுப்பி அது மாதிரி நிறைய கார்ட் ப்ரிண்ட் பண்ணி நமக்கு தெரிந்தவர்களுக்கு கொடுக்கலாம் என்றார். நான் உடனே என் மீதுள்ள நம்பிக்கையினால் அந்த அமெரிக்கர் அவர் குடுமப்த்தில் ஒருவர் என்பது போல நினைத்து தந்து இருக்கிறார் அந்த நமபிக்கையை உடைக்கும் படி நான் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டேன்

      Delete
    2. //அதுமாதிரி நிறைய கார்டு பிரிண்ட் பண்ணி// - ஹா ஹா...இந்தியன், பாகிஸ்தானி, பங்களாதேஷி சீப் மெண்டாலிட்டி எங்க போனாலும் மாறாது. பாகிஸ்தானிக்கள் துபாய்ல 90கள்ல போலி டெலெபோன் கார்டுகள் ப்ரிண்ட் பண்ணி வித்துக்கிட்டிருந்தாங்க. உங்க நண்பரும், உங்க குவாலிட்டி தெரிஞ்சுதான் கொடுத்திருப்பார். சும்மா தெரிஞ்சவர் என்பதற்காக கொடுத்திருக்கமாட்டார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதுதான் சரி.

      Delete
  3. ஆச்சர்யமான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. சில போலீஸ் ஆபிஸர்கள் அந்த கார்ட்டை வாங்கி பார்த்தாலும் அதை சட்டை பண்ணமாட்டார்கள் ஆனால் அநேக ஆபிஸ்ரகள் அதற்கு மதிப்பு கொடுத்து மன்னித்து அனுப்புவார்கள் காரணம் இந்த கார்ட் போலீஸாரும் அவர்களின் நெருங்கிய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தருவார்கள்

      Delete
  4. அது என்ன கார்ட்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் ஸ்ரீராம்விற்காகவும் அந்த கார்டின் படத்தை மேலே இணைத்து இருக்கிறேன்.

      Delete
  5. கார்டில் என்ன இருக்கும்? சுவாரஸ்யமான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. கார்ர்டின் முன்பகுதியை மட்டும் மேலே கொத்து இருக்கிறேன் ஸ்ரீராம்

      Delete
  6. ஒரு கார்ட் பொக்கட்டில் இருக்கும் தைரியத்தை வைத்து சாலை விதிகளை மீறுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    அதுசரி உண்மையில் அங்கு பொலீஸ்.. எல்லோரையும் சேர் எனத்தான் கூப்பிடுவினமோ? இங்கும் சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன்.. ஜெயிலுக்குப் பிடிச்சுப் போகும்போதுகூட.. சேர் கம்.. எனத்தான் பொலீஸ் அழைக்கிறார்களாம் என.. ஆனாலும் எனக்கு அதில் டவுட் இருக்கு..

    ReplyDelete
    Replies


    1. சாலை மீறல்களை வேண்டுமென்றே செய்வதில்லை நம்மை அறியாமல் செய்துவிடுதுண்டு... எல்லோ சிக்கனிலில் எல்லோரும் தான் சாலையை கடப்பார்கள் எல்லோவை பார்த்த உடனே நாம் நிப்பாட்டினால் பல சமயம் நம் பின்னால் வருக் கார் நம்மை இடித்துவிட வாய்ப்பு உண்டு..


      ஆமாம் இங்கே கொலைகாரர்களை அரெஸ்ட் செய்தாலும் சார் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள் அது போல நாமும் அவர்கள் ஆபிஸர் என்றுதான் அழைப்போம் போலீஸ் என்று அழைக்கமாட்டோம்

      Delete
  7. இப்படி ஒரு கார்டு இருப்பதை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். முன்னாள் இராணுவ வீரர்களை மதிப்பது சரி..ஆனால் அவர்கள் என்றால் இப்படி விடலாமா என்றும் கேள்வி எழுகிறது..என்னவோ நீங்க பாயிண்ட் இல்லாமல் தப்பித்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies

    1. இந்த கார்ட் முன்னாள் ராணுவவீரர்கள் மட்டுமல்ல பணியில் இருக்கும் போலீஸ் ஆபிசர்களும் இந்த கார்ட்டை தனது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தருவார்கள். இப்படிப்பட்ட கார்ட் இருப்பது உங்களுக்கு தெரியாதது எனக்கு மிகவும் ஆச்சிரியம் அளிக்கிறது

      Delete
  8. கார்ட் எல்லாம் இருக்கட்டும். என்னை பொறுத்தவரை "முகராசி" தான். நமக்கு எல்லாம் நிறுத்தினாலே பைன் தான்.... ஹ்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. வசதியானவர்களிடம் பைன் வசூல் செய்வது நல்லதுதானே அது போல என்னை போல உள்ள ஏழைகளை மன்னிப்பதும் நல்லதுதானே விசு

      Delete
    2. மதுரைத் தமிழனின் பதிலை ரசித்தேன்.

      Delete
  9. இது என்ன பிரமாதம் ... இந்தியாவிலும் இந்த திட்டம் வழக்கில் இருக்கிறது ... ஒரு சின்ன மாற்றம் ... இங்கு சிறிய கார்ட் க்கு பதிலாக 100 ரூபாய் நோட் நீட்ட வீண்டும்.
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.