உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, December 9, 2016

ஏன்டா அமெரிக்காவிற்கு வந்து இப்படி கஷ்டப்படனும்!ஏன்டா அமெரிக்காவிற்கு வந்து இப்படி கஷ்டப்படனும்!

நான் இந்தியாவில் வசித்த போது அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரும் 100 200 அல்லது அதிகபட்சமாக 500 ரூபாயை நோட்டை பர்ஸில் வைத்து செல்லுவார்கள் ஆனால் இப்போதைய இந்தியாவில் மக்கள் கண்டெய்ணர்களிள் கோடிக் கணக்கில் பணத்தை எடுத்து செல்லுகிறார்கள் என கேள்விப்படும் போது ஏன்டா அமெரிக்கா வந்து இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என தோன்றுகிறது.


மேலும் இந்தியாவில் வசிக்கும் பல மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்திய வங்கியில் போட்டு அங்கே இடம் இல்லாமால் சுவிஸ் அமெரிக்கா போன்ற மேலை நாட்டு பேங்குகளில் போட்டு வைக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல் இந்திய பிரதமர் 100 500 ஆயிரம் என்ற நோட்டை வைத்திருந்து அதை எடுத்து போக கண்டெய்னர் பயன்படுத்துவதால் டிராபிக் ஜாம் அடிக்கடி ஏற்படுகிறது என்று அவர்கள் வசதிக்காக 2000 ரூபாய் நோட்டை அடித்து தந்து இருக்கிறாராமே  இப்படி மக்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படும் மோடி என்ற தலைவர் தெய்வமாகவே காட்சி அளிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் குடிச்சுவிட்டு கார் ஒட்டி அதை போலீஸ் கண்டுபிடித்துவிட்டால் பல ஆண்டுகள் கம்பி எண்ண வைத்துவிடுவார்கள் ஆனால் இந்தியாவில் குடித்துவிட்டு காரை ஒட்டி யார் மீதாவது ஏற்றிக் கொன்றுவிட்டால் அதிக தண்டனையில்லாமல் வெளியில் வந்துவிடலாமாமே.

மேலும் இந்தியாவில் கோடிக்கணக்கில் வங்கியில் இருந்து கடன் வாங்கி அதை திருப்பி கொடுக்க முடியாவிட்டால் கடன் கவலைப்பட்டு கொண்டு இருக்க கூடாது என்ற நல்ல நோக்கித்தில் வெளிநாடு சென்று வாழ மத்திய அரசு வழி செய்து கொடுக்கிறதாமே. இப்படிபட்ட சொர்க்கம் போல இருக்கும் இந்தியாவைவிட்டு அமெரிக்காவில் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருக்கு.ஹும்ம்ம்ம்ம்ம்ம்

இதையெல்லாம் பார்க்கும் போது பேசாமல் நான் இந்தியா வந்துவிடலாம் என தோன்றுகிறது எங்களை போல உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமையை மோடி எங்களுக்கு மீண்டும் தருவாரா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எனது பதிவுகளை பேஸ்புக்கில் தொடர இங்கே க்ளிக் https://www.facebook.com/avargal.unmaigal  செய்யுங்கள்

கடந்த் ஒரு வாரகாலமாக எனது பதிவுகளுக்கு பேஸ்புக்கில் அதிக லைக்ஸ் இட்டு மேலும் அதிக அளவில் ஷேர் செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்

12 comments :


 1. ஆஹா ஆசை தோசை
  அப்பளம் வடை
  பொறுங்கள் இங்கிருக்கும் நாங்கள்
  செட்டிலாகி கொள்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எல்லாம் நன்றாக செட்டில் ஆனதை பார்த்துதானே எனக்கு அங்கு வரும் ஆசை வந்திருக்கிறது.. கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்

   Delete
 2. அதானே .... பேசாமல் நீங்கள் இங்கு வந்து விடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இருக்கிற பக்கம் ஒரு நல்ல காமிராவோட வந்து செட்டில் ஆகிடலாம் என நினைக்கிறேன் அப்பதான் நீங்க போகும் இடம் எல்லாம் நானும் வந்து அழகாக போட்டு எடுத்து போட்டு இந்த அமெரிக்கர்களை வெறுப்பு ஏற்றலாம்

   Delete
 3. ஹஹஹஹ்ஹ் பரவாயில்லை இப்ப கூட டூ லேட் இல்ல மூட்டைய கட்டுங்க இந்தியாவுக்கு!!!!ஆனா ஒன்னெ ஒன்னு வரும் போது சில்லறை வைச்சுக்கோங்க... ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. மூட்டையை கட்டுகிட்டு வருகிற அளவிற்கு எல்லாம் வசதி இல்லை நாங்கள் எல்லாம் நாடோடிகள்தான் உடுத்தின துணிகளோடுதான் வர முடியும்

   Delete
 4. வரும் போது மல்லையாவையும் கூட்டிட்டு வாங்க :)

  ReplyDelete
  Replies
  1. மல்லையாவை கூட்டிகிட்டு வருகிறதுக்கு பதிலாக அவரை சுற்றி இருக்கிற குட்டிகளை கூட்டிகிட்டு வந்தால் அனுமதி எனக்கு தர்மாட்டீர்களா என்ன?

   Delete
  2. வீட்டிலே அனுமதி கிடைக்குமா என்று பார்த்துக் கொள்ளுங்கள் :)

   Delete
 5. அமெரிக்காவில் வசித்தாலும் இந்தியா பற்றியே நினைக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog