Sunday, August 11, 2019

காஷ்மீரில் இருந்து  காஞ்சிபுரம்  வரை....


சில நண்பர்கள் என்ன சார் நீங்கள் பிஸி என்று சொல்லி இப்பொதெல்லாம் பதிவு எழுதுவதை குறைத்து கொண்டீர்கள் காஷ்மீர் முதல் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் வரை பல பரபரப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றது அது பற்றிய உங்களிடம் இருந்து பதிவு எதுவும் வரவில்லையே  என்று கேட்டார்கள்


அவர்களுக்காக இது பற்றிய எனது கிறுக்கல்கள்

காஷ்மீரில் இப்போது மோடி மற்றும் அமித்ஷா எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன் அவர்களுக்கு இது வரை சிறப்பு அந்தஸ்து கொடுத்தவந்தது போதும் என்பதுதான் எனது கருத்தும்...உடனே காஷ்மீர் தலைவர்களுடன் இதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் என்னாவது அது மிகவும் தவறனாது என்று சொல்லி யாரும் கேட்டை ஆட்ட வேண்டாம்... உலகிகெங்கிலும் பல நாடுகள் போடும் ஒபந்தங்கள் எல்லாம்  அந்தெந்த நாட்டின் வளர்ச்சிக்காக அல்லது சுயநலத்திற்காக மீறப்பட்டுதான் வருகின்றது சீனா நம் நாட்டுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி நம்முடன் போர் தொடுத்து நம் நாட்டின்  சில பகுதிகளை கைப்ற்றி இன்று வரை அது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அதுமட்டுமல்ல நம் நாட்டில் உள்ள சில பகுதிகளையும் அது அவரகளுக்கு சொந்த என்று இன்று வரை சொல்லி வருகிறது அது போல அமெரிக்கா பல நாடுகளுடன் போட்ட ஒப்பந்தங்களை பல முறை கேன்சல் செய்து  தங்களுக்கு எது நல்லதோ அதை இன்று வரை செய்து வருகிறது

அப்படி இருக்கையில் மோடி அரசு இப்போது காஷ்மீர் ஒப்பந்தத்தை மீறி செயல்படுவது ஒன்றும் தவறில்லை...அவர் காஷ்மீர் மக்களை ஒன்றும் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தவில்லை அவர்களை இந்திய குடிமக்களாகவே நடத்துகிறார் ஒருவேளை அவர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினால் அப்போது நாம் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்

காஷ்மீர் மக்களை இந்திய நாட்டு மற்ற மாநில குடிமக்கள் போல நடத்துவதற்கு இந்திய மக்கள் சந்தோஷப்படுவதர்கு பதிலாக எதிர்ப்பது வியப்பை அளிக்கிறது. ஒரு வேளை காஷ்மீர் மக்களின் விருப்பப்படி அவர்களுக்கு தனி நாடு கொடுத்துவிட்டால் அந்த தனி நாட்டின் அதிகாரம் யார் கையில் போய் சேரும் என்று கொஞ்சம் யோசித்தால் இன்றைய நிலையில் அது பயங்கரவாதிகளின் கையில்தான் போய் சேரும் அதன் பின் இந்தியாவீற்குதான் பெரும் பிரச்சனை.. இது எப்படி இருக்கு என்றால் தன் தலையில் தானே கொள்ளிக்கட்டையை வைத்த மாதிரிதான் அதனால்தான் சொல்லுகிறேன் காஷ்மீருடன் செய்ய ஒப்பந்தத்தை மீறுவது ஒன்றும் தவறில்லை அப்படி மீறாமல் காஷ்மீர்மக்களுக்கு தொடர்ந்து சிறப்பு சலுகை கொடுத்து கொண்டிருந்தால் அது குறிப்பட்ட சிலருக்கு மட்டும் பயனளிக்கிறது அதனால் பலன் பெறதா மக்கள் தஙகளுக்கு தனி நாடுகிடைத்தால் தாங்களும் நல்வாழ்க்கையை வாழலாம் என்று தீவரவாதத்தை கையில் எடுத்து கொண்டு அவர்களுக்கு உதவும் இந்தியாவீர்கு எதிராக போராடுகிறார்கள்.. இதற்கு முடிவு கட்ட இப்போதைய ஆளும் அரசு எடுத்த நடவடிக்கை சரியே..

