உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, August 11, 2017

அடபாவிங்களா? பன்னீர் செல்வமும் எடப்பாடியும் இப்படியா செய்வாங்க?

#modi @avargalunmaigal
அடபாவிங்களா? பன்னீர் செல்வமும் எடப்பாடியும் இப்படியா செய்வாங்க?

என்னது பன்னீர் செல்வமும் எடப்பாடியும் நடத்திய பேச்சு வார்த்தையில் மோடியை அதிமுகவின் பொது செயலாளராக  ஒரு மனதாக தேர்ந்தெடுத்துவிட்டார்களா?


செய்தி :சென்னையில் இன்று (ஆக., 10 )முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் நியமனம் செல்லாது என அறிவித்துள்ளனர்.இந்நிலையில் பன்னீர் அணியை சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சசிகலா பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிஇருந்தார்.


இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. உட்கட்சி பிரச்னை தொடர்ந்து நிலுவையில் இருப்பதால் பொது செயலாளர் பற்றி இதுவரை தீர்மானிக்க வில்லை என என தெரிவித்துள்ளது.

ஆனால்  அ.தி.மு.க., பொது செயலாளராக மோடி நியமனம் செய்யப்பட்டால் அதை அடுத்த நொடியே  அங்கீகரிக்க  தேர்தல் ஆணையம்  ரெடியாக உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் சொன்னாலும் சொல்லும் போல இருக்குதே


பேசாமல் இந்திய தேர்தல் ஆணையம் என்பதை மோடி ஆணையம் என்று மாற்றிவிடலாமே

இந்திய தேசத்தின் மீது அல்லது தமிழகத்தின் மீது நீங்கள் உண்மையான பற்று உள்ளவர்கள் என்றால் நமக்கு பிடித்த தலைவர்கள் துரோகம் செய்தால் அதை கடுமையாக விமர்சியுங்கள்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments :

 1. துரோகங்கள் சூழ் உலகு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ராஜி

   Delete
 2. ஹா ஹா ஹா சொல்லமுடியாது வாய்ப்பும் வந்துவிடலாம் எல்லாவிதமான சர்க்ஸையும் பார்க்க பார்வையாளராய் பார்க்க மக்கள் இருக்கும் வரை

  ReplyDelete
  Replies
  1. எல்லா கூத்தையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் மோடி அரசு தலைவர்களை மிரட்டி வழிக்கு கொண்டு வரலாம் ஆனால் மக்களை மிரட்டி வழிக்கு கொண்டு வர முடியாது தேர்தல் வரட்டும் அப்போதுதான் இருக்கிறது உண்மையான சர்க்கஸ்...

   Delete
 3. எதுவும் நடக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. எதுவும் நடக்கலாம்தான்

   Delete
 4. மோடிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏதாவது ஒருவகையில் அவர் பெயரை இழுத்து விடவேண்டும்! அவரை எப்படி அதிமுக பொதுச் செயலாளர் ஆக்க முடியும்?

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் மோடிக்கும் தமிழகத்தில் நடக்க்கும் சம்பவங்களுக்கும் ஒன்று தொடர்பு இல்லை என்று நினைத்தால் பூனை கண்னை மூடிக் கொண்டு உலகம் இருண்டு போயிடுத்து என்று நினைப்பது போலத்தான் இருக்கிறது


   மோடி எப்படி அதிமுக பொது செயலாளர் ஆக முடியும் என்று கேட்டு இருக்கீங்க.... நான் பகடியாக சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா என்ன?

   Delete
 5. மோடி அவர்களை அவ்வளவு சீப்பாக எடை போடவேண்டாம். தேவைப்பட்டால் தமிழிசை அல்லது எச்.ராஜாவை வேண்டுமானால் அ.தி.மு.க. பொதுசெயலாளராக நியமித்து விடலாம். தேர்தல் ஆணையம் உடனே அதை அங்கீகரிக்கும்!!! இரட்டை இலையை உடனே கொடுத்துவிடும்!!! அதை எப்போதுவேண்டுமானாலும் தாமரையாக மாற்றிக்கொள்ளலாம்!!!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா இதை சத்தம் போட்டு சொல்லாதீங்க மோடி காதிற்குள் விழுந்தால் அதை செயல்படுத்திவிடுவார்

   Delete
 6. ஹாஹா.... நல்ல கற்பனை. நடந்தாலும் நடக்கலாம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

  ReplyDelete
 7. ஏற்கனவே தாமரைக்கு அடியில் இலை இருப்பதை
  காணலையோ.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog