Friday, August 23, 2019

ஒரு நாள் கல்லூரி பேராசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.

"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.

பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.

மாணவர்களும் கரவொலி எலுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநோரம் பிடித்தது..

அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர் வேறு யாருமில்லை.

அவர்தான் நரேந்திர மோடி

இதை நம்பாதவன் ஆண்டி இண்டியன்ஸ் .. நம்புறவன் தேசபக்தன் (பக்தால்ஸ்/சங்கி)



கொசுறு :
தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் !- செய்தி .

அப்ப #GoBack க்குன்னு ட்விட்ரில் ட்ரெண்ட் ஆரம்பிச்சிடவேண்டியதுதான்



இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்க எல்லோரும் பக்தால்ஸாக மாறினால் நிச்சயம் சிறப்பாகிவிடும் #Fact Verified
அன்புடன்
மதுரைத்தமிழன்
23 Aug 2019

4 comments:

  1. கடைசி நாலு வரி சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஜோசப் சார் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  2. என் தேசபக்தியில் இது மாதிரி படித்தால் எனக்கே சந்தேகம் வரலாம்

    ReplyDelete
    Replies
    1. தேசபக்தியில் சந்தேகமா....அப்ப நீங்க ஆன்டி இண்டியன்தான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.