Thursday, August 1, 2019

தவறு யார் பக்கம் ஜொமேட்டோ அல்லது கஸ்டமர்


மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் ஷுக்லா என்பவர் ஜொமேட்டோ செயலி மூலம் உணவை ஆர்டர் செய்தார். அந்த உணவை இந்து மதத்தை சார்ந்தவர் டெலிவரி செய்யாததால் அது தனக்கு தேவை இல்லை என்று சொல்லி உணவை வாங்க மறுத்து கேன்சல் செய்து இருக்கிறார்.இதை  அவர் ஜொமேட்டோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு பக்கத்தில் டேக் செய்து அந்தப் பதிவில் தமக்கு பணம் திரும்பத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.


அவர் அப்படி உணவை வாங்க மறுத்தற்கு காரணம் இது 'ஸ்ராவனா' மாதம் என்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உணவு விநியோகிக்கக் கூடாது என்று சொல்கிறார்


அந்தப் பதிவை பகிர்ந்த ஜொமேட்டோ நிறுவனம், "உணவுக்கு மதம் கிடையாது; உணவு ஒரு மதம்," என்று தெரிவித்திருந்தது

அதோடுமட்டுமல்லாமல் "இந்தியாவின் மதிப்பீடு மீதும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகள் (உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள்) ஆகியோரின் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் விழுமியங்களை இழந்துவிட்டு எங்களுக்கு கிடைக்கும் லாபத்தை இழப்பதில் எங்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை," என்று சொமேட்டோ நிறுவனர் திபீந்தர் கோயல் தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இது இப்போது இந்தியாவில் மிக ட்ரெண்டாகி பலராலும் விவாவதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது உடனே  வழக்கம் போல இந்துத்துவா ஆட்கள் அந்த கம்பெணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கம்பெனியின் செய்லியை டெலீட் செய்து கொண்டிருக்கிறார்கள் .


இந்த நிகழ்வில் யார் மீது தவறு என்று பார்ப்போம்..


முதலில் இந்த நிறுவனம் இந்த நிகழ்வை கையாண்ட விதம் சரியில்லை என்பது எனது கருத்து...

ஜொமேட்டோ நிறுவனம், "உணவுக்கு மதம் கிடையாது; உணவு ஒரு மதம்," என்று பதில் சொல்லியது தவறு ஒவ்வொரு மதமும் தங்களின் உணவு முறைகளில் சில நெறிமுறைகளை வகுத்து அதனை பின்பற்றி வருகின்றன. இஸ்லாமியர்கள் ஹாலல் இறைச்சியைத்தான் சாப்பிடுவார்கள். அது போல பன்றி இறைச்சியை சாப்பிடமாட்டார்கள்...யூத இனமக்கள் கோசர் உணவுவகைகளை மட்டும் சாப்பீடுவார்கள். புத்தமதத்தை சார்ந்தவர்கள் இறைச்சி ஏதும் சாப்பிடமாட்டார். அது போல இந்தியாவில் உள்ள இந்துக்களில் ஒரு சில பிரிவினர் இறைச்சியை சாப்பிடுவதில்லை... ஒரு சிலர் இறைச்சியை சாப்பிட்டாலும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை, இப்படி ஒவ்வொரு மதமும்  உணவு பழக்க வழக்கத்தில் ஒரு வித நெறிமுறைகளை பயன்படுத்துவதால் ஜொமோட்டோ நிறுவனம் உணவுக்கு மதம் கிடையாது; உணவு ஒரு மதம், என்று சொல்லுவது எல்லா மத பழக்க வழக்கங்களையும் அலட்சியபடுத்துவதாக இருக்கிறது.. அது தவறு


அடுத்தாக அந்த உணவை ஆர்டர் செய்தவர் உணவை ஆர்டர் செய்யும் போதே  அதை உறுதி செய்துவிட்டு அதன் பின் ஆர்டர் செய்து இருக்க வேண்டும் அந்த உறுதியை அந்த நிறுவனம் பின்பற்றாத நிலையில் உணவை ஏற்க மறுக்கலாம் அது மிகவும் நியாயமானது


ஆனால்  இந்த அமித் ஷுக்லா என்பவர் முழு லூசாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. இவரை பொறுத்தவரையில் அந்த உணவை யார் தாயரித்து இருந்தாலும் பாராவாயில்லை ஏன் இஸ்லாமியராக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அதை இந்து மதத்தை சார்ந்தவர் கொண்டு வந்து இருந்தால் அதை சாப்பிட்டு இருப்பார் ஆனால் இஸ்லாம் மதத்தில் இருப்பவர் டெலவரி செய்ததுதான் அவரை பொருத்தவரை தவ்று இங்கேதான் இந்துத்துவா கொண்டை வெளியே தெரிகிறது


