Monday, August 19, 2019

போராடுவோம் போராடுவோம் டெல்லி சென்று போராடுவோம்

தமிழக பிரச்சனையெல்லாம் போராடி தீர்த்த தளபதி டில்லியில் போய் காஷ்மீருக்காக போராட செல்லுகிறாம். தோழிஸ் அவரை வாழ்த்தி அனுப்பி வையுங்க... டெல்லியில் போராட்டம் பண்ணிய பின்பு பாகிஸ்தான் அதன் பின் அப்படியே சீனா போய் போராட்டம் பண்ணிட்டு அப்படியே லண்டனுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு அதன் பின் சர்வதேச போராட்டங்களில் ஈடுபட போகிறாராம்.


ஹேய் ஆமாம் எல்லோரும் எதுக்கு சிரிக்கிறீங்க. நான் என்ன ஜோக்கா அடிச்சேன்.....
எப்படி மத்திய அரசு மாநில அரசின் கல்விக் கொள்கையில் தலையிடக் கூடாது என்று சொல்லி எதிர்க்கிறோமோ அது போல மாநில அரசுகளும் மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் தலையிடக் கூடாது

I O K = INDIAN OCCUPIED KASHMIR

P O K = PAKISTAN OCCUPIED KASHMIR

C O K = CHINA OCCUPIED KASHMIR

காஷ்மீருக்கான முழுக்கதை இவ்வளவுதான். மூன்று வலுவான தேசங்கள் தங்களின் பலத்திற்கேற்ப கஷ்மீரை கூறு போட்டுள்ளன.

அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. மத்திய அரசு எடுக்கும் முடிவுகளால் ஒட்டு மொத்த நாடுமே பாதிக்கப்படும் என்றால் அதை எதிர்த்து மாநில அரசோ கட்சிகளோ குரல் கொடுப்பதில் தவறில்லை. தமிழகத்தை பொருத்தவரை இப்போதுள்ள அரசு பாஜகவை எதிர்த்து வாயை திறக்கப்போவதில்லை. ஆகவே முக்கிய எதிர்க்கட்சியான திமுக தான் இதை முன்னின்று செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீர் விஷயத்தில் நான் மோடி பக்கம்தான்.குரல் கொடுத்தவர்கள் தங்கள் குரலை இப்போது மாற்றிக் கொண்டார்கள் கவனீத்திர்களா?

      Delete
  2. ஹா... ஹா...
    தளபதிக்கு இங்க் போரடிச்சிருச்சாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எத்தனை நாளுதான் திராவிடத்திற்காக குரல் கொடுப்பது அதனால்தான் தேசியத்திற்காக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் போல

      Delete
  3. 370 சட்டப்பிரிவை நீக்குவதால் மட்டுமே எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. பார்க்கப்போனால் எதிர்மறை விளைவுகள் வேண்டுமானால் ஏற்படலாம். மோடியும் அமித்ஷாவும் தங்களது சூரத்தனத்தை காட்டுவதற்காகவே இதை செய்துள்ளார்கள். அனைத்தும் நாடகமே. தனது பங்கிற்கு தி.மு.க வும் தனது இருப்பை காட்டிக்கொள்ளுகிறது. அனைத்தும் விளம்பரத்திற்கு மட்டுமே. எதிர்விளைவுகள் எவையேனும் ஏற்பட்டு நாட்டின் அமைதிக்கு பங்கம் விளையாமல் இருந்தால் சரி. சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்லுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. என்னை பொறுத்தவரை அங்குள்ள மக்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலமக்கள் போல சுதந்திரமாக செயல்பட வழி செய்யவேண்டும் தனிப்பட்ட தாக்குதல் மத ரீதியான தாக்குதல் தொடர்ந்தால் அப்போது நிச்சய்ம அவர்களுக்காக குரல் தர வேண்டும்

      Delete
  4. சரியான பதிவுதான். பொதுவா மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் அவங்க அவங்க கட்சி எம்.பிக்கள் இருக்காங்களே. இவங்க நமக்கு மறைவா பாஜகவோட கால்ல விழுறாங்க, பிறகு எதிர்ப்பு தெரிவிக்கற மாதிரி நடிக்கறாங்க, ராஜபக்‌ஷே விஷயத்தில் செய்ததைப்போல

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.