இப்போது காஷ்மீர் விஷயத்தில் மோடி எடுத்த நடவடிக்கையாக போராடுபவர்கள் உண்மையிலே எப்ப போராட வேண்டும் என்றால் காஷ்மிரை தமிழகம் போல மோடி அரசு நடத்தினால் அப்போது நிச்சயம் போராடலாம் அதாவது காஷ்மீரில் மீத்தேன் எடுக்கப் போறேன் அல்லது காஷ்மீரில் ஸ்டெரிலைட் ஆலைகள் துவங்கினால் அல்லது தேனி மலையை குடைந்து நீயூட்ரினோ எடுப்பது போல காஷ்மீரில் செய்தால் அப்போது போடலாம் அதுவரை அவர்கள் அமைதிகாப்பதே நலம்

----------------------------                                          ------------------------------ 
காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கு வரும் கூட்டத்தை பார்த்து பொறாமைபட்ட மற்றக்கடவுகள் ஒன்று சேர்ந்து அவரை குளத்தில் மூழ்கடித்து இருக்கலாமே தவிர வேற்று மதக் ஆட்களுக்கு பயந்து ஒன்றும் அவர் குளத்தில் மறைக்கப்பட்டு இருக்கமாட்டார்.

48 நாட்களுக்கு மட்டும் அத்திவரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அந்த 48 நாட்களிலும் வந்து தரிசிக்க முடியாதவர்களுக்காக அவர் குளத்தில் இருக்கும் போது ஸ்கூபா டைவிங்க் மூலம் குளத்திற்குள் சென்று தரிசிக்க அரசு ஏற்பாடு பண்ணிதரலாமே அப்படி செய்தால் வருடம் முழுவதும் அவரை  தரிசனம் செய்து கொள்ள முடியுமே


நாப்பது வருஷமா உங்களின் வேண்டுதல்களுக்கு நாங்கள் செவி சாய்த்து உங்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த எங்களை ம்றந்துவிட்டு நாப்பது வருஷத்திற்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய கூட்டத்தோடு கூட்டமாக அதுவும் வெயிலில் 5 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை காத்திருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பூஜையில் கேட்கும் எல்லாவ்ற்றையும் செய்து தரும் எங்களை பார்க்க நேரம் அதிக செல்விட அதிக மனமில்லாமல் சிரப்பு தரிசனம் டிக்கெட்டை வாங்கி வந்து பார்த்த் செல்லுகிறீர்கள் நல்லாயிருங்க நல்லாயிருன்ங்க அத்திவரதர் குளத்திற்குள் மீண்டும் சென்ரது எங்ககிட்டதானே வருவீர்கள் அப்ப வச்சு நல்லாவே செய்கிறோம் என்பதுதான் மற்றைய கடவுள்களின் எண்ணமாக இருக்குமோ என்னவோ?


சூப்பர் சிங்கர் போல சூப்பர் கடவுளாக இந்த வருட அவார்ட்டை  வெல்பவர் கடவுள் அத்திவரதரே


 அன்னிய ஆட்சிகள் நடை பெற்ற போது அவர்களிடம் இருந்து பாதுகாக்கவே  அத்திவரதர் குளத்தில் மறைத்து ஒழித்து வைக்கப்பட்டார்.. இது நடந்தது அன்று


ஆனால் இன்று நடப்பது பக்தால்ஸ் ஆட்சி ஆனாலும் அவர்களிடம் இருந்து தமிழக சாமி சிலைகளை பாதுகாக்கவே இன்றுள்ள ஆட்கள் சாமி சிலைகளை பாதுகாப்பாக  பக்தால்ஸின் கண்ணில்படாமல் வைத்திருக்கிறார்கள் அதைத்தான் சாமி சிலை திருட்டு என்று விபரம் தெரியாதவர்கள் சொல்லி வருகிறார்கள்


எனக்குள்ள ஆச்சிரியம் என்னவென்றால் இது வரை தமிழக தலைவர்களில் ஒருவர் கூட இன்னும் அத்திவரதருக்கு பாரதரத்னா தர வேண்டுமென்று மோடியிடம் கோரிக்கைவைக்கததுதான் மிகப் பெரிய ஆச்சிரியமாக இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. இன்று நேற்றல்ல ஜனசங்கம் (இப்போதைய பாஜக) கட்சி துவக்கப்பட்ட காலத்திலிருந்தே காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அவர்களுடைய பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. அதை நிறைவேற்றும் அளவுக்கு இப்போது தான் பாஜகவுக்கு தேவையான மெஜாரிட்டி கிடைத்துள்ளது. இது தான் உண்மை. மற்றபடி நாட்டுக்கோ அல்லது காஷ்மீர் மக்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மோடிக்கோ அல்லது அமித்ஷாவுக்கோ நிச்சயம் இல்லை. இவர்களுக்கென்று தனி அஜெண்டா உள்ளது. அதை நோக்கிதான் அவன்களுடைய பயணம் இருக்கும்.

    ReplyDelete
  2. 370, அத்திவரதர்..விவாதம் அருமை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.