இங்கே வந்து எனது பதிவை படிக்கும் பலருக்கும் நேரில் சந்தித்து  பழகிய அனைவருக்கும் என் மனைவி பிராமன குடுமப்த்தில் இருந்து வந்தவர் என்றும் நான் வேரு மதத்தை சார்ந்தவன் என்று தெரியும்..எனது மனைவியின் பெற்றோரகள் இன்னும் பூஜை புனஸ்காரத்தில் நம்பிக்கை உள்லவர்கள்தான் அவர்கல் எனது வீட்டிற்கு வந்து தங்கி இருக்கும் இன்று அமாவசை அல்லது திதி அதுஎன்று சொல்லி அன்று செய்யவேண்டியைதை செய்வார்கள் அவர்களின் பூஜைக்கு தேவையானதை நான் வாங்கி தருவேன் அதுமட்டுமல்ல அன்று நான் வேலைக்கு சென்றுவிட்டால் அவர்களே அவர்களுக்கு வேண்டிய உணவுவகைகளை தயாரித்து கொளாவர்கள் ஒரு வேளை நான் வீட்டில் இருந்தால் குளித்துவிட்டு அதன் பின் சமையுங்கல் என்று சொல்லுவார்கள் அவர்களின் விருப்பப்படியே நானும் செய்து தருவேன்.. இதுநாள் வரை எந்த வித மதப் பிரச்சனைகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்  கடவுளும் எங்களை தன்டித்தது இல்லை..


வாழ நினைத்தால் இனிமையாக வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம் இல்லையென்றால் மதம் பெயரில் அடித்து கொண்டு சாவலாம்



    இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு,,,,,,,
    திரைப்படம்: பாரத விலாஸ்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா,
    எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல். ராகவன்
    இயற்றியவர்: வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1973



    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    எல்லா மக்களும் என் உறவு
    எல்லோர் மொழியும் என் பேச்சு
    திசை தொழும் துருக்கர் என் தோழர்

    திசை தொழும் துருக்கர் என் தோழர்
    தேவன் இயேசுவும் என் கடவுள்

    எல்லா மதமும் என் மதமே
    எதுவும் எனக்கு சம்மதமே
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்

    கங்கை பாயும் வங்கம் செந்நெல்
    கதிர்கள் சாயும் தமிழகம்
    தங்கம் விளையும் கன்னடம்
    நல் தென்னை வளரும் கேரளம்

    ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
    ராஜஸ்தான் பாஞ்சாலமும்
    சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
    அன்னை பூமி பாரதம்

    இந்திய நாடு என் வீடு
    இந்தியன் என்பது என் பேரு
    ரகுபதி ராகவ ராஜாராம்
    பதீத பாவன சீதாராம்

    இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
    இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
    சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
    குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ

    சல் மோகனரங்கா பாடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ

    ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
    தரிசனம் பண்ண வாருங்கோ
    கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
    கடற்கரை உண்டு பாருங்கோ

    சல் மோகனரங்கா பாடுங்கோ
    சல் மோகனரங்கா பாடுங்கோ

    ஏனு ஸ்வாமி இல்லி நோடு
    எங்க ஊரு மைசூரு
    காவிரி பிரிந்த கன்னட நாட்டை
    யாவரும் போற்றி சொல்வாரு
    ஏனு ஸ்வாமி இல்லி நோடு
    எங்க ஊரு மைசூரு

    ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
    நோடு ஸ்வாமி நீ நோடு
    நீ நோடு மைசூரு
    எல்லா மொழியும் எல்லா இனமும்
    ஒண்ணு கலந்தது பெங்களூரு

    ஏனு ஸ்வாமி
    ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு

    படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
    அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
    ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
    கேரளம் திருச்சூர் ஜில்லா
    தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
    இவ்விட பாக்கணும் நீங்க
    தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
    வெள்ளையன் வந்தான் வாங்க

    படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
    அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
    அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா

    சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
    பஞ்சாப்வாலா கீத்து சுனோ
    பஞ்சாப்வாலா கீத்து சுனோ
    தங்கக் கலசம் பொற்கோவில்
    எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
    ஆஹா தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ
    உய்யாஹு தேக்கோ தேக்கோ

    ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
    கோலம் காண ஆவோ ஆவோ
    ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ

    பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
    பகத்சிங் பிறந்த பொன்னாடு
    பகத்சிங் பிறந்த பொன்னாடு
    யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
    யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
    யாஹூங் யாஹூங்

    எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
    எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
    எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
    வாழை வழியாக வந்து
    பேசிப் பழகும் கிள்ளைகள்

    சத்தியம் எங்கள் தேசம்
    சமத்துவம் எங்கள் கீதம்
    வருவதைப் பகிர்ந்து உண்போம்
    வந்தே மாதரம் என்போம்

    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்
    வந்தே மாதரம் வந்தே மாதரம்

அன்புடன்
மதுரைத்தமிழன்
    

4 comments:

  1. மதம் பிடித்த மனங்கள்.

    ReplyDelete
  2. என்ன இது இப்படியுமா?

    மதம் வெறி மனிதனை 'மதம்' பிடிக்க வைக்கிறது! என்ன சொல்ல...வெட்கக் கேடு

    கீதா

    ReplyDelete
  3. சரியா எழுதியிருக்கீங்க. எனக்கென்னவோ அந்த கஸ்டமர் ஹிப்போக்ரேட்டாகத் தெரிந்தார். அவர் சொன்ன காரணம் அபத்தத்தின் உச்சம். சொமட்டோ இதனை உடனே விளம்பரத்துக்கு உபயோகப்படுத்தியமாதிரியும் எண்ணினேன்

    ReplyDelete
  4. உணவுக்கு ஏன் இப்படி அடித்துக்கொள்ள வேண்டும் .... எல்லோரும் ஒரே காற்றைதானே சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்? முட்டாள் மனிதர்கள்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.